Wednesday, August 29, 2018

உற்சாகமாய் இருப்பது ஆரோக்கியமே 29/08/2018 புதன்

💃 😒
உற்சாகமாக இருப்பது ஒரு கலை

அது மிக சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும்

பாருங்களேன்....

பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிக கஷ்டங்கள் வருவதில்லை

வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை

கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்து விடும்

அவர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்

பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை

எப்பொழுதும் உற்சாகமாக வளைய வருபவர்களுக்கு உறவுகளும்.. சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்கு நாள்

இதிலிருந்து என்ன தெரிகின்றது

எல்லோரது மனமுமே

அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது

ஆசை கொள்கிறது

அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது

தான் இருக்கும் நிலையைவிட

அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது

இயற்கையாக அமைந்தால் தான் என்றில்லை

தனக்கு பிடித்தது போல் தன்னை மாற்றி கொள்ளலாமே

அதில் என்ன தடை இருக்கின்றது

இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்.. கூச்சமும்

நமது மிக வலுவான எதிரிகள்

அவர்களை கழுத்தை பிடித்து அப்புறப்படுத்தி விட வேண்டும்

ஒருவரை சந்திக்கும் போது

ஹாய் என்ற நமது உற்சாக குரலே

அந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்கவல்லது

அதே சூழ்நிலையை

அழு மூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே

நடவடிக்கையிலேயே தான் இருக்கின்றது அனைத்தும்

பலர் கூடியிருந்தாலும் மோசமான மந்த நிலை நிலவினாலும்

ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால் போதும்

எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக் கொள்ளும்

புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்.. கலகல பேச்சுகளும் தீபோல் பற்றிக் கொள்ளும்

இறுக்கம் மாறும்

வெண்கல கடையில் யானை புகுந்தது போல் மிக கலகலப்பாகும்

இரத்த ஓட்டம் சீராகும்

சுகர் லெவலை உடனே பார்த்தால் தெரியும் மாற்றமாகியிருக்கும்

மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...

சுவாசம் இழுத்து விடப் படும்

உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபட தோன்றும்


நல்ல உறக்கம் இருக்கும்

மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும்

காஸ்ட்லியான ஒன்று இந்த உற்சாகம்

பல வகையிலும் பயனளிக்க கூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்

இந்த சொத்தை மட்டும் சேர்த்து விட்டோமானால் போதும்

எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்து விடுவோம்

இலவசம் தான் நமக்கு ரொம்பபிடிக்குமே!

ஆனாலும்.....

அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது

வறட்டு கௌரவம் உற்சாகமாக இருக்க விடாது

சிரிக்கவே காசு கேட்டால் என்ன செய்வது.......???

எப்போதும் இல்லாவிட்டாலும்...

அவ்வப்போதாவது கொஞ்சம் உற்சாகமாக...... சந்தோஷமாக........
இருக்கலாமே !

இதில் என்ன பிரச்சனை என்றால்,

நாமும் சிரிக்க மாட்டோம் .

மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால்

யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆரோக்கியத்திற்கு அவசியமானது உற்சாகம்.

வாழ்வதற்கு அவசியமானது ஆரோக்கியம்.

உற்சாகம் வந்தால் சிரிப்பு சிதறும்.

சிரித்துவிட்டால் உற்சாகம் உற்சவம் ஆகும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டதே 💃

💃 உற்சாக உற்சவத்தில் : உள் முக பயணம் 💃

இனிய பயணம்...

துவங்கட்டும் இன்றே....

உற்சாகமாய் இருப்போம்!
உவகை பொங்க செயல்படுவோம்!

ஆரோக்கியம் என்றும் நம் வசமே!

வாழ்க வளமுடன்.....

Friday, August 24, 2018

குட்டிக்கதை 24/08/2018 வெள்ளிக்கிழமை

ஒரு #குட்டிக்கதை.
   
எதிரும் புதிரும் வறுமையும் வளமையும் சேர்ந்தே இருந்தால் என்னாகும்?

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.


அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.


நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

மகிழ்ச்சியாக இருப்போம்...💝🔔

நல்லதைச் செய்வோம்!
அல்லதை விடுவோம்!

Monday, August 20, 2018

கர்மா விதி வலியது 21/08/2018 செவ்வாய்

🍑 *கர்மா விதி என்பது அதிசயமானது அற்புதமானது.*

🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,

🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...

🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..

🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..


🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..

🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..

*இது தான் கர்மா என்பது!!*
*விதி வலியது!
🍑 *கர்மா விதி என்பது அதிசயமானது அற்புதமானது.*

🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,

🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...

🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..

🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..

🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..

🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..

*இது தான் கர்மா என்பது!!*

*விதி வலியது!
லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!
வாழ்க வளமுடன்!

எதுவும் நிரந்தரம் இல்லை 20/08/2018 திங்கள்

எதுவும் நிரந்தரம் கிடையாது.

இப்பூவுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.
வாழும்வரை நமக்குகொடுக்கப்பட்டுள்ள
பதவி,பட்டம்,அதிகாரம், அந்தஸ்து, பொருள்,பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை.

ஏன் நமது பெயரும் கூட அப்படித்தான்.

இவை சில நாள்மட்டும் நம்மோடு. பின் வேறொருவரோடு. நம்மைவிட்டு சொல்லாமல் சென்றுவிடும்.
நாட்கள் செல்லசெல்ல நம்மை இவ்வுலகம் மறந்துவிடும்.

இதுவும் கடந்துபோகும் என்பதுதான் உண்மை.
நன்னிலையோ, தீனிலையோ இது நிரந்தரம் இல்லை என உணர்ந்து மனதை சமநிலையில் வைத்துக்கொண்டு வாழப் பழகவேண்டும்.

#உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் வாழ்க்கை இதற்கு உதாரணம்.

தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை.

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்

நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்.


"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை  ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது".

ஏற்றம் வரும்போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
           
                 சர்வ மங்களம்! சுபம்!
     சர்வஜன       சுகினோ      பவந்து!

Tuesday, August 7, 2018

கலைஞர் காலமானார் 8/7/2018 செவ்வாய்

[8/7, 7:47 PM] Anand: இன்று மாபெரும் தலைவரை தமிழகம் இழந்துள்ளது.அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
[8/7, 7:47 PM] Anand: இன்று மட்டும் ஒரே மாலையில் இரண்டு சூரியன் மறைவு
[8/7, 8:07 PM] Anand: முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு சோலைவனம் மற்றும் பிரம்மரிஷி ஜோதிட மையம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையும் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறது.💐👏🏻😢😭