Thursday, December 18, 2025

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை

 தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்


தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!


தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!


5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)


6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்

ஆறு பருவங்களையும்

(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!


12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்


இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்


அதேபோல் 2ம் எண் 

இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)


3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்


4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்


எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்.

Thursday, December 11, 2025

சொர்க்கம் யாருக்கு?

 


சொர்க்கம் யாருக்கு?

https://youtube.com/shorts/Ya8O5e3Q6zI?si=_0Jqxb9gbdim8aVb

Wednesday, December 10, 2025

 *நீங்களும் உங்கள் லக்னமும்* 


கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் வெயில் கொடுமையில் வியர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள் 

வெயிலுக்கு இதமாக வரிசை அருகே கம்பி வேலிக்கு அருகே குளிர்பானம் தர்பூசனி துண்டு பழரசம் குளிர்பானம் என பல வியாபிரிகள் தங்கள் தொழிலில் மும்முரமாக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து உழைத்து கொண்டிருந்தனர்


தூரத்தில் ஒலி பெருக்கியில்

*வரிசையில் வாருங்கள் யாரிடமும் தரிசனத்திற்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்  காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டுமே செலுத்துங்கள் ....*

என்று பலமுறை இதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்


வாட்டசாட்டமான இருவர் மற்றும் அவருடன் இரண்டு பெண்களும் அனைவரையும் தள்ளிக்கொண்டு சென்றார்கள்   ஒரு பக்தரின் காலை மிதித்து   இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே கொன்றுவிடுவதை போல் பார்த்து கொண்டிருந்தார்கள்


இங்க எதுக்கு வீன் விஷயங்களை பார்ப்பது கேட்பது என என்னுடன் வந்த என் ஜோதிட ஆசிரியர் இப்படி விளக்கினார்


எல்லா இடத்திலும் ஜோதிடம் உள்ளது நல்லா கவணிச்சிக்க தம்பி



ஒவ்வொருவர் ரியாக்ஷனையும் உத்து பாருப்பா எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க


மிதித்தவனை பார்த்து 

*தம்பி வரிசையில் வாங்க பின்னாடி போங்க என்று சிம்ம கர்ஜனை செய்தாரே அவருக்கு லக்னத்தில் சூரியன் இருக்கும்*


*யோவ் அறிவில்லை குழந்தைகள் இருப்பது கண்ணில் தெரியல என கை ஓங்கினாரே அவர் லக்னத்தில் செவ்வாய் இருக்கும்*


*தம்பி பார்த்துபோப்பா வயசானவங்க இருக்காங்க இல்ல என வாஞ்சையாக பேசினாங்களே அவருக்கு லக்னத்தில் சந்திரன் இருக்கும்*

*யோவ் என்ன கொழுப்பா என கேட்டுவிட்டு மிதித்தவன் முறைத்ததும் அண்ணே உங்களை இல்ல இங்க பேசறேன் என சமாளித்தாரே அவருக்கு லக்னத்தில் புதன் இருக்கும்*

*போகட்டும் விடுங்கப்பா அவருக்கு என்ன அவசரமோ என்றாரே அவருக்கு லக்னத்தில் குரு இருக்கும்*

*இந்த அமளி துமளியிலும் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டு முன்னால் நின்ற பெண்ணை பார்த்துக்கொண்டே ஸ்டைலாக  நிக்கறாரே அவர் லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்*

*எங்க வந்தாலும் இவிங்க  தொந்தரவூ தாங்கலையே என மிக மெல்லிய குரலில் தனக்கு தானே பேசி நொந்து கொள்கிறாரே அவருக்கு லக்னத்தில் சனி இருக்கும்*

*டேய் யார்டா அது நாங்கள்ளாம் மனுஷனில்லையா எல்லாரும் சேர்ந்து தள்ளுங்க அவனை என  கூட்டம் சேக்கிறாரே அவர் லக்னத்தில் ராகு இருக்கும்*

*சரி விடுங்கப்பா என்னத்த கேட்டு என்னத்த செய்றது நம்ம நேரம் சரியில்லை என வேதாந்தம் பேசறாரே அவருக்கு லக்னத்தில் கேது இருக்கும்*

