Sunday, August 20, 2017

பிள்ளைச் செல்வமே! பேசும் தெய்வமே! இரு மணம் கொண்ட திருமணம். 20/08/2017 ஞாயிறு

                           வாலைத்தாயே போற்றி!
பிள்ளைச் செல்வமே! பேசும் தெய்வமே! இரு மணம் கொண்ட திருமணம்.
                                                        
குழந்தை
 
பாக்கிய தடை
இரண்டாம் 
திருமண தோசமும் :-
தாய்க்கு 
தோசம் கொண்ட ஜாதக அமைப்பு  பற்றிய ஓர் ஆய்வு.
.

.
.
அன்பர் ஒருவர் தன் ஜாதகம் காட்டினார் ,
.
.
ஜாதகம் பார்த்து அவரிடம் கேட்டேன் என்னங்க ,
உங்களுக்கு குழந்தை பிறக்க வில்லையா? என்று,
.
.
ஆமாம் சார் திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றார்.
.
.
அண்ணன் ஒருத்தர் கூட உங்களூக்கு #ஆகாது என்றேன் ஆமாம் சார் அவ்ரிடம் பேசி பல வருடம் ஆகிறது என்றார்.
.
.
தங்கை ஒன்று அவங்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்து
இறந்து கூட இருக்கலாம் என்றேன்.
.
.
தங்கச்சி சின்ன வயசிலே இறந்து விட்டது நோய் வந்து என்றார்.
.
.
சரிங்க அம்மா வீடோ, சொத்தோ  உங்களுக்கு வந்து இருக்குமே? என்றேன். 

ஆமாம் சார்.
.
.
அவங்க பெயர்ல இருந்து தான் நான் வாங்கினேன் என்றார்.
.
.
அவங்க உங்க கூட இருக்க கூடாது. எனவே அவங்கள தள்ளி  இருக்க சொல்லுங்க என்றேன்.
.
.
அவங்க தனியா போய் 6 வருடம் ஆகிறது . அவங்க என்னோடு இல்லை என்றார்.
.
.
சரிங்க  உங்களூக்கு பிள்ளை பிறக்காதே என்றேன்.
.
.
சார் எல்லா ஜோதிடரும் சொல்றாங்க பிள்ளை பிறக்கும் என்று

எப்ப பிறக்கும்? என்று சொன்னாங்களா என்று கேட்டேன்.
.
சொன்னாங்க. ஆனால் அது போல இன்னும் பிறக்கல என்றார்.
.
சரிங்க. அப்புறம் எப்படி சொல்றீங்க? என்றேன்.
.
.
சார் உங்க மனைவிக்கு கருப்பபை  கோளாறு இருக்கு. போய் டெஸ்ட் பன்னுங்க. 
கரு தங்காது . உருவாகினாலும் அடிக்கடி கலைந்து விடும் என்றேன்.
.
.
ஆமா சார். ஏற்கனேவே பன்னியாச்சி. அப்படிதான் இருக்குனு 
#மருத்துவர்கள் 
கூறினார்கள். அது போல தான் கரு தங்காது என்றார்கள்.
.
.
அடிக்கடி கரு கலைந்து போகிறது என்றார்.
.
.
உங்களூக்கு இந்த மனைவி மூலம் குழந்தை இல்லை சார்.
.
.
அப்புறம் என்ன சார் பன்றது?.
.
.
உங்களுக்கு இரு தார தோசம் உள்ளது. 
.                                          
.
இரண்டாவது மனைவி மூலம்
குழந்தை பிறக்கும் என்றேன்.
.
.
அதற்கு அவர் சொன்னார். இரண்டாவது திருமணம் செய்ய மாட்டேன் என்றார்.
.
சிரித்து கொண்டே கூறினேன். நீங்க பண்ணுவீங்க.
,
குழந்தை அதன் மூலம் பிறக்கும் என்றேன்.
.
.
சரிங்க என்று போனார்..
.
தற்போது எதேச்சியா பார்க்கும் போது சொன்னார்.
சார் நீங்க சொன்ன மாதிரி ஆயிடுச்சு.
நான் 2ஆவது திருமணம் செய்து விட்டேன்.
மனைவி 5 மாதம் கருப்பமா இருக்காங்க
என்றார்.
.
..
எப்படி இவ்வாறு நடந்தது .
.
.
1
. குழந்தை பாக்கிய த்தடை எதனால் ?
.
லக்னம் பாருங்க கன்னி லக்னம் . லக்னாதிபதி புதன் கேந்திராதிபதி தோசம் அடைந்தது மட்டும் இல்லாம அஸ்டமாதிபதி செவ்வாய் உடன் இருக்கிறார்.
அதனால் வாழ்க்கையில எதையும் அடைய தடை ஏற்படுத்தும் லகனாதிபதி பலம் இல்லன்னா.
.
5
க்குடைய சனி செவ்வாய் பார்வை மற்றும் சூரியன் பார்வை. எனவே 5ஆம் அதிபதியும் பலம் இல்லை,

5
ஆம் இடத்தில் விரையாதிபதி சூரியன். மற்றும் சனி பார்வை உள்ளது. சனி தன் சொந்த வீட்டைப் பார்தாலும் பார்க்கும் பார்வை என்னவோ கெட்ட பார்வை தான்,
அதுதான் புத்திர பாக்கியக் குறையைக் கொடுத்தது,
புத்திர காரகன் குரு அஸ்டமத்தில் கேது உடன் மறைவு .
.
.
அதாங்க பிள்ளை பிறக்க தாமதம் செய்தது.
.
.
2
. மனைவிக்கு கருப்பப்பை பிரச்சனை எதனால் ?
.
.
மனைவி ஸ்தான அதிபதி எட்டில் கேது உடன் மறைவு.
 மற்றும் மனைவியைக் குறிக்கும் களஸ்த்திர ஸ்தானாதிபைதி சுக்கிரன் 6ல் மறைவு.
 மற்றும் ஏழாம் அதிபதியான குரு மீது சனி பார்வை.
எனவே திருமண பிரிவு உண்டாக்கும் அல்லது கருப்பப்பைக் கோளாறு உண்டாக்கும்.
.
.
3.
தங்கை இறக்க காரணம் என்ன ?
.
குரு கேது இணைந்தாலே மூத்த சகோதர நாசம் அல்லது இளைய சகோதர நாசம் உண்டு பண்ணுங்க.
 அதே நேரத்தில் 3க்குரிய செவ்வாயே அஸ்டமாதியாக வருவதாலும்,
அவர் புதனுடன் கூடி 4ல் அமர்ந்ததாலும்
தங்கைக்குரிய ஸ்தானத்தை பார்த்தாலும்
 தங்கைக்கு லக்னாதிபதியே எதிரியாக வந்து அஸ்டமாதிபதியான புதன் உடன் சேர்ந்து இருப்பதால்
தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தாங்க..
இளைய சகோதர நாசம் செய்தது.
.
.
4
. அம்மா  சொத்து எப்படி வந்தது ?
.
பொதுவா லக்னாதிபதி அல்லது 4க்குடையவனுக்கு லக்னம் அல்லது 4மிடத் தொடர்பு பலமாக இருந்தால் கண்டிப்பாக அம்மா வழி மூலம் நல்ல ஆதாயம் உண்டுங்க,
.
அந்த புதன் நிலக்காரகனான செவ்வாய் உடன் கூடி 4ல் அமர்ந்ததால் அம்மா சொத்து இவருக்கு வந்தது..
.
.
5.
அம்மா ஏன் இவருடன் இருக்கக் கூடாது ?
.
.
சரிங்க அம்மா ஏன் இவருடன் இருக்க கூடாது.
 அம்மா என்றாலே நேரா போய் சந்திரன் நிலையைப் பார்க்கனுங்க.
.
இங்கு சந்திர அஸ்டமாதி சூரியனுடன் கூடி சனி பார்வையில் இருப்பதாலும்,
4
க்குடைய குரு அஸ்டமாதி கேது உடன் மறைந்து ராகு பார்வையில் இருப்பதாலும்
அம்மா இவர்கூட இருந்தால் அவங்க உயிருக்கே ஆபத்து,
அவங்களூக்கு ஆயுள் இருந்ததால் அவங்களே பிரிந்து போய்ட்டாங்க,
.
.
6.
 இரண்டாவது திருமணம் எப்படி நடக்கும்.?
.

