விக்கிரமாதித்தன் கதைகள் - 22
முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1
விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 1
விக்கிரமாதித்தன் ஆளும் உஜ்ஜயினி மாகாளி பட்டணம் கலைகளின் சங்கமமாகியது. அவன் புகழ் எல்லா இடங்களிலும் பரவி அனைவரும் புகழும் அரசனான். அவனது புகழ் தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. சங்கீதம், நடனம், ஓவியம் என்று பல கலைகளிலும் வல்லவனாக இருந்தான்.
ஒரு சமயம் தேவலோக இந்திர சபையில் தேவ கன்னியர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். அனைவருள்ளும் ரம்பையும் ஊர்வசியும் தமது திறமையால் இந்திராதி தேவர்களைக் கவர்ந்தனர். நடன நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரையும் கேட்டு இந்திரன் பாராட்டினான்.
"என்னை விடச் சிறந்தவள் இங்கு யாருளர்?" என்றாள் ஊர்வசி.
"நடனக்கலையில் முழுத் தேர்ச்சி அடைந்திருப்பவள் நானே!" என்றாள் ரம்பா.
வார்த்தைகள் சிறிது சிறிதாக தடித்தன. இந்திரன் இந்த இருவருள் யார் சிறந்தவர் என்ற விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தான்.
"நடன அப்சரஸ்களே! நாளை உங்கள் இருவருக்கும் நடனப் போட்டி வைக்கிறேன். அதில் வெற்றி பெறுபவருக்கு தேவலோக பாரிஜாத மாலையை அணிவித்துப் பாராட்டுவேன்." என்று இருவரையும் அனுப்பினான் இந்திரன்.
மறுநாள் தேவ சபையில் நடனக் கலை விற்பன்னர்களும் வல்லுநர்களும் அமர்ந்திருந்தனர். தேவரிஷி நாரதரும் அந்த சபையில் வீற்றிருந்தார். முதலில் ரம்பையும் ஊர்வசியும் தனித்தனியாக நடனமாடினர். இருவரது நடனமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ரம்பையும் ஊர்வசியையும் சேர்ந்து நடனமாடச் செய்தனர். அப்போதும் யாராலும் முடிவு செய்ய இயலவில்லை.
நாரதர் எழுந்திருந்தார்.
"இந்திரா, இங்குள்ள அனைவரும் முயன்றும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இருவரது நடனமும் அவ்வளவு சிறப்பாக இருந்தது. ரம்பை, ஊர்வசி இருவருள் சிறந்த வரைத் தேர்ந்தெடுக்க இங்குள்ளோரால் முடியாது! பூலோகத்தில் உஜ்ஜயினி மாகாளி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளும் விக்கிரமாதித்தனே தகுதியானவன். சகல சாஸ்திர விற்பன்னன். குறிப்பாக நடனக் கலையில் சிறந்தவன். அவனை இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்." என்றார்.
*ஹரிகுமார்*

No comments:
Post a Comment