Tuesday, August 15, 2023

பாதபூஜை




 🕉 

*எதற்காக பாதபூஜை?*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை*

*செய்யும்போது ஒருவரின் அனைத்து பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*அஸ்வ மேத யாகத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பித்ரு தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰


*மேலும், பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்ய பரிபூரண ஆசி கிட்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*யாருக்கு பாதபூஜை*

*பாத பூஜையானது பெற்றோர்கள், பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளவர்கள், குருக்கள், மகான்கள் ஆகியோருக்கு செய்யும் புண்ணிய செயலாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*வணங்கும் முறையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள்*

*அந்த வரிசையில் பெற்றோர்களுக்கு முதலில் பாதபூஜை செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*இன்றும் சிலர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்வதை சம்பிரதாயமாக கொண்டுள்ளனர்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை செய்வது எப்படி*

*பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, ஆடி பௌர்ணமி (குரு பூர்ணிமா) போன்றவை பாத பூஜை செய்ய உகந்த நாட்களாக கூறப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை* *பெறுபவரின்* *கால்களை ஒரு* *தாம்பாளத்தில் வைத்து, மஞ்சள் நீரால் கால்களை கழுவி சந்தனம், குங்குமமிட்டு தூய பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பின்னர், தீபங்களால் ஆராதனை மீண்டும் சந்தனம், குங்குமம் வைத்து புஷ்பங்களால் ஆராதிக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*அவர்களின் கால் அபிஷேக நீரை தலையில் தெளித்து கொண்டு எஞ்சிய நீரை யார் காலடியும் படாத ஓரிடத்தில் ஊற்றி விடுவது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை பெறுபவர்* *மனமானது தூய* *உள்ளத்துடன் கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*முக்கிய குறிப்பு : நீங்கள் பாத பூஜை செய்பவரை கடவுளுக்கு நிகராக நினைக்கும் பட்சத்தில் பாத பூஜை செய்யலாம். அவ்வாறில்லையெனில், பாதபூஜை செய்வதைத் தவிர்ப்பது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment