Monday, May 29, 2017

#சதுரகிரி_மலையில்_சித்தர்களை_நேரில்_தரிசிக்கும்_முறை ஒன்று கோரக்கர் அருளிய ரவிமேகலை என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

அந்த தகவல் பின்வருமாறு..

பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன் நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல் நீரோடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல் சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச் சிதறாமல் நானோதும் மந்திரத்தை முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே.

தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர் தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார் ஆமையெழுத் தானதோ ராதி பீடம் ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார் தூமையென்ற கதிகோடு அமுதர் பானத் தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்.

சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.

அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார்.

தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம்.

மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள் காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார்.

பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.

இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.

வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம் வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ ராஜ நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங் லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம் பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.

ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங் லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.

சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க....

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல்.

இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை.

குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங் ஆளடா சதுரகிரி என்கோணமாகும் அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர் தளடா சிறப்புடனே தவசுபண்ணி தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

- அகத்தியர் -

சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார்.

இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம்.

இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார்.

தற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய் இருந்திருக்கலாம்.

அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.

இத்தகைய பக்குவமானது ஒருவரை மேலான முக்தி நிலைக்கு உயர்த்தி விடலாமென கருதுகிறேன்.

மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.

சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன.


Wednesday, May 17, 2017

#சுவாசத்தால்_யுகங்களை_கணித்த_சித்தர்கள் !!!

. சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது.

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், "வாசி' எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.
             ஒ     

இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும்போது, நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள்.

அது இருபத்தோரா யிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள்.

நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360.

அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

இதேபோல் யுகங் களின் கணக்கும் இப்படி கூறப்படுகிறது. 21,600-ஐ எண்பதால் பெருக்கினால் கிருத யுகமாம். அறுபதால் பெருக்க திரேதா யுகமாம். நாற்பதால் பெருக்க துவாபர யுகமாம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நம் சுவாசம் 21,600. ஒரு வருடத்தின் நாழிகை 21,600.

21,600 ஷ் 80 =17,28,000 கிருதயுகம்.

21,600 ஷ் 60 =12,96,000 திரேதாயுகம்.

21,600 ஷ் 40 =8,64,000 துவாபரயுகம்.

21,600 ஷ் 20 =4,32,000 கலியுகம்.

பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம்.

சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

இயற்கையுடன் இணைந்து வாழவேண்டு மென்பதை நினைவூட்டவே உலக சித்தர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்கால நவீன விஞ்ஞான வளர்ச்சியாலும், ரசாயனக் கலவையாலும், நச்சுப்புகையாலும் இயற்கையான  நிலை மாறிவருகிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. வளரும் விஞ்ஞானத்தால் ஆதாயங்கள் பல பெற்றாலும் பாதகங்களும் உடல்நல பாதிப்பும் அதிகமாகவே காணப்படுகின்றன.

சித்தர்கள் ஆராய்ச்சிசெய்து வெளிப் படுத்தியதுதான் சித்தமருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.

கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம், சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்பநூல், மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரேசமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர்பெருமக்களும் உண்டு.

சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ் கின்றன. மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். கோவில்கள் மட்டுமல்ல; சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நவகிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர் அழுகணிச் சித்தர். இவரை வழிபட்டால் நாகதோஷம் அகலும். இவர் சித்தியடைந்த இடம் நாகப்பட்டினம். இவரைப்போலவே குதம்பை சித்தர் கேது தோஷம் நீக்கும் சக்திபெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், "டென்ஷன்' பேர்வழிகளும் இவரை வழிபட்டு நலம்பெறு கிறார்கள். இவர் சித்தியடைந்த இடம் மயிலாடுதுறை. ராகு பகவானைப் பிரதிபலிக் கும் பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது சிறுகனூர் திருப்பட்டூர் தலம். இங்குள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு வலப்புறம் ஆதிசேஷன் அவதாரமான பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தால் கேதுவினால் ஏற்படும் தோஷம் மட்டுமல்ல; அனைத்து நாகதோஷங்களும் நீங்குமென்பர். இந்தக் கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அதன் புறவாசலின் முன்பகுதியில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாத முனிவரின் பிருந்தாவனம் உள்ளது. அவரை பிரார்த்தனை செய்து வழிபட்டால் ராகுதோஷம் நீங்கும்.

