விக்கிரமாதித்தன் கதைகள் - 18
*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*
*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 3*
பத்ருஹரி உடனடியாக அந்தப் பழத்தை எடுத்துக்கொண்டு அனங்கசேனையைப் பார்க்கச் சென்றான்.
“அன்புக் காதலி அனங்கசேனை! இந்தப் பழத்தைப் பார்த்தாயா? ஓர் அந்தணன் எனக்குக் கொடுத்தது. நீண்ட இளமையைத் தரவல்லது. அந்தணன் எனக்குக் கொடுத்ததை நான் உனக்குத் தருகிறேன். இதை நீ உண்பாயாக.”
அனங்கசேனை அப்பழத்தை ஆசையோடு வாங்கிக் கொடுத்தாள். ஆனால் அவள் சாப்பிடவில்லை.
அனங்கசேனைக்கு ஒரு ஆசைநாயகன் இருந்தான்! அவன் அந்த அரண்மனைக் குதிரைகளைப் பராமரிக்கும் குதிரைப் பாகன்! அந்தக் குதிரைப் பாகனிடம் கொடுத்தாள். மாதுளங்கனியின் அபூர்வத் தன்மையை அவனிடம் விளக்கினாள். அவனை உண்ணச் சொன்னாள்.
குதிரைப் பாகன், அரசனின் மனைவியிடம் அன்புகொண்டவனாக நடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு உண்மையில் அரண்மனையின் வேலைக்காரியின்மீதே பிரியம் இருந்தது.
காமம் என்னும் மோகத்தின் பாதையை யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. எல்லோரையும் ஆட்டுவிக்கக்கூடியது. உயர்ந்த குடும்பத்திற்கு மருமகளான அனங்கசேனை, சாதாரண குதிரைப் பாகனிடம் சோரம் போனது விசித்திரம். ஆனால் அவளது மென்மையும் இரசனையும் குதிரைப்பாகனைக் கவரவில்லை! குதிரைப் பாகனைக் கவர்ந்தவள் வேலைக்காரிதான்.
வேலைக்காரியை யாருக்கும் தெரியாமல் சந்தித்து அந்தப் பழத்தைக் கொடுத்து விவரத்தை வேறுமாதிரியாகச் சொன்னான்.
“இந்தப் பழத்தை சாப்பிடுபவர்கள் நீண்ட நாள் இளமையுடன் இருப்பார்களாம். ஒருவர் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.”
வேலைக்காரி பழத்தை ஆசையுடன் வாங்கிக்கொண்டாள். ஆனால் அவளும் அதை உண்ணவில்லை. அவளுக்கும் ஓர் ஆசைநாயகன் இருந்தான். அரண்மனைப் பசுக்களை மேய்க்கும் இடையன். அவன் அப்பழத்தைப் பெற்றுக்கொண்டு அவனது ஆசைநாயகிக்குக் கொடுத்தான். அவள் அந்த மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிக் கூட்டிச் சுத்தம் செய்யும் வேலைக்காரி. தான் கொண்டுவந்திருந்த சாணிக்கூடையில் அந்தப் பழத்தைப் போட்டுக்கொண்டு கிளம்பிச் சென்றாள்.
வீதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் அரசன் பத்ருஹரி குதிரையில் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தான். எதிரில் சாணிக்கூடையில் மின்னும் பழத்தைப் பார்த்துவிட்டான். ஆனால் அது அனங்கசேனையிடம் கொடுத்த பழமாக இருக்கும் என்று அவன் கருதவில்லை. அதைப் போன்ற இன்னொரு பழம் என்று நினைத்தான்.
“அந்தப் பழத்தை அனங்கசேனை உண்ணட்டும். நான் இதை உண்டு நீண்ட இளமையுடன் வாழ்வேன்.”
“பெண்ணே! இந்தப் பழத்தை என்னிடம் கொடு. உனக்கு வேண்டியன தருகிறேன்.”
உண்மையில் அவளுக்கு அந்தப் பழத்தின் மகிமை எதுவும் தெரியாது. இடையன் காதலுடன் தந்த பழம் என்று நினைத்தாள். மன்னன் கேட்டவுடன் கொடுத்துவிட்டாள்.
பழத்துடன் அரண்மனைக்கு வந்தவன், அந்தணனை அழைத்துவரச் செய்தான்.
“அந்தணரே, பூமாதேவியின் அருளால் ஒரு பழத்தைத்தான் பெற்றீர்கள்? அப்படியிருக்க, அதைப் போன்றே இன்னொரு பழத்தை ஒரு வேலைக்காரப் பெண்ணிடமிருந்து பெற்றேன். அது எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்?”
“மன்னா! அந்தப் பழம் இவ்வுலகில் ஒன்றேதான் உள்ளது. அரசன் என்பவன் நாட்டின் தலைவன் மட்டுமல்ல. குடிமக்களுக்குத் தெய்வம் போன்றவன். மக்களுக்குச் சமமாக நீதி வழங்குபவன். அவனிடம் பொய் சொல்லக்கூடாது. நான் சொன்ன செய்தி சத்தியம்!”
“அதே போன்ற மின்னும் பழத்தை அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எப்படிக் கிடைத்தது?” மன்னன் யோசித்தான்.
அந்தணன் கேட்டான்,” அரசனே, நான் உங்களிடம் கொடுத்த பழம் எங்கே? நீங்கள் உண்டீர்களா?”

No comments:
Post a Comment