Wednesday, April 29, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 39* 30/04/2020 வியாழன்

*விக்கிரமாதித்தன் கதைகள் - 39*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

 நீதிவேந்தன் கதை - 2

அந்த அந்தணன் நேரே அரண்மனைக்கு வந்தான். தனக்கு நேர்ந்ததை அங்கு முறையிட்டான். மன்னனுக்குச் சினம் வந்தது. இளவரசன் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நினைப்பதா?

அரசன் ஸீவிசாரன் நீதி தவறாத வேந்தன். உடனே ஆணைபிறப்பித்தான்.

" அமைச்சரே இளவரசனை நாடு கடத்துங்கள். ..”

"மன்னா, சற்று பொறுங்கள். இளவரசரை நாடு கடத்தலாமா?”

“அமைச்சரே, எதையும் ஆராயாமல் அவன் அடித்ததால் இளவரசன் என்று அவனைச் சொல்ல முடியுமா? அரசு ஆளும் தகுதி இழந்தவனாகிறான். அறிவுடைய ஒருவன் நஞ்சை உண்பதோ, பாம்புகளுடன் பழகுவதோ கிடையாது. முனிவர்களையும் அந்தணர்களையும் புத்திசாலிகளையும் பகைத்துக் கொள்ள மாட்டான்.

முனிவரின் சாபத்தினால்தான் பரமசிவனுக்குப் பூலோகத்தில் உருவ வழிபாடு இல்லை. எவ்வளவு பெரிய நிலைக்கு நாம் சென்றாலும் பெரியாரை நிந்திக்கலாமா? அவர்களுடைய கோபத்தீ எதிராளியைப் பொசுக்கிவிடும். 

அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். அப்படிப்பட்ட அந்தணன் ஒருவரை அவமரியாதை செய்த ஜயகோனன் கையைத் துண்டாக்குங்கள்” என்றான். அரசன்.

இதுவரை அமைதி காத்த அந்த அந்தணர்  மன்னரிடம் விரைந்து வந்து, "மன்னா, இளவரசனைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.இனிமேல் என்னிடம் நடந்து கொண்டது போல வேறு யாரிடமும் நடந்து கொள்ள மட்டான்.” என்றார்.

அரசன் உடனே, “இளவரசனை விட்டுவிடுங்கள்" என்று கட்டளையிட்டான்.

வேதாளம் கதையை நிறுத்திவிட்டு விக்கிரமாதித்தனிடம் புதிர் போட்டது.

"விக்கிரமாதித்தா, இருவருள் யார் சிறந்தவர்? மன்னனா? அந்தணனா?”

“சந்தேகமில்லாமல், அரசனே சிறந்தவன். நீதிக்காகத் தன் மகனுக்குத் தண்டனை விதித்த அரசனே !

விக்கிரமாதித்தனின் சரியான விடையால் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறித் தொங்கியது.

*************இன்னும் வரும்

Friday, April 24, 2020

பூமிக்கு விடுமுறை 24/04/2020 வெள்ளிக்கிழமை

                           புவிக்கு விடுமுறை


அன்பான கடவுளுக்கு,
       
           மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இது மேலும் தொடர்ந்து நீடித்தால் விலங்குகள்  தாவரங்கள் மற்றும் பிற ஜீவராசிகளும் பாதிக்கப்பட்டு உயிர் வாழ முடியா சூழல் உருவாகும்.
இயற்கை சமன்பாடு சீர்கெடும்.

    ஆகவே இத்தகைய போக்கு தொடராமல் இருக்கவும், இயற்கையை சரி செய்யவும், global warming என்ற நிலையை உருவாக்கவும், அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கவும் எனக்கு தற்காலிகமாக அவசிய ஓய்வு தேவை என்பதால் தாங்கள் எனக்கு குறைந்தது ஒரு 6 மாதங்கள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதி தர பெரிதும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
என்றும்  இறைபணியில்
தங்கள் அன்புள்ள,
ஓய்வறியா பூமி.


அனுமதி வழங்கப்பட்டது

தங்களது நிலைப்பாடு குறித்து மருத்துவக் குழு பரிசிலித்து அளித்த பரிந்துரையின் பேரில்
மறு உத்தரவு வரும்வரை தாங்கள் உடல்நலம் தேறி வர மருத்துவ விடுப்பில் இருக்க அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஊரடங்கு உத்தரவு..... அதுமட்டுமல்ல. நாடு அடங்கிய உத்தரவு.... அத்தோடு அது உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உலக ஊரடங்காக விரைவில் அமல்படுத்தப்படும்.