                                   


.
பொதுவாக 11ல் சனி இருந்தாலே தலைவருங்க சில பேர் 2 குடும்பம் நடத்துவாங்க.
.
அதுவும் குடும்பஸ்தானாதிபதி சுக்கிரன் 6ல் ஆறில் மறைவு.
அதுவும் சனி வீட்டு சுக்கிரன் சொல்லவா வேண்டும்.
கள்ளத் தொடர்பை உண்டு பன்னுங்க. அதுவும் இருக்கு.
.
.
7
ஆம் இடம் , 2ஆம் இடம்,2ஆம் அதிபதி, மற்றும் 7ஆம் அதிபதி மேல் சொன்ன மாதிரி பாதிக்கப் பட்டு 11ல் சனி இருந்தால்
தலைவர்களுக்கு 2 திருமணம் நட்க்குங்க அதுதான் விதி.
அவ்வாறே நடந்தது. அதுதான் சொன்னேன் அவர்கிட்ட.
அவர் பண்ண மாட்டேன்னு பில்டப் பண்ணிட்டார்.

.
7. அதனால் குழந்தை எப்படி பிறக்கும் ?
.
.
11
என்று சொல்லக் கூடிய இடம் 2ஆவது மனைவியைக் குறிக்கும்.
 சந்திரன் 5ஆம் இடத்தில் தன் குடும்பஸ்தானாதிபதி சூரியனுடன் இருப்பதால்
சனி தன் சொந்த வீட்டை பார்த்து கொஞ்ச தீய பார்வை குறைத்ததால்
இரண்டாவது மனைவி மூலம் குழந்தை பேறு கிடைக்கும்.
அதுதான் கூறினேன் போன வருடம்.
.
அவ்வாறே இப்போ கருத்தரித்தாங்க 2ஆவது மனைவி.
,
.
.
.
அலசல் போதுமா?

.
.
.
ஜாதகத்தில் தெரியும் கெட்டதை மறைக்காம சொல்லி
எச்சரிக்கிறேன்.
ஆகவே கெட்ட விஷய பதிவு அல்ல.
வாழ்க்கையில எந்த கெட்டதும் நடக்காமல் இருக்க எச்சரிக்கும் பதிவு.

இது மாதிரி அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு முன்எச்சரிக்கை.
அன்புடன்.


உங்கள் அன்பன்.

Monday, August 14, 2017

இன்று கோகுலாஷ்டமி. கொண்டாடும் விதம் 14/08/2017 திங்கள்


                                           இன்று கோகுலாஷ்டமி.
ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம் கூடிய அஷ்டமி திதியில், இரவு 12.00 மணியளவில், மதுரா சிறைச்சாலையில், வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். 

                                                   
அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம்செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.
                                         
 கண்ணன் அவதரித்த ஆவணி அஷ்டமி நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன். 



கோகுலாஷ்டமி கொண்டாடும்விதம் 
கோகுலாஷ்டமி அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர். 
                                                 
பூஜையறையில் கண்ணன் விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து, நிவேதனப் பொருட்களான வெல்லச் சீடை, சீடை, முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, பால்கோவா, அல்வா, பாதாம் கேக் போன்ற பட்சணங்களுடன் நாவல்பழம், கொய்யாபழம், வாழைப்பழம், விளாம்பழம் போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
      
                                           
முன்னதாக கிருஷ்ணன் பாடல்களைப் பாடி, பிறகு தூபதீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடக்கும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் பார்த்து மகிழ்ந்து, இல்லம் திரும்பி பட்சணங்களை அனைவருக்கும் கொடுத்தபின் நாம் உண்ண வேண்டும். 
                                                 
துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகிமீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான். வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது.
                                                      
ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன்தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான். வசுதேவர்- தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப் பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற் றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. 
அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்). அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர். மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். 
                                          
அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர் கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந் திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.
                                                         
                             
அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை, ""கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளி தேவி. 
                                                      
பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடை யர்களாக வந்த பிரம் பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். 
                            
காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான். கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக் கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். 
                                          
\எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத்தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர். பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, ""இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன்மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான். அதன்பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார். பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர். பின்னர் பூபாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்துவந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால்நீட்டிப் படுத்தார். 
அப்போது வேடன் ஒருவன் மறைந் திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா. 
                                               
கண்ணன் மனைவிகள் ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள். கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள். கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங்கள் . கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்ததாகக் கூறப்படுகிறது.


