ஜோதிடம்:
ஜாதகம் அறிமுகம்,சில பால பாடங்கள்.
----------------------------------------
ஜோதிடம்,நம் வேதங்களின் ஒரு அங்கம் என்று சொல்வாா்கள்.ஆகவே இது ஒரு தெய்வீக கலை.
ஜோதிடத்தை நம்புவர்கள் அதை முழுமையாக நம்ப வேண்டும்.நல்ல ஜோதிடர்களை மதிக்க வேண்டும்.வியாபாாிகளை,மக்களை பயமுறுத்துபவர்களை இனங்கண்டு புறக்கணியுங்கள்.
ஜாதகம் பாா்ப்பதற்க்கு மிக அடிப்படையான விஷயம்,சரியாக,நன்கு கணிக்கப்பட்ட,விவரமான முழு ஜாதகம்.
சரியான நம் பிறந்த நாள்,நேரம்,ஊர் இவற்றைக்கொடுத்து முழு ஜாதகத்தை தயாா் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முழு ஜாதகம் என்றால்,ராசிக்கட்டம்,நவாம்ச கட்டம்,நட்சத்திர பாதச் சாரம்,தசா-புக்தி விவரங்கள்.இவைகள் அடிப்படை தேவைகள்.
இவைகளோடு ஜாதகர் பிறந்த அன்று,அந்த நேரத்திலிருந்த திதி,யோகம் (27நித்திய நாம யோகங்கள் உள்ளன),கரணம் குறித்துக்கொள்ள வேண்டும்.இவை மூன்றும் மிக முக்கியமானவை.
நவாம்சம் இல்லாமல் ஜாதகம் பாா்ப்பதும்,பலன் சொல்வதும் மிகத்தவறான ஒன்றாகும்.
பலன் என்னவோ ராசிக்கட்டத்தை வைத்துதான் சொல்லப்படும்,ஆனால் அம்சத்தில் கிரகங்களின் நிலையை பாாத்துதான் பலன்.
ஒரு கிரகம் ராசியில் கெட்டிருந்தாலும்,அம்சத்தில் நல்ல நிலையில் இருந்தால் நல்ல பலனே.ஆகவே நவாம்ச கிரக நிலை மிக முக்கியம்.
இப்போது நல்ல மென்பொருள்/சாப்ட்வேர் கிடைப்பதால் கணினியிலேயே ஜாதகம் கணித்துக்கொள்ளலாம்,துல்லியமாகவும் இருக்கும்,நல்ல கணினி மையத்தை அணுகவும்.கையால் தான்/மேன்வல்லாகத்தான் தயாா் செய்ய வேண்டுமென்பதில்லை
குழந்தைகளுக்கு ஜாதகம் நிதானமாக எழுதிக்கொள்ளலாம் அவசர வேண்டாம்.
ஊர்,ஊராக ஜோசியர்,ஜோசியராக அலையக்கூடாது.பிறகு அதே வேலையாகிவிடும்.ஒன்றும் நடக்காது குழப்பம்தான் மிஞ்சும்.
குடும்ப மருத்துவர் போல்,குடும்ப ஜோதிடர் ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்.வணிக நோக்கமில்லாத,அடிப்படை ஜோதிடத்தில் நல்ல ஞானம் உள்ளவராக ஒருவரை தேடி கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.எல்லா ஊரிலும் நிச்சயம் இருவர் இருப்பாா்கள்.
டிவி,பேப்பர்களில் வரும் பிரபலங்களின் பின்னால் அலையாதீர்கள்,உங்கள் பணம் தான் விரயமாகும்.
செகண்ட் ஒப்பினியனுக்கு இன்னொருவரை மேலே சொன்னது போல ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை இவர்கள் இருவரும் சொன்னது தவறாகவே போனாலும் தெய்வத்தை நம்புங்கள்.நல்லது நடக்கும்.
வியாபார நோக்கமில்லாத,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஜோதிடர்களுக்கு சனிபகவான் பரிபூரணமாக அருள்வான்.அவர்களின் வாக்கு பலிக்காமல் போகாது.
அடிக்கடி ஜாதகம்/ஜோதிடம் பாா்த்துக்கொண்டேயிருக்க கூடாது.
வருடத்திற்க்கு ஒரு முறை,ஏப்ரல்/மே மாதங்களில் எல்லோருக்கும் விடுமுறையாகயிருக்கும்,அப்போது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை காண்பித்து வரப்போகிற வருடம் எப்படியிருக்கும் எனக்கேட்டு அறிந்துக்கொள்ளலாம்.
பரிகாரமும் செய்துக்கொள்ளலாம்.
பரிகாரம் படாடோப பரிகாரம்மல்ல.ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒரு கடவுள் அதிபதி,அவரை நன்னாளில் தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் வணங்கிவந்தாலே போதுமானது.இது எளிய,வலிய பரிகாரமாகும்.
நாளைகாலை என்ன நடக்கும் என்று சொல்வது கடினம்,ஆனால் அடுத்த ஒரு வருடம் எப்படியிருக்கும் என்பதை கூறமுடியும்.அதன் மூலம் நம்மை எல்லாவற்றுக்கும் தயாா் செய்துக்கொள்ளவும் முடியும்.
மற்றபடி கல்யாணம்,படிப்பு,வேலை வாய்ப்பு,உடல்நிலை இந்த காரணங்களுக்காக எத்தனை முறை,எப்ப வேண்டுமானும் ஜாதகம் பாா்க்கலாம்.
குல தெய்வ வழிபாடு மிக முக்கியம் வருடத்திற்க்கு ஒரு முறையாவது குலத்தெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிக நல்லது.
வீட்டிலுள்ள பெரியவர்களை கண்ணியமாக நடத்துங்கள்.
பெண்களை மதியுங்கள்.அவள் தெய்வம்,தாய்க்கு சமமானவள் என்று வாய் வாா்த்தையுடன் நிற்காமல் அதை செயலில் நிருபியுங்கள்.
பெண்ணை போற்றும்,மதிக்கும் சமூகம்தான் உயர்வடையும்.அவள் சந்தோஷமாக இருந்தால் தான்,வீடு சந்தோஷமாகயிருக்கும்
நம் மனைவியை,மகளை,தாயை,சகோதரியை மனமார மதிக்க கற்றுக்கொள்வோம்.அவர்கள் சொல்வதையும் காதுக்கொடுத்து கேட்கவேண்டும்.ஆண்களைவிட மனவைராக்கியமுடையவர்கள் பெண்கள்.சகோதரியை,மகளை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
பெண்அழுதால் வீடு நிர்மூலமாகிவிடும்.
பெண் சிசு கொலை,ஆணவக் கொலைகளை தவிர்ப்போம்.இதுப்போன்ற செயல்கள் நம் சந்ததியினரை வெகுவாக பாதிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நம் கடின உழைப்பு,விடா முயற்ச்சி,தன்னம்பிக்கை இந்த மூன்றுடன் கூடிய தெய்வபக்தி என்றுமே வீண் போகாது,நமக்கு எல்லா செல்வங்களையும் வழங்கும்.
நல்ல நடத்தை,நேர்மையான சிந்தனை என்றும் நம்மை காக்கும்.
ஆல் தி பெஸ்ட்.
நன்றி.
மேலும் வளரும்....!

No comments:
Post a Comment