என்றும் எங்கும்
இப்பகுதியை ஆளும்
இறைவன்!

@@@@@#@@#@##@#@@@@@@@@@@@@@

மருத்துவக்குழுவின் பரிந்துரையும்
மனிதர்களின் தவறான செயல்பாடுகளாலும் இதோ!

ரொம்ப நாளாவே இந்த விஷயத்தை சொல்ல நினைச்சுட்டு இருந்தேன். அது என்னன்னா இதுதான் சமயம்னு  கடவுள் மறுப்பாளர்கள் கொராணா வந்ததம் கடவுள் ஏன் காப்பாத்தல அப்படினு கடவுளையும் கோவிலையும் போட்டு தாக்கி கேலி கிண்டல் பண்ணி பல பதிவுகள் கமெண்ட்ஸ் னு  போடுறத எல்லாத்தையும் இந்த கொஞ்ச நாளா நான் பாத்துட்டு தான் இருந்தேன்.  கடவுள் நம்பிக்கை இருக்கிற சிலர் அதுக்கு பதில் சொல்றேன்னு போய் அடி வாங்குனுதையும் நான் பார்த்தேன், அடி கொடுத்ததையும் பார்த்தேன். ஆனா அவங்க எதையும் ஏற்றுக்கொள்ளல என்பது வேற விஷயம்.


ஆனால்......

அதெல்லாம் சரியான பதில்னு எனக்கே தோணல. சரி எல்லாரும் எங்கெங்க என்ன என்ன சொல்றாங்க, கடவுளையும் கோவிலையும் கேலி கிண்டல் பண்ணி கேள்வி கேட்டு என்னலாம் பதிவுகள் போடுறாங்க கமெண்ட்ஸ் போடுறாங்க அதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் பாத்துட்டு ஒட்டுமொத்தமாக பதில் சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப கொஞ்ச நாளா அவங்க  கேலி கிண்டல் பண்ணி ஓஞ்சி போயிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். அப்படி எந்த பதிவும் இப்ப என் கண்ணுல படலை. அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அத்தனை கிண்டல்களுக்கும் என்னோட பார்வையில ஒரு பதில் சொல்ல நினைக்கிறேன்.

இதோ..

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் இந்த பூமி என்ன மனுஷங்க வாழ்வதற்கு மட்டுமே இருக்கிற இடமா இல்ல படைக்கப்பட்ட இடமா? ?

கடவுள் இந்த பூமிய மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான் படைச்சிருக்காரு. அப்புறம் கடவுள் காப்பாத்தல கடவுள் காப்பாத்தலனா அவருக்கு என்ன உங்கள காப்புத்துறது மட்டும் தான் வேலையா ? இல்ல கடவுள் உங்கள மட்டுமே காப்பாத்துறதுக்கு நீங்க என்ன கடவுள குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா ?

ஒரே ஒரு பதிவுல இன்னுமும் கடவுளை நம்புகிறீங்களா அப்படின்னு ஒரு சின்னதாக கேட்ட ஒரு கேள்விக்கு நானும் சின்னதா எந்த பெரிய விளக்கமும் சொல்லாம ஒரு பதில் சொல்லி இருந்தேன். கடவுளுக்கு வெறும் படைக்கும் தொழில் மட்டுமே செய்றது அவர் வேலை இல்ல.

நான் என்னோட தமிழ் பாடத்தில் அப்படி தான் படித்து இருக்கேன் படைக்கும் தொழில் ,காக்கும் தொழில் ,அழிக்கும் தொழில். தொழில் என்ற வார்த்தையை தான் யூஸ் பண்ணி இருப்பாங்க அதனால நானும் அதையே சொல்றேன்.