எனக்கு நிதானமாக எதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இரூந்தது நிதானமா யோசிக்கனும் என நினைத்து புன்னகைத்தேன்

நல்ல சுவாரசியமான விதத்தில் சொன்ன நம்ம ஜோதிட ஆசிரியருடன் கோவிலுக்கு வந்தது எவ்வளவு நல்லதாக போயிற்று என மனதில் சந்தோஷம்  


சிறுகதை ஆக்கம்

சுந்தர் சித்தூர் 🙏

தங்க நகைகள் வாங்க உகந்த நாள்

 



Monday, December 8, 2025

நீங்கள் ஜோதிடம் படிப்பவரா? அல்லது ஜோதிட ஆய்வாளரா!

 


நீங்கள் ஜோதிடம் படிப்பவரா? அல்லது ஜோதிட ஆய்வாளரா!


https://youtube.com/shorts/0Emz7cDSjaQ?si=EZkZ3cV8z9vjIx6H

Sunday, November 23, 2025

ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன்

 ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன்



சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க!

மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான்.

சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்!

வான சாஸ்திரி,
பூகோள சாஸ்திரி, தத்துவவாதி,
கவிஞன்,
சரித்திர ஆசிரியர்,
கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்...
அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா?

நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க.

ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இருக்குமாம்.

ஆனா, அதே நாளுலயும் அதே நேரத்துலயும், அலெக்சாண்டிரியாவுல ஒரு குச்சியை நட்டு வச்சா நிழல் விழுந்துச்சாம்.

மத்தவங்க இத பெருசா எடுத்துக்கலை. ஆனா எரடோஸ்தனிஸ் இதுல ஒரு பெரிய ரகசியத்தை கண்டுபிடிச்சுட்டான்!
அவன் யோசிச்சான்:
பூமி தட்டையா இருந்தா, சூரிய வெளிச்சம் ரெண்டு குச்சியிலயும் ஒரே மாதிரிதானே விழுகும்? அப்போ நிழலும் ஒரே மாதிரிதானே இருக்கணும்? ஆனா அது வேற வேற மாதிரி இருக்கே!

இதுக்கு என்ன காரணம்?
பூமி வளைஞ்சிருக்கறது மட்டும்தான் காரணம்!

அலெக்சாண்டிரியாவுல விழுந்த நிழலோட கோணத்தை அவன் அளந்தான்.

அது சரியா 7 டிகிரியாம். அதாவது ஒரு வட்டத்துல 1/50 பங்கு!

சியென்னேவுக்கும் அலெக்சாண்டிரியாவுக்கும் நடுவுல இருக்கற தூரத்தை அளக்க ஒருத்தரை அனுப்பினான்:
அது கிட்டத்திட்ட 800 கிலோமீட்டர் இருந்துச்சாம்.

அப்புறம் அவன் கணக்குப் போட்டான்:
800 கி.மீ. × 50 = 40,000 கி.மீ. – இதுதான் பூமியோட சுற்றளவு!
ஆச்சரியமா இருக்குல்ல? அவன் போட்ட கணக்கு எவ்வளவு துல்லியமா இருந்துச்சுன்னு பாருங்க!

அவன் கிட்ட செயற்கைக்கோள் இல்ல. டெலஸ்கோப் இல்ல. கால்குலேட்டர் இல்ல.
ஆனா அவன்கிட்ட இருந்தது என்ன?

நல்லா கவனிச்சான், ஏன் ஏதுன்னு கேள்வி கேட்டான். அவ்வளவுதான்!

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்!

©️ Carl Sagan
#பூமி #அறிவியல் #வரலாறு #ஆச்சரியம் #தமிழ்தேசம் #சயின்ஸ் #அலெக்சாண்டிரியா #எரடோஸ்தனிஸ் #நிழல் #குச்சி #கணிதம் #வானியல் #புவியியல் #தத்துவம் #கவிதை #நூலகம் #அறிவு #முயற்சி #வெற்றி #சாதனை










Friday, November 14, 2025

தனிஷ்டா பஞ்சமி'

 தனிஷ்டா என்பது ஜோதிடத்தில் "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கிறது, 




மேலும் 'தனிஷ்டா பஞ்சமி' என்பது அவிட்டம், சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களில் ஏற்படும் மரணத்தைக் குறிக்கிறது. இந்த ஐந்து நட்சத்திரங்களையும் 'தனிஷ்டா பஞ்சமி' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நட்சத்திரங்களில் ஒரு மரணம் நிகழ்ந்தால், அது இறந்த ஆன்மா மேலுலகம் செல்வதற்கான தடையை ஏற்படுத்தும் 'அடைப்பு' எனும் தோஷத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. 