Sunday, August 6, 2017

, கணவனுடன் பிரச்சனை/பிரிவு. 6/07/2017 ஞாயிறு

சித்தர் போற்றி!                        வாலைத்தாயே போற்றி!                         சிவம் போற்றி! 

கோள்களின் கோலாகலம்!                     கோதையரின்  (அலங்)கோலம்!
காலம் மாறிவிட்டது,
ஒரு 45 வயது பெண்ணின் ஜாதகம் இது.
நான் எப்போதும், ஜாதகம் பார்க்க வருபவரிடம், எதற்காக பார்க்க வந்திருக்கிறார் , அதற்கு தீர்வு என்னவென்று வந்தவுடனே தாளில் எழுதி கையில் கொடுத்து விட்டு பின்பு தான் பேச ஆரம்பிப்பது வழக்கம்.
அவ்வாறு எழுதியது....
1, கணவனுடன் பிரச்சனை/பிரிவு.
2, குழந்தையால் மனக்கஷ்டம்.
தாளை படிக்கும் முன், அந்த பெண் சொன்ன வார்த்தை “சார், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”
அதிர்ச்சியுற்ற நான் , ஜோதிட த்தின் மீது இருந்த நம்பிக்கையில் பேப்பரை படிக்க சொன்னேன்.(லேசான பயத்தோடு தான்)
                                 
படித்து முடித்து அந்த பெண்மணி சொன்ன வார்த்தை “சூப்பர் சார்”.
அடி விழுமோ என்று பயந்திருந்த எனக்கு பாராட்டா? குழப்பம் ஒரு பக்கம், மகிழ்ச்சி மறுபக்கம்.
அந்த பெண்மணி மேற்கொண்டு சொன்னது “ 45 வயசாச்சு . கல்யாணம் ஆகலை. மூன்று வருடமாக ஒருவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்தேன், அவர் தற்போது பிரிந்து சென்று விட்டார். கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பற்றிய மனக்கவலை அதிகமாக இருப்பதாகவும்” சொன்னார்.
நான் நேசிக்கும் ஜோதிடம் என்னை கை விடவில்லை. சில ஜோதிட தீர்வுகள் சொல்லி அனுப்பி வைத்தேன்.
இந்த காலத்தில் திருமணம் என்பதும், தாம்பத்யம் என்பதும் கேள்விக்குறியாகி போன வருத்தமும், அதற்கான காரணத்தை ஜோதிடத்தில் தேடுவதும் தொடர்கிறது… \

நன்றி
- ஸ்ரீ ஹரி ஜோதிட ஆராய்ச்சி மையம்.

No automatic alt text available.
Gokul Gokulan லக்னாதிபதி குரு ஆட்சி பெற்றும் வக்ரம் பெற்றதால் நீசபலன்களை கர்மஸ்தானத்தில் நின்று செய்கிறார்

4&7 குரியவன் நீசம், வீடுகொடுத்தவனும் வக்ரம்--- நீசம்பெற்ற புதன் பார்வை 7ல்


5ல் கேது, 5 குரியவன் 8ல் மறைவு--அந்த சந்திரனை உச்சம் பெற்ற ரோகாதிபதி சூரியன் பார்க்கிறார்.
                                                  

சிற்றின்பத்தை தரவேண்டிய சுக்ரன் ஆட்சி பெற்றாலும், பாவகிரகங்களால் சூழப்பட்டு இருப்பதால் மறைமுக இன்பத்தை நுகர்தல்

படுக்கை சுகத்தை தரகூடிய 12ல் மாந்தி இருந்து, சனியின் பார்வை பெறுகிறார்--சமூகத்திற்கு மாறான தாம்பத்ய சுகம்

ராசிக்கு 7ம் இடத்தில் லக்னத்தின் ரோகாதிபதி உச்சம், 7குரியவன் 8ல் மறைவு.
ராகுவின் பார்வை நீசம் அடைந்த புதன் மற்றும் லக்னத்தின் மீதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் விழுவதும்  கேடு. விளைவு முறையற்ற உறவும்,பந்தமுமே!