🌹குருப்பெயர்ச்சி பலன் 2021-2022
💢கும்ப ராசி....ஜன்ம குரு
எதிர்வரும்
20.11.2021 அன்று
சனிக்கிழமை
கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி
இரவு 11.31 மணி அளவில்
திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருப்பெயர்ச்சி ஆகிறார்.
பொதுவாக குரு ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் ஒரு மாத காலத்திற்கு முன்பே தான் செய்ய இருக்கும் பலனுக்கு அஸ்திவார பணிகளை செய்ய துவங்கி விடுவார்.
கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ள
குருபகவான் இந்த முறை மிக அதிவேகமாக கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்களான
அவிட்டம் 3,4 ஆம் பாதங்களையும், சதயம்,
பூரட்டாதி 1,2,3 பாதங்களையும் கடந்து ஐந்தே மாதத்தில் (13.4.2022) மீன ராசியை அடைகிறார்.
கும்ப ராசியினருக்கு
இதுநாள்வரை 12 ல்அமர்ந்து சனியுடன் இணைந்து நீச பங்கம் பெற்றாலும் நல்ல பலனை வழங்காத குரு பகவான்
தற்சமயம் 12ஆம் இடத்தில் இருந்து கும்ப ராசியில் சஞ்சரித்து அதிவேகமாக 2 ஆம் இடத்தை நோக்கி பயணிக்க உள்ளார்.
குரு கும்ப ராசிக்கு 11,2 ஆம்
இட அதிபதியாக இருப்பதால் குரு ராசியில் அமர்வது கடந்த காலத்தை ஓப்பிடும் போது ஓரளவு சுமாரன பலனை அளிக்க உள்ளார்.
கும்ப ராசியினர் ஏழரை சனியின் விரைய சனி ஆதிக்கத்தில் இருந்து இன்னும் விடுபட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த குறுகிய கால குருப்பெயர்ச்சியால்நன்மையும்,தீமையும் கலந்த கலவையாக எதிர் வரும் நாட்கள் செல்ல உள்ளது.
சுப கிரமான குரு தான் இருக்கும் இடத்தை விட தான் பார்வை செய்யும் இடத்தின் பலனை விருத்தி செய்வார்.
கும்ப ராசிக்கு ஜன்ம குருவாக சஞ்சரிக்க உள்ள குரு பகவான் தனது பார்வையினால்
ஐந்தாமிடத்தையும்
ஏழாமிடத்தையும்
ஒன்பதாமிடத்தையும்
புனிதப்படுத்தப் போகிறார்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment