Thursday, February 6, 2025

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?

 

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?














*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.*🌷🙏
இன்றைய தினம் *தெரிந்த கதை தெரியுமா விடை* பகுதியில் *ஜாதகம் சிறப்பு ஆய்வில்* இந்த ஜாதகர் கடந்த வாரம் (24/01/2025 வெள்ளிக்கிழமை அன்று) அமெரிக்காவுக்கு சென்றார்.

*இவரது அமெரிக்க விமானப் பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?*

என்பதுதான் சிறப்பு ஆய்வின் கேள்வி.


இவரது ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாதகர் S.ஷண்முகானந்தம்

இவரது வயது 66

*லக்னம் மிதுனம்*
*ராசி கன்னி*
*நட்சத்திரம் ஹஸ்தம் 4ம் பாதம்*

தற்போது இவருக்கு நடப்பு *புதன் தசா/சுக்ர புக்தி*

*31/01/2025 முதல் சூரியன் புக்தி






22/01/2025 புதன் கிழமை அன்று அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்டார்.
உங்கள் ஆய்வுக்காக
*அன்றைய தினம் கிரகங்களின் கோட்சாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.*

*அன்றைய தினம் கிரகங்களின் கோட்சாரம்*

*
அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்ட நாள்*
*22/01/2025 to 24/01/2025 புதன் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை*


*அமெரிக்கா வந்து சேர்ந்த நாள்* *25/01/2026 வெள்ளிக்கிழமை*
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15Am.

அமெரிக்கா நேரப்படி 24/01/2025 வியாழக்கிழமை மாலை 4.45pm.(washington Airport)



                 *Washington Airport ல்*👆



*மூளைக்கு வேலை*

உங்கள் ஜோதிட அறிவையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் பகுதி இது.

தட்டிவிடுங்கள்! உங்கள் பொறியை...
கண்டு பிடியுங்கள்! புதிரின் விடையை...
எழுதுங்கள்! உங்கள் பதிலை....

தொடரட்டும்! உங்கள் ஜோதிட பயணம்.....

*வாழ்த்துக்கள்!*

*துணிவே துணை!* *வெற்றி நமதே!!*

*கோள்களின் கோலாட்டம்!*
*வாழ்வின் கொண்டாட்டம்!*அல்லது *திண்டாட்டம்!*


நீங்கள் தேர்வு செய்த இந்த ஜோதிடத் துறை உங்கள் விருப்பத்திற்குட்பட்டது.

அதில் குறைந்த பட்ச அளவாவது நாம் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் அல்லவா?
வாய்ப்பு எப்போதும் கிடைக்காது.
*காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.*

*கற்றது கையளவு.*
*கல்லாதது உலகளவு*
என்ற ஔவைப்பாட்டியின் முதுமொழிக்கு ஏற்ப *புதியன கற்போம்!*

நீங்கள் கற்ற
ஜோதிட ஞானத்தைப்பட்டைத் தீட்டிக் கொள்ளவும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பாக இந்த அறிவு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக்கனியை பறித்திடுங்கள்.

*வாழ்த்துக்கள்!*

நன்றி வணக்கம்!🙏

*ஸ்ரீமால் சிந்தைக்கூரியன்* *
*திரு.ஷண்முகானந்தம்*
*பொள்ளாச்சி*


குழு அன்பர்களின் பதிவு




அனைவருக்கும் காலை வணக்கம். ஜோதிட குருமாராகிய திருவாளர் சன்முகாநந்தம் ஐயா அவர்கள் பதிவுசெய்த ஜாதகத்தில்  அமெரிக்கா சென்றிருந்த காரனம் பற்றிய ஓர் ஆய்வு செய்தது. இது சரியாக உள்ளதா என தெரிவிக்கவேண்டுகிறேன்
நன்றி.
வணக்கம்
கா. முனியாண்டி
சிவகாசி🙏🙏🙏🙏










Ok. பலன்கள் சரியாக இருக்கிறது சார்.

விமான பயணம் மேற்கொள்ள கிரக ரீதியான காரணம் என்ன? என்பதையும் கூறவும்.
நன்றி

வணக்கம் சார்.
மேற்கன்டஜாதகர் விமானபயனம் மேற்கொண்ட காரனம்.
லக்னம்  நான்காம் அதிபதி புதன்  ஐந்தில் பூர்வீக புண்ணிய புத்திரயோகஸ்தானத்தில் அமர்ந்து  சாரம் தந்தவர் சனிபகவான்  ருணரோகஸ்தானாதிபதி சாரம் பெற்று பனிரன்டில் இருப்பதால்
உடல் ஆரோக்கயம் பாதிப்புஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு விமானத்தில் பயனம் செய்திருக்கலாம்..

சந்திரன் மனோகாரகன். ஐந்தில் விருச்சிக ராசியில் பயனம். ராகு சாரத்தில் இருப்பதால்  மனோதிடம்  சளி ஆஸ்துமா சைனஸ் பிரச்னை இருந்து  இருக்கலாம்.
குரு/ புதன்
குரு குழந்தைகுறிக்ககூடிய கிரகம்.
புதன் தாய்மமான் குறிக்கும் கிரகம். நரம்புமண்டலம் குறிக்கும்.
நான்காம் அதிபதி ஐந்தில். ஐந்தாம் அதிபதி நான்கில் பரிவர்தனை. குழந்தைசார்ந்தவிசயத்திற்கு மருத்துவசிகிச்சைக்காக அந்நியதேசம் சென்றிருக்கலாம்.
விருச்சிகம்  காற்றுராசி.
காற்றுக்கானகிரகம் புதன்.  நான்காமிடம் வண்டி வாகனம். சுக்ரன் காரகர். விமானதில்  பயனம். ஐந்தாமிடம் பூர்வீகம். பனிரன்டாமிடம் அந்நியதேசம்  
நன்றி வணக்கம்
கா. முனியாண்டி
சிவகாசி🙏🙏🙏


சார் ஒரு தவறு. புதனுக்கு சாரம் தந்தவர் செவ்வாய் என திருத்தி வாசிக்கவும்.
கிரகநிலை சந்திரன் துலாம் ராசியில்  பயனம் எனதிருத்திக்கொள்ளவும்.

அடுத்து தொடகூடியகிரகம்  சனி பகவான்.

  பாவகம் ரோகஸ்தானம்  ஆதலால்  நோய்சம்பந்தமான சிகிச்சை இருக்கலாம்.
நன்றி வணக்கம்

குருஜிக்கு வணக்கம்.

காலபுருஷ தத்துவம்
மிதுனலக்னம். லக்னம் நின்றநட்சதிர அதிபதி செவ்வாய்  பனிரன்டில்.
ஆறு/பதினொன்று அதிபதி.
ருணரோகசத்ரு அதுசார்ந்த லாபம்.

லக்னாதிபதி புதன்
பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் குருபகவானுடன்

