*காதல் விளையாட்டு*
அழகு மனம் அன்பு இவற்றை குறிக்க கூடிய சந்திரன் உச்சம் அடைய கூடிய இடம் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி. சுக்ரன் வீட்டில்.
சுக்ரன் காமம், காதல், உல்லாசம், சொகுசு, சுகம் இவற்றை குறிக்க கூடியவர்.
அந்த இடத்தில் சந்திரன் உடன் சுக்ரன் இணைந்து இருப்பவர்கள் அதீத காமம் உடையவர்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பல பெண்களை/ ஆண்களை மயக்க கூடியவர்கள்.
காமத்தை ரசிப்பவர்கள், காமத்திலும் காதல் இருக்கும்; காட்டு தனமான உடலுறவில் ஈடு படமாட்டார்கள். எப்பொழுதும் அரவணைப்பை நாட கூடியவர்கள். எந்த நேரம் கூப்பிட்டாலும் செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு வந்துவிடுவார்கள். (கணவன்/மனைவி)சுகத்திற்காக உடலுறவு என்பதை விட அன்புக்காக ஏங்க கூடியவர்கள்.
இந்த இணைவு லக்னத்துக்கு 3, 7, 11 இல் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.
மிக்க நன்றி

No comments:
Post a Comment