அது தொழில் இல்ல வேலை ஏதோ ஒன்னு படைக்கும் தொழிலை மட்டுமே செஞ்சுட்டு இருந்தா காக்கும் தொழிலை மட்டுமே ஃபாலோ பண்ணிட்டு இருந்தா இந்த பூமி தாங்காது. அழிக்கும் தொழிலையும் அப்பப்ப செய்யணும் அதுவும் ஒரு Eco system தான். அதனாலதான் அப்பப்போ நிலநடுக்கம், சுனாமி இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள் எல்லாம் கூட வருது. இதுவும் அது மாதிரியான ஒன்னுதான். ஆனால் இயற்கை சீற்றங்கள் எல்லாம் ஏதோ ஒரு இடத்தில ஒரு குறிப்பிட்ட ஊர், இல்ல ஒரு நாட்டுல மட்டும் நடக்கும்.

ஆனால் அதையெல்லாம் பார்த்து எந்த வகையிலும் திருந்தாத மனுஷங்க தொடர்ந்து ஓவரா ஆட்டம் போட்டுட்டுத்தான் இருந்தாங்க.

ஏதோ இந்த பூமி அவங்களுக்கு மட்டுமே சொந்தம் மாதிரி சொந்தம் கொண்டாடிட்டு  இருந்தாங்க. மரங்களை வெட்டி ரோடு போடுறது என்ன!

ஏரி குளம் குட்டை ஒன்னுத்தையும் விட்டு வைக்காம plot போட்டு விக்குறது என்ன!

 வீடு கட்டுறது என்ன!

இயற்கை வளங்களை எல்லாம் அழிச்சு சுரண்டி சுயநலமா தான் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தா போதும்னு நினைச்சு என்ன எல்லாம் பண்ணிட்டு இருந்தான்.

 நம்ம சென்னை கூவம் நதியை கூட சாக்கடையா மாத்திட்டாங்க. இன்னும் சில ஊர்கள்ள மிச்சம் மீதி இருக்குற மிச்ச சொச்ச நதிகள்ள கூட ஆலை கழிவு எல்லாத்தையும் கலந்து விட்டாங்க.

 அவனோட தேவைக்கு இயற்கை வளத்தை எல்லாம் அழிச்சு இருக்குற நிலம், மரம், தண்ணி மட்டுமா நாசம் பண்ணாங்க ?

 காத்த கூட விட்டு வைக்கல, Factory pollution, Traffic னால pollution, Ac யால pollution னு இன்னும் நிறைய பொல்யூஷன காத்துல கலந்து கலந்து காத்தையே மூச்சுத்திணற வெச்சு ஓசோன்லயே ஓட்ட போட்டாங்க.

 இது எல்லாத்தையும் பாத்துட்டு கடவுள் சும்மாவே இருக்கணுமா ?

அதான் அவனுக்கு பாடம் புகட்டனும்னு  ஆறறிவுள்ள மனிதனே! மிருகத்தை எல்லாம் நீங்க கூண்டுல அடச்சு  வெச்சது போதும்.

 நீங்க கொஞ்சநாள் அடங்கி ஒடுங்கி உங்களை நீங்களே கூண்டுக்குள்ள வெச்சுக்கோங்க. வீட்டிலேயே இருங்கனு ஆப்பு வச்சிருக்கான். அப்படித் தான் சொல்லுவேன். கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க.

 இப்பதான் கொஞ்சம் பொல்யூஷன் இல்லாம horn சத்தத்தால noise pollution கூட இல்லாம காத்து கூட நிம்மதியா மூச்சு விடுது. தன்னை தானே சுத்தப்படுத்திக்குது.

மத்த ஜீவராசிகள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா வெளி உலகத்தை எட்டிப் பாக்குது. இந்த பூமி மனுஷங்களுக்கு மட்டுமே சொந்தம் இல்ல.


 கடவுள் என்ன மனுஷங்கள மட்டுமா படைச்சாறு ? இந்த உலகத்துல இருக்கிற புழு பூச்சு முதல் இருக்குற எல்லா உயிரினங்களையும் கடவுள் தான் படச்சாறு. அப்ப மத்த உயிரினங்களையும் காப்பாத்துறது கடவுளோடு வேலைதான ? அதை இப்ப அவரு சரியாதான் செஞ்சுட்டு இருக்காரு.