தனிஷ்டா: "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கும்.

தனிஷ்டா பஞ்சமி: தனிஷ்டாவுடன் மற்ற நான்கு நட்சத்திரங்களான சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவற்றையும் சேர்த்து குறிப்பிடுவது.

அடைப்பு (தனிஷ்டா பஞ்சமி): இந்த நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் மரணம் ஏற்பட்டால், அது இறந்த ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்லும் வழியை அடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

விளைவுகள்: இந்த அடைப்பு தோஷம், அந்த வீட்டில் அடுத்த ஒரு வருடத்திற்குள் தொடர் மரணங்களையோ அல்லது மரணத்திற்கு சமமான கண்டங்களையோ ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

பரிகாரங்கள்: இந்த தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

*தனிஷ்டா பஞ்சமி*


*தனிஷ்டா பஞ்சமி என்றால்* 13நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் மேலுலகம் செல்ல ஏற்படும் தடை ஆகும்.

அதற்காக முன்பு வீட்டை பூட்டி வைப்பார்கள்.சிலர் உடலை பின்புறம் வழியே எடுத்து செல்வார்கள்.சிலர் கூறையை பிரித்து எடுத்து செல்வார்கள்.

இப்போது அது அவ்வளவாக நடைமுறையில் இல்லை

அவிட்டம்,சத்யம்,பூரட்டாதி,உத்திரட்டாதி---6மாதம்

ரோகிணி,4மாதம்

கார்த்திகை,உத்திரம். 3மாதம்

மிருகசீரிஷம்,புனர்பூசம்,சித்திரை,விசாகம்,உத்ராடம். 2மாதம்

மேற்கூறிய நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு(தடை) அதன்படி இருக்கும்.


அதற்கு பரிகாரம் வெங்கலகிண்ணத்தில் நல்லெண்ணெய் தானம் செய்து அந்த அடைப்பு காலம் வரை தினமும் இறைவனுக்கு தீபம் காட் டி நிவேதனம் செய்யவேண்டும்.

சில சமயங்களில் ஆவிஉருவில் பயம் காட்டுவார்கள்.என கூறப்படுகிறது.


கருடபுராணத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.

சூரியன் 3 நட்சத்திரங்கள் 

செவ்வாயின் 3 நட்சத்திரங்கள்

குருவின் 3 நட்சத்திரங்கள்

சத்யம் உத்ரட்டாதி ரேவதி ரோகிணி ஆகியன 

ஆக 13 நட்சத்திரங்கள் இதில் சேரும்.


மேலும்  அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அந்த ஆத்மாக்கு நிறைவேறா ஆசை ஒன்று இருக்கும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை...

Saturday, November 8, 2025

கிரக லீலா டிவி

 

*ஜோதிடம் மற்றும் ஜாமக்கோள் பிரசன்னம் சார்ந்த வீடியோக்கள் எமது கிரக லீலா டிவி யூடியூப் சானலில் பார்க்கலாம்*

https://youtube.com/@grahaleela5195?si=LLq7tc2iVR17X0Ea



நீங்களும் உங்கள் கர்மாவும்

 https://youtu.be/jJ7USYkjE7g?si=6mrHdKVuLblpRL6p





இரண்டாம் திருமண அமைப்பு* யாருக்கு?

 *இரண்டாம் திருமண அமைப்பு*



 ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் ராகு கேதுக்கள் போன்றவைகள் இருந்து. பதினோராம் இடம் குரு அல்லது சுக்கிரனின் பார்வை பதினோராம் அதிபதி ஆட்சி இது போன்ற அமைப்புகள் இரண்டாம் திருமணம் அமைப்பை கொடுக்கும்.


கணவனை இழந்த பெண்ணிற்கு இரண்டாம் திருமண அமைப்பு ஏழாம் இடம் கெட்டு பதினோராம் இடம் பலமாக இருக்கும்.