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் "குறுமுனி' என்று போற்றப்படும் அகத்தியர், கயிலை மலையில் நடந்த சிவ- பார்வதி திருமணக்காட்சியை பொதிகை மலையிலிருந்தவாறு தரிசித்தவர். இவர் ஒருசமயம் திருக்குற்றாலத்திற்குச் சென்றபோது அங்கு அமைந்துள்ள வைணவத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது அவ்வாலயத்திலிருந்தவர்கள், சிவச்சின்னங்களுடன் வந்த அகத்தியரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. திரும்பிச்சென்ற அகத்தியர் வைணவச் சின்னங்களை தரித்துக்கொண்டு, சில மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெருமாள் ஆலயம் வந்தார். வைணவர் என்றெண்ணி அவரை அனுமதித்தனர்.

உள்ளே சென்ற அகத்தியர் மூலிகைச் சாறை பெருமாள் தலையில் பிழிந்து, கைவைத்து அழுத்தி, "குறுகுக குறுகுக' என்றாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமாள் குறுகி சிவலிங்கமானாராம். அவரே குற்றாலீஸ்வரர்.
                     
                          
அகத்தியர், பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை இன்றும் குற்றாலநாதர் சிவலிங்கத்தில் தரிசிக்கலாம். அதுமட்டுமல்ல; அகத்தியர் தன் வலிமையைப் பயன் படுத்தி அழுத்தியதால் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாம். அதனை நீக்குவதற்கு அரிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை இன்றும் அபிஷேகம் செய்கிறார்கள். அகத்தியர் குற்றாலத்திற்கு வந்ததன் அடையாளமாக அவருக்கு ஒரு சந்நிதி, குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. அவரை வழிபட, நினைத்த காரியங்கள் வெற்றி பெறுமென்பது நம்பிக்கை. அகத்தியர், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் சமாதி அடைந்தாரென்றும், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சமாதிகொண்டதாகவும் இருவகையாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் பொதிகை மலைப்பகுதியில் இன்றும் அகத்தியர் வாழ்ந்துவருகிறார் என்று கூறுவர். மக்கள் நடமாட்டமில்லாத பொதிகை மலைப்பகுதியில் அகத்தியருக்கு முழு உருவச் சிலையொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
                 

சித்ரா பௌர்ணமியன்று இரவில், ஒருசில பகுதிகளில் பூமியிலிருந்து ஒருவகை உப்புவெளிப்படும். இதை "பூமிநாதம்' என்று சொல்வர். இந்த உப்பு, சித்தமருத்துவத் துறையில் முக்கிய இடத்தைப் பெறும். இது மூலிகையிலுள்ள ஜீவசக்திகள் வீரியத்துடன் விளங்க உதவுகிறது. இந்த உப்பு, சித்ரா பௌர்ணமியன்று வெளிப்படுவதை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே. சித்ரா பௌர்ணமி ஆதியில் சித்தர் பௌர்ணமி எனப்பட்டது. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையையும் சக்தியையும் கண்டு, மனித குலம் நலமுடன் வாழ வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்கள் என்று வரலாறு கூறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல; உலகமெங்கும் சித்தர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் காட்சிதரும் சித்தர்களைப்போல் ஜடாமுடி, தாடியுடன் காட்சிதருவதில்லை. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும், மற்ற நாடுகளிலும் சித்தர்கள் வாழ்கிறார்கள். யோகா, தியானம், வான் ஆராய்ச்சி போன்றவையெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை. அவர்களை அடையாளம் கண்டு அங்கு வாழும் மக்கள் போற்றுகிறார்கள்.

