Friday, June 10, 2016

தினம் ஒரு தகவல் 10-06-2016 வெள்ளி

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள் மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
 அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:



இன்று நாம் பேச உள்ள விஷயம்.
கிரகங்களும் அதன் அம்சங்களும்
  

ஒன்பது கோள்களும் அதன் தன்மைகளும்,சிறப்புகளும் பற்றி பேச உள்ளோம். இன்று அசுரகுரு என்ற அழைக்கப்படுகிற சுக்ர பகவானைப் பற்றிப் பார்ப்போம்.

கிரகங்களும் அதன் அம்சங்களும்
கிரகம்      : சுக்ரன்
ஜாதி       :பிராமணர்
வடிவம்    :சமன்  
குணம்     : சுபர்     
லிங்கம்    : பெண்    
பாஷை    : தெலுங்கு, சமஸ்கிருதம்
சுவை     : தித்திப்பு (இனிப்பு)  
நிறம்      : வெள்ளை 
உலோகம்  : வெள்ளி
ரத்தினம்   : வைரம்
வாகனம்   : கருடன் 
வஸ்திரம்  : வெண்பட்டு
புஷ்பம்    : வெந்தாமரை
சமித்து    : அத்தி
தானியம்  : மொச்சை
திக்கு     : கிழக்கு
தேவதை  : லக்ஷ்மி
ராசி      :  ரிஷபம்,துலாம்
பிணி     : சிலேத்துமம்
ஸ்ரீசுக்ர காயத்திரி
ஓம் அஸ்வ்த் வஜாய வித்மஹே!
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்.

சுக்ரனின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம்.  மீண்டும்
நாளை சந்திப்போம்……


No comments:

Post a Comment