குரு  புதன் மந்திர உபதேசம் ஆன்மிகம் ஜோதிடம் கல்வி வழிகாட்டுதல் அறிவுரை செய்தல்.
காலசக்ரதிற்கு  பாக்கியாதிபதி ஐந்தில்  சேவை தானதர்மம் அறிவுரை கூறுதல்.
ராசி கன்னிகா ராசி. அஸ்தம் நான்காம் பாதம்.
காலசக்கரத்திற்கு நான்காம் பாவகம்  கல்வி.
லக்னதிற்கு இரன்டாம் அதிபதி நான்கில். வாக்கு ஸ்தானம்  / பேச்சாற்றல் மூலம் வருமானம்.
நான்கில் சுக்ரன்  சூரியன் சந்திரன் ராகு.
சுக்ரன் அழகு கவர்ச்சி சுகபோக வாழ்க்கை வசதியான வீடு.
சூரியன் நிர்வாகம் தலைமை பண்பு அதிகாரம்.
சந்திரன் பயனம்  எப்போதும் இயங்குகின்றதன்மை.
ராகு பிரமான்ட வீடு மனை வாகனம்.
நான்கில் சூரியன்  நின்றது செவ்வாய் சாரம் செவ்வாய் பனிரன்டில்  .   தன் இருப்பிடம் விட்டு வெளிநாடு தொடர்பு குடியிருத்தல்..
நான்கில் சந்திரன்  சுயசாரம். பெறுவதால் சந்திரன் வேலையை புதன் தருவார்.
சந்திரன் இரன்டாம் அதிபதி யாவார்.
புதன் ஐந்தில் கலை  புத்தி ஞானம் சார்ந்த பாவகத்தில் உள்ளார்.
ஆக ஜோதிடகலை சார்ந்த வகையில் வருமானம்.
நான்கில் ராகு. பனிரன்டில் செவ்வாய்.
கல்வி வீடு வண்டி வாகனம் பிரமான்டம்.
ஐந்தாம் அதிபதி சுக்ரன் நான்கில். இரன்டாம் அதிபதி சந்திரன் சாரம்.
குழந்தை குடும்பம் குடும்ப உறுப்பினர்கள்    அனைவரும் தன்இருப்பிடத்திற்கு வெளிநாடுபயனம்.
ஐந்து நான்கு. நான்கு ஐந்து பரிவர்த்தனை
வெளிநாடு செல்லலாம். தாயகத்திற்கு திரும்பலாம்.
  ஆறாம் பாவகத்தில்  அட்டமாதிபதி பாக்கியாதிபதிசனி அமர்ந்து புதன் சாரம் பெற்று புதன் ஐந்தில் இருப்பதால்      நோய்கானகிரகம்  அட்டமாதிபதி சனி பகவான் புதன்சாரம் பெற்று புதன் ஐந்தில் இருப்பதால்  உடல் ஆரோக்யம் சார்ந்த பிரச்னை இருக்கலாம்.
ஆறாம் அதிபதி செவ்வாய் பனிரன்டில் சூரியன்சாரம் சூரியன் நான்கில். நோய்   அதிகநோய் சுகம் கெடும் விரையம் ஏற்படும்.
ஏழாம் அதிபதி குரு ஐந்தில் ராகுசாரம் ராகு நான்கில். நன்பர்கள் கூட்டாளிகள் வாடிக்கையாளர் மூலம்  தொழில் வருமானம் அதுசார்ந்த சுகம்.
தற்போது ஐந்தில் புதன் தசா. சுக்ரன் நான்கில்  இரன்டாம் அதிபதி நான்கில். 
பாதிக்கபடும் பாவகங்கள் 
ஐந்தாம் பாவகம்.
ஒன்பதாம் பாவகம் 
பதினோன்றாம் பாவகம்   பாதிக்கபடுகிறது.
ஐந்தில் புதன்/குரு  
பாக்கியாதிபதி  பித்திரு ஸ்தானம்
லட்சியம் எண்ணங்கள்  பாதிக்கபடுகிறது.
கிரக கோட்சாரத்தில் சூரியன் தந்தைக்கு காரககிரகம் லக்னத்தில்.
சுக்ரன் பாக்கியஸ்தானத்தில் விரையாதிபதி இருப்பதால்
தந்தைக்கு  விரையமாக இருக்கலாம்.
நன்றி

சுக்கிரன் யுவராஜா

குரு வணக்கம்🙏

தங்களுடைய ஜாதகத்தில் நடப்பது புதன் தசா, சுக்கிர புக்தி. தங்களுக்கு இந்த சுக்கிர புக்தியில் வெளிநாட்டு பயணம் ஏற்பட்டதற்கான காரணங்கள்:-

முதலில் புதன் தசா. லக்னம் மற்றும் நான்காம் அதிபதி புதன் ஐந்தில் அமர்ந்து அவர் ராகுவால் கிரகணம் அடைந்தாலும் பரிவர்த்தனை மற்றும் குரு சுக்கிர தொடர்பில் அந்த கிரகணம் ரத்தாகிறது. ஐந்தில் அமர்ந்த புதன் ஜாதகருக்கு நல்ல புத்தி, ஜோதிட ஞானம் போன்றவற்றை கொடுத்திருப்பார்.

ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு லக்கனாதிபதியாக அங்கே அமரும்பொழுது ஜாதகர் கலை இசை இலக்கியங்களில் அதீத ஈடுபாடு உடையவராய் இருப்பார். அதே சமயம் நான்காம் அதிபதியாய் அங்கே அமரும்பொழுது சுகம் மேம்படும். வீடு, வண்டி, வாகன யோக அமைப்புகள் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும் ஐந்தாம் பாவகத்திற்கு நான்காம் பாவகம் விரைய பாவகம். அந்த வகையில் குழந்தைகளுக்குச் செலவு செய்யும் நிலை, பூர்வீகத்தை விட்டு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.

அந்தப் பூர்வீகத்தை விட்டு செல்லும் நிலையை புக்தி நாதன் சுக்கிரன் செயல்படுத்தினார்.