சித்தர்கள் காலத்தின் கணக்கை கணித்ததுபோல, நவகிரகங்களின் திசை களையும் மாற்றி, காலநிலைகளையும் மாற்றியிருப்பதாக வரலாறு கூறுகிறது.  நாட்டில் மழையின்றி மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலகட்டத்தில், இடைக் காடர் என்ற சித்தர் மட்டும் பசியின்றி வாழ்ந்து வந்தார். இதைக்கண்ட நவகிரக நாயகர்கள் "இது எவ்வகையில் சாத்தியம்?' என்று வியந்து, காரணத்தையறிய சித்தரின் குடில் தேடிவந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு ரொட்டியையும் ஆட்டுப்பாலையும் அளித்தார். அவர்களும் விருப்பமுடன் உண்டனர். ஆட்டுப்பாலில் எருக்கிலைகளின் சத்து மிகுந்திருந்ததால், அப்பாலை அருந்தியதும் நவகிரக நாயகர்கள் மயக்கமுற்று சாய்ந்தனர். உடனே இடைக் காட்டு சித்தர், நவகிரக நாயகர்கள் எந்த அமைப்பிலிருந்தால் மழை குறையின்றிப் பெய்யுமோ, அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்தார். வானத்தில் மேகமூட்டம் திரண்டது. மழைபொழியத் துவங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிந்தன. மயக்க நிலை தெளிந்த நவகிரக நாயகர்கள், தங்களை திசைமாற்றி இடைக்காடர் சாதித்துவிட்டதை அறிந்து வியந்தார்கள். நாடு செழிக்க சித்தர் செய்த அற்புதத்தை நினைத்து அவரைப் போற்றினார்கள்.

அவரை வணங்கி, வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இதேபோல, ஒவ்வொரு சித்தரும் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்று மக்கள் நலமுடன் வாழ அருள்புரிந்திருப்பதாக சித்தர்களின் வரலாறு கூறுகிறது. எனவே சித்த

ர் பெருமக்கள் சமாதியடைந்த திருத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு நலமுடன் வாழ்வோம்.

#சிவாயநமஹ_நமச்சிவாய




Tuesday, May 9, 2017

அன்புடையீர்,
வணக்கம். இந்நாள் ஒரு பொன்னாள். (10.05.2017)புதன்
இன்று சித்திரா பெளர்ணமி. வருடத்தின் முதல் முழு நிலவு. அருள்மிகு அன்னை
ஸ்ரீகாமாக்ஷியின் பரிபூர்ண கடாக்ஷம்
நமக்கு கிடைக்கட்டும்.
அன்பு,அழகு, ஐஸ்வர்யம், ஆனந்தம், செல்வாக்கு வளம்
அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டு என
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்..
என்றும் அன்புடன் ஷண்முகானந்தம்.

Monday, May 8, 2017

மான்யோனியும் சிற்றின்பமும்

சித்திரை மாத முழு நிலவு அன்று தாருகாவனத்து ஆஸ்ரமத்தில் குளூமை பொருந்திய நிலை ரிஷிபத்தினியின் நித்திரையை கலைக்க,

மயக்கும் விழி கொண்ட ரிஷிபத்தினியை வசந்தம் வருட, அவள் தன் அருகே இருந்த சகல சாஸ்ஹிரத்திலும் நிபுனரும், தேவதா வசியத்தில் மகா வல்லவருமான் ‘சதிஜீத்’ மகரிஷியை தொட்டு முழுமதியை காட்டியவாறு “இந்த பூவுலகில் சிற்றீன்பத்தை வெகுநேரம் துய்க்கவல்ல ஆற்றல் பெற்ற ஜீவராசி எது மாமேதையே” என்று கேட்கிறாள்.

