*பாரம்பரிய ஜோதிடத்தில் எப்படி பலன் பார்க்கப்படுகிறது?*
1.ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் தன்மைக்கு ஏற்ப பலன் தரும்..
2. அந்த கிரகத்தைப் பார்த்த சுப கிரகம்/ அசுப கிரகத்தின் பார்வை அந்த கிரகத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்கிறது.
3.அந்த கிரகம் அமர்ந்த வீட்டு அதிபதி இருக்கக்கூடிய நிலையில் (ஆட்சி, உச்சம், நீசம், வக்ரம், வர்க்கோத்தமம், மறைவு)அதன் செயல்பாட்டை மாற்றுகிறது.
4. அந்த கிரகம் நின்ற நட்சத்திர சாரம் எதுவோ அதற்கு ஏற்ப செயல்படுகிறது.
5. அந்த வீட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய கிரகத்தோடு இணைந்து மற்றொரு கிரகத்தின் செயல்பாட்டோடு இணைவு பெற்று பலனை புதிய வகையில் செயல்படுகிறது.
இவ்விதம் ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் வழியாக பலன்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.
வேத ஜோதிடம் (ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பண்டைய இந்திய வேதங்களில் இருந்து உருவான ஒரு பாரம்பரிய இந்து ஜோதிட அமைப்பாகும். இது கிரகங்களின் நிலை மற்றும் நகர்வுகளைக் கொண்டு, ஒரு நபரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படும் ஒரு கணிப்பு முறையாகும்

No comments:
Post a Comment