அப்புறம் இந்த கடவுள கேலி பண்ண பதிவுகள்ள டெக்னாலஜி பத்தி எல்லாம் பேசி இருந்தாங்க. நீங்கலாம்  சொல்ற So called டெக்னாலஜிய வெச்சு அணுகுண்டு அப்படின்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடியே அணு அப்படின்ற ஒரு விஷயம் அதாவது கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பொருள் இருக்குனு அப்படி ஒரு விஷயத்தை பல ஆயிரம் வருஷம் முன்னாடி தோன்றிய பாடல்லயே குறிப்பிட்டு இருக்காங்க. "அவனின்றி அணுவும் அசையாது" அப்படின்னு சொல்லியிருக்காங்க. 

அதாவது கடவுள் இல்லாம ஒரு சின்ன அணு கூட இந்த உலகத்துல அசைய முடியாது. அது தான் அதோட அர்த்தம்.  அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் அப்படின்னு ஒரு பாடல் வரிகள் கூட வரும். அதான் இப்ப கண்ணுக்கு தெரியாத வைரஸ வெச்சு மனுஷங்கள ஆட்டி படைக்குறாரு actually ஆப்பு வெச்சுருக்காரு.

 உங்களுடைய டெக்னாலஜி எல்லாம் தூக்கிட்டு இங்க வரவேண்டாம்.
பல காலமா பூமிதான் மையப்பகுதியில் இருக்கு. அத சுத்தி தான் மத்த கிரகங்கள் இருக்கு அப்படின்னு நினைச்சிட்டு இருந்த காலகட்டத்தில ரொம்ப லேட்டா தான் உங்களுடைய டெக்னாலஜியை யூஸ் பண்ணி டெலஸ்கோப்பை யூஸ் பண்ணி இன்னும் பல உபகரணங்களை யூஸ் பண்ணி பூமி மையப்பகுதியில் இல்ல சூரியன்தான் மையப்பகுதியில் இருக்கு அப்படின்னு கண்டுபிடிச்சீங்க.

ஆனா எந்த அறிவை பயன்படுத்தி முன்னோர்கள் கோவில்ல நவகிரகத்தில் சூரியன மத்தியில் வைச்சு சுத்தி மற்ற கிரகங்கள் இருக்கிற மாதிரி ஒரு அமைப்பு நவகிரக சிலைகளை வடிவமைச்சு கோவில கட்டுனாங்கனு எனக்கு தெரியாது. உடனே சூரியன் வந்து கிரகமே இல்ல அப்படின்னு ஒரு கூட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு வருவீங்க. இதேபோல அறிவியல் டெக்னாலஜி தான் நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல ஒன்பது கிரகங்கள் அப்படின்னு என்னோட Science book ல போட்டு இருந்தாங்க. ஆனா இப்போ ஒன்பது கிரகம் இல்ல அதுல ஒன்னு நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்க. இப்படித்தான் சில பல வருடங்களுக்கு ஒருவாட்டி உங்களுடைய அறிவியலிலும் நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் மாத்தி மாத்தி தான சொல்லிட்டு இருக்கீங்க.

இன்னும் பல வருஷங்கள் கழிச்சு 10, 12 கிரகம் இருக்குனு கூட சொல்லுவீங்க. So இங்க அந்த அளவுக்கு அறிவியல் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்புறம் கோவில மூடிட்டாங்க அப்படின்னு கைகொட்டி சிரிச்சாங்க. ஆமா அதுல என்ன தப்பு ? எல்லா Factories, machineries எல்லாத்துக்குமே  ஒரு maintainence period வேணும். அப்ப அது கோவிலுக்கும் வேணும் தானே ?
முதல்ல இந்த கோவில் கடவுள்லாம் எதுக்கு ?

கடவுள்என்ன
அப்படியே வானத்திலிருந்து இறங்கி வந்து உங்களுக்கு அருள் கொடுப்பாரா ?
அப்படி அதுக்காக தான் கோவில் இருக்கு அப்படின்னு நினைச்சா அது உங்களோட முட்டாள்தனம். கோவில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுக்க கூடிய இடம். பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கிற இடத்திலதான் முன்னோர்கள் கோவிலிலேயே கட்டுனாங்க. அது எல்லாம் நீ அறிவியல்பூர்வமா வந்து நிரூபி அப்படின்னு சொன்னா நான் இன்ஜினியரும் இல்ல நான் Scientist ம் இல்ல. இந்த கேள்விய நீங்க கோவில கட்டுன முன்னோர்கள் கிட்டதான் கேக்கனும். என்கிட்ட இல்ல.
அதெல்லாம் எப்படி கண்டுபிடிச்சாங்கனு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா கோவில்ல ஒரு Positive vibration இருக்கு.