அவர் சொல்கிறார் “ இனியவளே மனம் பூரனமாக ஒடுங்க சிற்றீன்பத்தின் உச்சத்திற்கு செல்லும் வல்லமையை உலகிலேயே மிகவும் அச்சம் கொண்ட மான் இனத்திற்க்கே இரைவன் அருளியுள்ளான்.” என்றார் தன் பத்தினியை தழுவியவாறே.

மோகத்தின் உச்சத்தில் இருந்த பத்தினி  ரிஷியிடம் “நமக்கு அந்த அந்த அறிய சுகம் இந்த ஜென்மத்தில் கிட்டுமா? சுவாமி என்று கேட்க,

கவலைப்படாதே கண்ணே! உன் அதிர்ஷ்டம் அதை என் தபோ பலத்தால் இந்த ஜென்மத்திலேயே அந்த ஈடில்லா இன்பத்தை கிடைக்கச் செய்கிறேன் என்கிறார்.

 உச்சமிகு வேட்கை கொண்ட தன் பத்தினிக்குகாக யோனி வசிய மகா மந்திரத்தை உச்சாடனம் செய்யலானார். உச்சாடனம் செய்த அரை நாழிகையில் அந்த ரிஷி தம்பதியினர் இருவரும் பருவத்தின் பூரிப்பு கொண்ட இளம்மான் தம்பதிகளாக மாறி அந்த அடர்ந்த வனத்தில் அமைதி பூஞ்சோலையில் இருவரும் வெறிகொண்ட உணர்வுகளோடு சுக உச்சத்தில் திளைத்துக்கொண்டிருந்த போது ......

திடீரென்று பெண் மானாய் இருந்த ரிஷி பத்தினி அய்யோ என்று அலறி துடித்து விழ, அவள் அடிவயிற்றை நச்சு கனை ஒன்று துளைத்ததை கண்ட ரிஷி, தன் கண் முன்னே தன் பத்தினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை கண்ட மகரிஷி

 கடும் கோபத்துடன் மனிதரூபத்திற்க்கு வந்து மகாருத்ராவேசமோடு திரும்பிப் பார்த்த போது , அவரது உக்கிரமான விழிகளூக்கு எதிரே வில்லோடு பாண்டவர்களீன் தந்தை பாண்டுமண்னர் நிற்பதை கண்டு பொங்கி மூண்ட பெருஞ்ஸினத்துடன் பைத்தியகாரனிலும் மகா மட்டமானவனே, சலியா தனம் கொண்ட என் பவித்ரநாரியை கொடூரமாக கொன்ற மாபாதகா,

ஈருயிர்கள் ஆரத்தழுவி இருக்கும் அமிர்த வேளையில்  சுடுசரம் பாய்ச்சிய சாவ மூடனே பிடி சாபம்,” எக்கனம் உன் தாரத்தை தழுவுகிறாயோ அக்கனமே கொடியமரணம் உன்னை தழுவக்கடவது!!” என்று கொடுஞ்சாபம் கொடுத்துவிட்டு மலர்கொடியாய் ரத்த வெள்ளாத்தில் துவண்டு கிடந்த தன் பத்தினியின் ஸ்தூல உடலை கண்ணீர் வெள்ளத்தில் தோளீல் சுமந்து சென்று விட்டார்.

சாபத்திற்க்கு அஞ்சிய பாண்டு மண்ணன் பலகாலம் பெண்களை ஏறிட்டு பார்க்காமல் இருந்து ஒரு நாள் விரகதாபத்தில் தன் மணைவியை தழுவும் போது மகரிஷியின் கொடுஞ்சாபம் உயிரைப்பறித்தது. என்று மகாபாரதம் நமக்கு ஒரு கதையை சொல்கிறது.