அவர் அங்கு நீசம் மற்றும் அஸ்தங்கம் மற்றும் கிரகணம் ஆனாலும் பரிவர்த்தனை மற்றும் குரு தொடர்பால் அவை ரத்தாகின.

இருந்தாலும் தான் நலிவுற்ற பலனை முதலில் ஜாதகருக்கு கொடுத்திருப்பார். சுகர் சம்பந்தமான உபாதைகள், சிறுநீர் பிரச்சனைகள், மனைவியின் தேக நலன் பாதிக்கப்படல் போன்றவை ஏற்பட்டிருக்கும்.

ஆதிபத்திய ரீதியாக நான்காம் பாவகத்தை பலப்படுத்தி ஐந்தாம் பாவகத்திற்கு விரையத்தை ஏற்படுத்திருப்பார்.

மேலும் மற்றொரு பாவகமான பன்னிரண்டாம் பாவகம் அது விரயத்தையும் கொடுக்கும் மற்றும் வெளிநாடு பயண வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஐந்தாம் பாவகத்திற்கு விரைய பாவகம் இயங்கி பூர்வீகத்தை விட்டு செல்லும் நிலை அதனுடன் பனிரெண்டாம் பாவகமும் இயங்கி இந்த வெளிநாட்டு பயணம் ஏற்பட்டது. அதாவது 12 ஆம் அதிபதி நான்கில் அமர்ந்து சுகமான பயணத்தை கொடுத்தார்.

பயணம் செய்த இரண்டு நாட்கள் அன்றைய கோச்சாரத்தில் தசாநாதன் புதன் மீது பயணங்களை குறிக்கும் சந்திரன் பயணப்பட்டார்.

மேலும் புக்திநாதன் சுக்கிரன் லக்னத்திற்கு ஒன்பதில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே நீண்ட தூர பயணம் ஏற்பட்டது.
அவர் லக்னத்திற்கு எட்டில் பயணப்பட்ட பொழுதே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கும்.

மேலும் புக்திநாதன் சுக்கிரனுடன் பிறப்பு கால ஜாதகத்தில் இணைந்தவர்கள் சந்திரன் சூரியன் மற்றும் ராகு. ஆக அவர்களுடைய காரகத்துவமும் இணைந்து வெளிப்பட்டிருக்கும். பயணங்கள், மாற்றங்கள், நிர்வாக திறன், அந்நியர் தொடர்பு போன்றவை ஜாதகர் அனுபவிக்கும் நிலை.

இப்பொழுது சூரிய புக்தி. மூன்றாம் அதிபதி நான்கில். அவர் நிஷ் பலம் மற்றும் கிரகணம் அடைந்திருந்தாலும் குரு சுக்கிர தொடர்பில் அந்த கிரகணம் ரத்து.

ஆதிபத்திய ரீதியாக மூன்றாம் பாவகத்திற்கு வரவு ஸ்தானத்தில் அவர் இருக்கிறார். ஆக  வெளிநாட்டில் சிறு சிறு பயணங்கள், மாற்றங்கள், அண்டை அயலாருடன் நல்லிணக்கம் ஏற்படும். என்னதான் கிரகணம் ரத்து ஆகி இருந்தாலும் முதலில் நிஷ் பலம் மற்றும் கிரகணம் அடைந்த பலனை இந்த சூரியன் செய்வார். அந்த வகையில் தன்னம்பிக்கை சிறிது கெடக்கூடிய நிலை, முதுகுத்தண்டு வட உபாதை போன்றவை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும்.

மிக்க நன்றி குருவே🙏🙏🙏

இவன்
தங்கள் மாணவன்
K. யுவராஜா

வணக்கம் குருவே🙏

என் அறிவுக்கு எட்டியதை நான் இங்கே பதிவிட்டு இருக்கிறேன். தங்கள் ரிசல்ட் வரும் பொழுது நான் செய்த தவறை திருத்திக் கொள்கிறேன் குருவே🙏🙏🙏

திரு ஷண்முகானந்தம்

மிகச் சரியாகவே பலன்கள் எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் பற்றி குறிப்பிடவும்.

குரு வணக்கம்🙏

12 என்பது வெளிநாட்டு பயணம். அதன் அதிபதி சுக்கிரன் நான்கில். நான்கு என்பது சுகம், வாகனங்களை குறிக்கும். நான்கில் அமர்ந்த சுக்கிரன், காரகத்தையும் பாவகத்தையும் இணைக்கும் பொழுது சொகுசு வாகனங்கள். அந்த வகையில் சொகுசு வாகனமான விமானப் பயணம் ஏற்பட்டது.