 பொதுவான விதிகளில் ஏழாம் அதிபதி பதினோராம் இடத்திலும் 


 பதினோராம் அதிபதி ஏழாம் இடத்திலோ 


 இரண்டாம் அதிபதி பதினோராம் இடத்திலோ அல்லது 


 பதினோராம் அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தாலோ இரண்டாம் திருமண அமைப்பு உண்டாகும்.

Wednesday, November 5, 2025

ஐப்பசி அன்னாபிஷேகம் 5/11/2025 புதன்

 



ஐப்பசி அன்னாபிஷேகம் என இன்று கொண்டாடப்படும் வழிபாட்டின் தாத்பரியம் ஆழமானது, மிக மிக ஞானமானது..

அது வெறுமனே சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு மகிழும் உணவுப் பண்டிகை அல்ல, அன்னதானம் என கொடுக்கும் அன்றாட மரபும் அல்ல‌.

அதன் தாத்பரியமும் ஆழ்ந்த போதனையும் நுணுக்கமானது.

அன்னமய கோசம் எனும் உணவால் வாழும் இவ்வுடலைத் தாண்டி ஆத்மத்தை உணர்ந்து, இதர நான்கு நிலைகளைக் கடந்து ஆனந்தமய கோசம் எனும் இறைநிலைக்கு, இறைவனோடு கலக்கும் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இப்பண்டிகையின் போதனை.

சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை, அதாவது பக்குவப்பட்ட நிலை. உண்பதற்கு தயாரான பக்குவத்துக்கு வந்துவிட்ட அரிசியினை சோறு என்கின்றோம், அது அரிசி பக்குவமாக வெந்த நிலை என்பதையே குறிக்கும்.

பழந்தமிழரிடம் சோறு எனும் வார்த்தை பக்குவப்பட்டதை அல்லது மென்மையாகிவிட்டதைக் குறிக்கும், தமிழரிடம் அரிசி சாதத்துக்கு அடிசில் எனும் பெயர்தான் இருந்ததே தவிர சோறு எனும் வார்த்தை இல்லை.


"நெய்பட அடிசில்" என சொல்லும் வரியும் "அக்கார அடிசில்" என சொல்லும் வரியும் இங்கே சோற்றுக்கு அடிசில் எனும் பெயர் இருந்ததைத்தான் சொல்கின்றன‌.

ஆம் சோறு என்பது அரிசிசோற்றை மட்டும் குறிக்கும் என்பதும் தவறான வாதமாகும், அடிசில் என்பதுதான் சரியான வாதமாகும்.

அது அன்னம் போல் வெண்மை நிறத்துக்கு வருவதால் அன்னம் என்றும் அழைக்கப்பட்டது.

நெல்லுச்சோறு, கம்பஞ்சோறு, வரகு சோறு மூங்கில் சோறு என எல்லா தானியனங்களின் பக்குவப்பட்ட நிலையே சோறு.

மென்மையான பகுதி, அல்லது பக்குவமான நிலை சோறு எனப்படும் என்பதற்கு சோற்றுக்கற்றாழை சிறந்த உதாரணம்.

ஆம், கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, யானை கற்றாழை என பலவகை உண்டு. சோற்று கற்றாழையின் உட்பகுதி சோறு போல மென்மையானது என்பதால் அது சோற்றுக்கற்றாழை என்றாயிற்று.


இன்னும் கிராமங்களின் வார்த்தைகளில் கூட பனைமரத்தின் மென்மையான பகுதி பனஞ்சோறு என்று அழைக்கப்படும் வார்த்தை, சோறு என்பது அரிசி சாதம் அல்ல, அது மென்மையான பதநிலை என்பதை சொல்கின்றது.

இப்பொழுது முக்கியமான விஷயத்துக்கு வரலாம்..., "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என ஏன் சொன்னார்கள்?

எங்கே இறைவன் இருப்பானோ அந்த மனதில் ஞானம் இருக்கும், ஞானம் இருக்கும் இடத்தில் கடினத்தன்மை இராது, மாறாக அன்பும் கருணையும் மிகுந்திருக்கும், அந்த மனம் இளகிய மனமாக "சோறு" எனும் பக்குவ நிலையினை அடைந்திருக்கும்.