காமசூத்திரம் பகர்ந்த வாத்சாயினார் உல்லாச சல்லாப ஸாகரத்தில் உச்சத்தை தொடக்கூடிய நட்சத்திரங்களாக அனுசத்தையும், கேட்டையையும் சுட்டிக்காட்டுகிறார். காரணம் அவையிரண்உம் மான்யோனியை பெற்ற நட்சத்திரங்கள். மான்யோனி களத்திரம் கிடைக்க முன் ஜென்ம நல்விணையால் கொடுத்து வைத்திரிக்க வேண்உம் என்று சொல்கிறார்.

அதுவும் கேட்டை நட்சத்திரங்களீல் ஜெனித்த ஆணுக்கும், பெண்ணுக்கும் சொர்க்க இன்பத்தை கொடுக்கும் பன்பும், ஈர்க்கும் அன்பும் மிக்கதாக இருக்கும் என்று சொல்கிறார்.

இந்த நிலையில் சுக்கிரன் சுப சம்பந்தம் பெற்று ஆட்சி, உச்சம் கொண்டிருப்பாரேயானால் மற்றவர்களை தன் வசியப்படுத்தி மோக உச்சத்தை வழங்குவதில் வல்லவர்கள் என்கிறார்.

மேலும் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ் விசயத்தில் மகா நிபுனத்துவம் பெற்றவர்களாக விள😁ங்குவாரகள் என்றும் கூறுகிறார்.
                   
அது போன்றே கேட்டையில் பிறந்தவர்கள் குடிசையில் பிறந்திருந்தாலும் கோட்டையில் பிறந்தவர்களையும் தன் வசப்படுத்தி தூளீகா மஞ்சத்தில் தங்கள் உல்லாச சல்லாப மதனத்துவஜத்தை சிலாகித்து லாவன்யமாக கொடுப்பதில் நிபுணாத்துவம் படைத்தவர்கள்.

மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் கேட்டை நட்சத்திர நாட்கள் வளர்பிறையில் இருக்கும் காலத்தில் பிறந்தவர்களூக்கு தன்னை சாரும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பெரும் சுகத்தை கொடுக்கும் தன்மையும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து காமசுகத்தை பெறும் தன்மையும் மிகுந்திருக்கும் என்கின்ற அற்புத சூட்சுமம், சூத்திரத்துடன் நுன்மான் நுழைபுலத்துடன்  மதன்பீடம் அமைந்திருக்கும் என்பது தெரிகிறது.

இந்த இரு நட்சத்திரத்திற்க்கும் மதனகாமரசம் கொண்ட இன்பம் துய்க்கும் நிலையை பெற்றிருக்கும் அற்புதம்  உடலுறவின் உச்சத்தில் சோர்ந்து மயங்கி விழும் ஆணை போக வெறி கொண்டு தின்று தீர்க்கும் பெண் தேளை சின்னமாக கொண்ட விருச்சிக ராசியை சேர்ந்த முழு நட்சத்திரங்கள் ஆனதே அதன் மூல காரணம்.
அதில் ஒன்று ”யட்சினி”, மற்றோன்று ”பட்சினி” என்று திகழவல்ல மாறும் அர்த்தநாரித்துவம் கொன்ட அற்புத மதனோர்பவ நட்சத்திரங்கள் என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

இதில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களூக்கு காமாக்கியாவின் தனி தத்துவம் கிடத்தாலும், ரிஷியின் பத்தினி இறந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆம் கேட்டையில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளாக்கூடிய பெண்களூக்கு ரிஷி பத்தினிக்கு ஏற்பட்ட துன்பம் ஏற்படுகிறது என்பது  என் ஆய்வில் நிறைய பார்த்திருக்கிறேன்.

அதே போன்று சுக்கிரன் கேட்டையில் நிற்க பிறந்த பெண்கள் கணவனோடு வாழ்வதில்லை. மாறாக தனக்கு பிடித்த தன்னைவிட இளம் வயது ஆண் துணையிடம் சுகத்தை, தனது மதன காம வேட்கையை தீர்த்துக்கொள்கிறார்கள்.