 பல நூறு அடி ஆழத்துல நீரோட்டம் இருக்கானு எந்த டெக்னாலஜியும் இல்லாம கண்டு பிடிச்சு கிணறு வெட்டுனவங்க இதையும் சரியா தான் செஞ்சுருப்பாங்க.

அதையெல்லாம் இத்தனை நாள் என்ன பண்ணி வச்சீங்க ? கோவிலுக்கு போறவங்க எல்லாம்  என்ன அவ்வளோ யோக்கிய சிகாமணிகளா ?  ஊரை அடிச்சு உலையில் போடுறவன், கலப்படம் பண்ணி வியாபாரம் பண்றவன்,  கள்ளக்கடத்தல் செஞ்சு சம்பாதிக்குறவன், லஞ்சம் வாங்குறவன் இப்படி பலதரப்பட்ட மக்கள் கோவிலுக்கு போவாங்க. அதுல பலரும் அவன் பண்ற Fraud buisnessக்கு கடவுள் கிட்டயே கூட்டாளியா இருக்கச் சொல்லி partnership போட்டு அவன் சம்பாதிக்குற லாபத்துல கொஞ்சம் பணத்தை உண்டியல்ல வேற போடுவான்.

 நல்லவங்களும் சிலர் எத்தனையோ பேர் போய் அவங்க மனக்குமுறல்கள  கஷ்டத்தை எல்லாம் சாமிகிட்ட கொட்டி தீர்ப்பாங்க. சிலர் அழுவாங்க. அப்ப இத்தனை மனுஷங்க இத்தனை நாள் அங்க போய் கொட்டிட்டு வந்த Negativity  எல்லாம் எப்ப தான் வெளியேத் துறத்துறது.

ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிற இடத்துல அளவுக்கதிகமான Negativity ய தொடர்ந்து கொட்டிட்டே இருந்தா அங்க இருக்குற  positive energy நிச்சயமா ஒரு காலகட்டத்தில குறைஞ்சு போகும். அத சரி பண்ண வேணாமா ?

அப்போ  கண்டிப்பா மனுஷங்க போகாம இருந்தா தான் அந்த Negativityய Clear பண்ணி அந்த இடத்த சுத்த படுத்த முடியும். அதுக்கு மனுஷங்க அங்க போகாம இருக்கனும்.

இப்ப கடவுளும் தன்னைத்தானே Quarantine பண்ணிட்டு அவரோட வேலையை அவர் சரியாதான் செஞ்சுட்டு இருக்கார்.  இதுதான் சமயம்னு உங்களோட அறிவியல் பூர்வமான அறிவு பூர்வமான கேள்வியை கேட்கிறேனு தூக்கிட்டு  வராம கொஞ்சம் உங்களோடு அறிவைப் பயன்படுத்தி உங்களை நீங்களே குவாரண்டின் பண்ணிட்டு வீட்ல இருங்க.

Content courtesy  Vijayashalini S

படித்ததில் பிடித்தது

Wednesday, April 22, 2020

தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி....22/04/2020 புதன்கிழமை

சன் டிவி புதன்கிழமை இன்று இரவு 9.30ற்கு "தில்லானா மோகனாம்பாள்" என்னும் திரைக்காவியத்தை ஒளிபரப்பப்போகிறது. அதற்கு முன் கீழே கொடுத்துள்ள கட்டுரையை படிக்கவும்.

படம் பார்க்கும் போது உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாவது உறுதி.

⚘⚘⚘⚘⚘❤❤❤💖💖💖👌👌👌⚘


தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி....

சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் ..

1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள்.

இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள்.

இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?....

கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.

கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ரங்கசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா.

சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார்.

வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும்
தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம்.

சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.

தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள்.

எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை.

தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார்.

ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார்
வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.

உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.

ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது..

கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.

அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.

வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.

சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.

நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.

அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..

இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.

வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.

சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.

1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டி என்ற அளவுக்கு இருந்தது.

தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையாநாயுடு,

நாதஸ்வர இசைக்காக அவர் நாடியது நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.
இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.

நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கதெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா?....

இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர்.

நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக்காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.

தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்
கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.

நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,

தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’.
பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம்.

அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகிஉருகி விசாரிப்பது தெரிய வரும்.

திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்
கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும்
உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள்.

அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு.

படத்தில் ஆழ்ந்துபார்த்தால், நலந்தானா பாடலில் நாதஸ்வரம், நாட்டியம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு காதலுக்காக உருகும் காதலர்களின் நடிப்பே அதிகம் தெரியவரும்.

நாட்டியமாடியபடியே ’’என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நான் அறியேன்’’ என்று பாடி ‘’புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண்பட்ட பாட்டை யார் அறிவார்?’’ என்று மார்பில் லேசா அடித்துக்கொண்டே கைகளை நெற்றியில் கொண்டுபோய்
வைத்து தலையை கவிழ்த்து துயரத்தை பத்மினி வெளிப்படுத்துவார்.

அதைக்காணும் தவில்வித்வான் டிஎஸ் பாலையா, பக்கத்தில் வாசிக்கும் சிவாஜியின் தொடையை லேசாக தட்டி, ‘’எப்படிப்பட்ட பாசக்கார பெண் உனக்கு காதலியா கிடைச்சு உருகு உருகுன்னு உருகராய்யா. உண்மையிலேயே நீ கொடுத்துவச்சவன்யா’’ என்று சொல்லாமல் சொல்வார்.

இணைப்பில் உள்ள யூடியூப் காட்சியை பார்த்தீர்களானால் அந்த பொக்கிஷமான காட்சி உங்களுக்கு புரியவரும் என்ன மாதிரியான கலைஞர்களெல்லாம் நம் தமிழ் சினிமாவை ஆண்டுவிட்டு போயிருப்பார்கள் என்ற வியப்பே மேலோங்கும்.

https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg

தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது..

தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.
அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு..

பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.

சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும் பாலையாவுக்காக தவில் வாசித்தவர்கள் இருவர்.
ஒருவர், திருவிடைமருதூர் வெங்கடேசன்.. இன்னொருவர் பாலையாவுக்கு பயிற்சி அளித்த, மதுரை டி. சீனுவாசன் என்கிற சீனா குட்டி அவர்கள்.

திருவிளையாடல் படத்தில், பாட்டும் நானே, பாவமும் நானே.. சிவாஜிக்காக தவிலில் கைவிளையாடிது இவருடையதுதான். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டின் ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தும் அந்த தவில் பிட்டுகூட சீனு குட்டி அவர்களின் கைவண்ணமே..

இத்தகைய திறமைமிக்க தவில் வித்வான்களின் விரல்கள் பேசிய பாஷையை அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா ஒரு அருவிபோல் பாயவிட்டார்.

அதனால்தான்,தில்லானாவில் ஆரம்ப காட்சியில் வரும் அந்த ஐந்து நிமிட நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக பாலையாவின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனார்கள்.

தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான்.

நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.

ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?

அதிலும் மோகனாவின் தாயாராக வடிவாம்பாள் கேரக்டரில் வரும் சிகே சரஸ்வதியும் நாகேஷும் ஒன்றாக தோன்றும் காட்சிகளெல்லாம் அவ்வளவு ஜாக்கிரதையாக, நேர்த்தியாக இருக்கும்படி அமைத்திருந்தார் இயக்குநர் ஏபிஎன் அவர்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் மோகனாவை வளைக்க துடிக்கும் மிட்டாதாரர் நாகலிங்கமான ஈ.ஆர் சகாதேவன்,, சிங்கபுரம் மைனரான பாலாஜி, மதன்பூர் மகாராஜாவான நம்பியார் ஆகிய மூவரிடமும் மோகனாவை கொண்டுசொல்ல வைத்தி போடும் திட்டங்களும் அதற்கு தோதாக மோகனாவின் தாயை ஆடம்பர வாழ்க்கை ஆசைகாட்டி எல்லாவற்றிற்கும் உடன்பட வைப்பதற்காக பேசும் வசனங்களும்..
‘’ஐயோ சிங்கபுரம் மைனர் நிக்கறாரே..என் கால் வலிக்குதே வைத்தி’’… என்று சிகே. சரஸ்வதி சொல்வதும், ‘’பாருங்க. நீங்க நிக்கறீங்க..அவா கால் வலிக்குதுன்றா’’ என்று நாகேஷ் நக்கலடிப்பதும் எத்தனையெத்தனை காட்சிகள்.