இதைத்தான் "சோறு கண்ட இடம்" அதவாது ஞானமிக்க இளகிய மனம் இருக்குமிடம் சொர்க்கம் என்றார்கள் இந்துக்கள்.

இன்னும் அவர்களிடம் இதை விளக்கும் வாக்கியம் உண்டு, "ஆத்துக்குள் நின்று அரோகரகா அரோகரா என கத்தினாலும் சோற்றில் உண்டாம் சுகம்" என்பது சித்தர் வாக்கு.

இது "அகத்துக்குள் இருந்து அரோகரோ என கத்தினாலும் சோற்றுக்குள் உண்டாம் சுகம்" என்ற வரியின் திரிபு.

அகம் என்றால் வீடு அல்லது இறைவன் இருக்கும் ஆலயத்தில் நின்று அரோகரா என சொல்லிக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு பக்குவ நிலை அதாவது சோறு போன்ற பதநிலையினை அடைந்தால்தான் நிம்மதி கிட்டும் என்பதே சித்தர் சொன்ன பொருள்.

ஆம், சோறு என்பது அரிசியினை பொங்கிவைக்கும் விஷயம் அல்ல, சோறு என்றால் பதம் எனப் பொருள்.

சாறு, சேறு, சோறு என மூன்றும் தொடர்புடைய வார்த்தைகள், சாறு என்றால் நீர், சேறு என்றால் கூழ், சோறு என்றால் மிருதுவான திரவநிலை, மிதமான பக்குவம்.

ஆம் அந்த சரியான பக்குவ நிலைதான் "சோறு".

இன்னும் கொஞ்சம் ஆழமாக செல்லலாம்..


சமஸ்கிருததில் சாதம் என்றால் அது மூலப்பொருள்.


"சாத்" என்பது பரம்பொருளை குறிக்கும் ஒரு வார்த்தை. சாத்வீகம், சாக்தம் என்பதெல்லாம் அதன் சாயலான பொருளே. சாத்+அம் என்பது ஒரு பக்குவ நிலையினைக் குறிக்கும் வார்த்தை.


ப்ரசாத் அல்லது பிரசாதம் என்பது இறைவனுக்கு இடும் படையலாயிற்று, இன்றும் கோவில்களில் கொடுக்கும் பிரசாதம் என்பதன் பொருள் "இறைவனுக்கு படைக்கப்பட்டது" என்பதே.


(வரப்பிரசாதம் எனும் வார்த்தை இறைவன் வழங்கிய வரம் என்று பொருளானதும் இப்படித்தான், ப்ரசன்னம் எனும் தோன்றுதலை குறிக்கும் வார்த்தை, வெளிப்படுவதை குறிக்கும் வார்த்தை பிரசவம் என்றானதும் இப்படிதான்.


பிரசவம் எனும் வடமொழி சொல்லுக்கு புறம்தருவித்தல் எனும் அழகான தமிழ் சொல் உண்டு, அது கடல் கடந்த தமிழரிடம் இன்றும் உண்டு)


ஆம், சாதம் என்பது அரிசி சோற்றை குறிக்கும் என்பது தவறான வார்த்தை.


சாத்துதல், படைத்தல் எனும் பொருளில் வரும் வார்த்தை அது, இன்றும் வைணவர்கள் இறைவனுக்கு சாற்றிய அமுதமான அடிசிலை இறைவனுக்கு "சாற்றிச் சொன்ன அமுது' என்பதாக 'சாத்தமுது' என தமிழில் சொல்வார்கள்.


சாத்திய அமுது என்பது திரிந்து சாதம் ஆகியிருக்க சில வாய்ப்புகள் உண்டு.


இதனால் ஆழ சிந்தித்தால் இன்னும் விஷயம் விளங்கும்..


ஏன் எத்தனையோ தானியங்கள் இருந்தபொழுது சோறு படைத்தார்கள்? சிவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் இதர அரிசிகள் படைக்காமல் ஏன் சோற்றால் அபிஷேகம் செய்தார்கள்?


அதுவும் புழுங்கல் அரிசியில் செய்யாமல் ஏன் பச்சரிசியில் செய்தார்கள்?