தசாநாதன் புதன் அமர்ந்திருப்பது காற்று ராசி. நடப்பு புக்திநாதன் சுக்கிரன் தற்பொழுது கோச்சாரத்தில் காற்று ராசியில் ஏரோநாட்டிக்கல் ஸ்பெசலிஸ்ட் ராசியான கும்ப ராசியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆக தங்கள் பிறப்பு கால ஜாதகம், தசா புக்தி, காரக மற்றும் ஆதிபத்திய பலன் மற்றும் கோச்சார நிலை இவையெல்லாம் தங்களுக்கு விமான பயணம் செய்ய நேரிட்டது குருவே🙏🙏🙏

Sorry
*விடுபட்ட பதிவு*

*Sukran*
*Kesavan ramasamy*


புதன் சுக்கிரன் பரிவர்த்தனை
சுக்கிரன் ஆட்சி போல் — லக்கினத்திற்க்கு 5–12 மிடம்
activate .
4 மிட சந்திரன் மேல் கேது கோத்சாரத்தில்
12 மிட செவ்வாய் மேல் குரு

5இல் புதன் உடன் குரு
இருப்பிடதை விட்டு புத்திர் உடன் கடல் தாண்டி வெளிநாடு தற்காலிக பயனம்
சுக்கிரன் 4<5  12 activate


Sukran Srividya Astro

[01/02, 10:21 pm] Sukran Sri Vidhya Astro:

குருவே துணை. புதன் தசா சுக்ர புக்தி .  புதன் சர ராசியில் இருப்பதால் வெளிநாடு செல்வம் வாய்ப்பு கிடைத்தது.

சுக்ரன் நீசம் பெற்று கிரகணம் மற்றும் அஸ் தங்கம் பெற்றுள்ளார். ஆனால் ஸ்தான பலமும் பரிவர்தனைமூலம் பலமும் பெற்றுள்ளார். அவர் சந்திரன் சாரம் பெற்றுள்ளார்.
அவர் களத்திரகாரகன் ஆகையால் மனைவியின் உடல் நலத்தில் திருப்தி யற்ற நிலை 2022 முதல் உண்டாகும்.

கோச்சாரப்படியும் சுக்கிரன் சந்திரன் சூரியன் மீது கேது செல்வதால் மனக்குழப்பம் , உடல் நல பிரச்சனைகள் இதயம் தலை முதுகு பிரச்சனைகள் வீடு வாகனம் மனைவி பணம் சம்பந்தப்பட்ட வகையில் சிக்கன நிலை உண்டாகும்.

12,5 க்குரியவர் சுக ஸ்தானத்தில்  ஆரோக்யம் சம்பந்தமாக விரையமாகும். பரிவர்த்தனை ஆதலால் 
வித்தை புத்தி தொழில் மேம்படும்.  5-4 குழந்தைகளுக்கு விரையம் என்றாலும் கல்வி சம்பந்தப்பட்ட வகையில் லாபமாகும்.

வெளிநாட்டு செல்லும் நேரம் அமைந்த விபரம்.
5 மிடத்து அதிபதி உடன் பூர்விகம் தந்தை காரகன்
சூரியன் உடன் ராகு இணைந்து வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்தினார். கோச்சாரப்படியும் ராசிக்கு 9 ல் குரு அமர்ந்தும்
லக்னத்துக்கு 9 ல் சுக்ரன் அமர்ந்து அது காற்று ராசி ஆகி 9 ம் அதிபதியும் வாயு கிரகமாக அமர்ந்து விட்டதால் விமான பயணம் அமைந்தது.

நன்றி குருவே🙏

[01/02, 10:30 pm] Sukran Sri Vidhya Astro:

சுக்ரன் சந்திரன் சாரம் பெற்று 2022 முதல் பயணம் பற்றி ய சிந்தனைகளை தருகிறார்.

திரு ஷண்முகானந்தம் 
ஒரு சில விஷயத்தைத் தவிர்த்து மற்ற பலன்கள் சரியாகவே கணித்துள்ளீர்கள்.

*வாழ்த்துக்கள்* 👍🌷

*சிறப்பு ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் நாளை வெளிவரும்*


No comments:

Post a Comment