மற்ற கேரக்டர்களிடம் டாமினேட் எப்படி செய்யவேண்டும், மாட்டிக்கொண்டால் வெட்கமேபடாமல் தரைரேஞ்சக்கு எப்படி இறங்கிவிடவேண்டும் என்பதற்கெல்லாம் இந்த படத்தின் வைத்தி கேரக்டர்தான் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி,

ஏண்டாப்பா என்று ஷண்முகசுந்தரத்தை ஒருமையில் அழைத்துவிட்டு சிவாஜி முறைத்ததும் பின்வாங்குவதும், முன்பின் அறிமுகமே இல்லாமல் வடிவாம்பாளை முதன் முறையாக சந்திக்கும்போதே சிங்கபுரம் மைனரின் செல்வாக்கை சொல்லி அவரின் தோளைத்தொட்டு பேசும் அளவுக்குபோவதும் எவ்வளவு ஸ்பீடான மூவ்மெண்ட்ஸ் நாகேஷிடம்..

நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார்.

ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார்.

ஏபி நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா..

தில்லானா நாயகன் சண்முக சுந்தரம் என்றதும் இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாகவேண்டும், படத்தில் சிவாஜிக்கு உற்ற தம்பியாக வந்து எப்போதும் பக்கத்தில் அமர்ந்து தங்கரத்தினமாய் நாதஸ்வரம் வாசிக்கும் நடிகர் ஏவிஎம் ராஜனின் சொந்தப்பெயர்தான் சண்முகசுந்தரம்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்கள் அதில் உண்டு. மதன்பூர் மகாராஜா எம்என் நம்பியாரின் மகாராணியாக வரும் அம்பிகா, 50களிலும் 60களிலும் மலையாள உலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகி. மலையாளத்தின் முதல் வண்ணப்பட நாயகி. நடிகை பத்மினி, ராகினி, லலிதாவின் தாயாரான சரஸ்வதியை உடன்பிறந்த சகோதரியின் மகள்தான் இந்த அம்பிகா. இயக்குநர் பீம்சிங்கை மணந்துகொண்ட நடிகை சுகுமாரிக்கும் சகோதரி.

தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை படாதபாடு படுத்தும் அந்த பாட்டிதான் சுகுமாரி என்று சொன்னால்தான் இப்போதைய தலைமுறைக் தெரியும். பாசமலர் படத்தில் வாராயோ என் தோழி வாராயோ பாடலில் நடனமாடி அதன் பின் புகழ்பெற்ற சுகுமாரி என்றால் தெரியாது. சுகுமாரியும் அம்பிகாவும் ஒரு மலையாள படத்தில் போட்டிபோட்டுக்கொண்டு ஆடிய பாம்பு நடனம் அந்தக்கால கேரள ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பை பெற்ற ஒன்று என்பார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கும். படத்தின் உயிர்நாடியான கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியான நடிகை எம்எஸ் சுந்தரிபாய்க்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் விட்டார் ஏபிஎன் என்பதுதான் புரியவில்லை.. வில்லியாகவும் குணச்சித்திரமாகவும் அடித்து நொறுக்குவதில் கில்லாடி எம்எஸ் சுந்தரிபாய்

சிவாஜி,பாலையா, டி.ஆர் ராமச்சந்திரன், நாகையா சாரங்கபாணி, ஏவிஎம்ராஜன், தங்கவேலு, பாலாஜி, நாகேஷ் ஏகப்பட்டபேர் கதாநாயகன் அந்தஸ்த்து கொண்டவர்கள். அத்தனைபேருக்கும் மனசு கோணாதபடி முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால் ஏபி நாகராஜன் என்பவர் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்திருக்கவேண்டும்.,

தில்லானாவில் விடுபட்டபோன சுந்தரிபாய், ரங்காராவ், விகே.ராமசாமி எம்வி ராஜம்மா, சோ போன்றோருக்காகவே அதன் இரண்டாவது பார்ட்டை ஏபி நாகராஜன்உருவாக்கியிருக்கக்
கூடாதா என்ற ஆசை அடிக்கடி வந்துவிட்டு போகிறது.....
TKS to Nataraja Shastry