இரு விஷயம் முக்கியமானது, முதலில் அரிசி அன்று அபூர்வ பொருள், அதிகம் விளையாது, அன்றாட உணவில் கம்பும் கூழும் உண்டே தவிர அரிசி அதிகம் இல்லை, அந்த நாள் இறைவனுக்கு சாத்துதல் எனும் பெயரில் மக்களெல்லாம் வயிறாற உண்ண வைக்க நோக்கம் இருந்தது.


வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துமதம், உடை, திருநீறு போல அரிசி அன்னமே வெண்மையாக இருப்பதைக் கண்டது, ஆம் அரிசி அன்னம் போல் மனம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதும் தத்துவம்.


இரண்டாவது கண்டிப்பாக பச்சரிதான் வைப்பார்கள், காரணம் அவித்த நெல் முளைக்காது. அதாவது அதில் உயிர் இல்லை, அதை அவித்தால் இறந்ததை அவித்ததாகின்றது, உயிர் இல்லாததை இறைவனுக்கு படைக்காமல் பச்சரிசி எனும் அவிக்காத அரிசியினை முதல் பொங்கலாக படையலாக இட்டார்கள்.


சோறு எனும் நிலைக்கு அரிசி பக்குவப்பட்டு மானிடருக்கு பயனாவது போல, மனம் பக்குவப்பட்டு மானிடருக்கும் இறைவனுக்கும் மனிதன் பயனுற வாழவேண்டும், பக்குவப்படா அரிசி பசியாற்ற உதவாது, பக்குவப்படா மனித மனம் இறைவனை அடையாது.


இதுதான் சிவலிங்கத்துக்கு அன்னம் சாற்றும் தத்துவம்.


(இறந்தோருக்கு பிண்டம் வைப்பதிலும் இந்த அர்த்தம் உண்டு, நான் பக்குவப்பட்டுவிட்டேன், இறப்பு இயல்பானது தவிர்க்க முடியாதது என அதை தாங்கும் பக்குவத்தை அடைந்து விட்டேன் என பொருள்.

மூன்று பிண்டம் என்பது முக்காலமும் சாவு உண்டு என மனதை பக்குவப்படுத்தும் ஒரு தத்துவம் )


சரி, ஐப்பசியில் ஏன் சரியாக வைத்தார்கள்? எத்தனையோ காலம் இருந்தும் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு ஏன் அன்னமிட்டார்கள்?


ஆடியில் விதைப்பது புரட்டாசி இறுதியில் அறுவடையாகும், மறுபடி ஐப்பசியில் விதைப்பது தைமாதம் அறுவடையாகும்.


ஆடிமாத காவேரி பொங்கி அதன் விளைச்சலின் முதல் படையல் சிவனுக்கு இடுதல் விஷேஷம், தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்ட லிங்கத்துக்கு பிரமாண்ட அன்னம் சாத்தப்பட்டது இதனாலேதான்.


எல்லா பவுர்ணமியும் விஷேஷமானது என்றாலும் ஐப்பசி எனும் துலா மாத பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உண்டு.


இதனை ஒரு புராணக் கதையோடு சொன்னார்கள் இந்துக்கள், அங்கே வாழ்வியல் நெறி சொல்லி மக்களுக்கு போதித்து அப்படியே பிரபஞ்ச அருளைப் பெற வழி செய்த மதம் இந்துமதம்.


ஆம் , இந்த பவுர்ணமி அன்றுதான் சந்திரன் தன் சாபம் தீர்ந்து பதினாறு கலைகளுடன் பூரண சந்திரனாக ஜொலிக்கும் நாள்.


என்ன சாபம் அது?


வானியலை என்றோ ஆழமாக மிக நுணுக்கமாக கற்றிருந்த இந்துமதம், சந்திரனின் இயக்கமும் சுழற்சியும் பலனும் சொல்ல மானிடருக்கு அவரின் சுபாவப்படி சொல்ல மானிட உறவுகளை சுட்டிக்காட்டி புரியவைக்க முயன்றார்கள்.


அதன்படி 27 நட்சத்திரங்களுக்கும் சந்திரனுக்குமான தொடர்பை மண உறவு என்றார்கள்.


அத்திரி முனிவர் அனுசுயா தம்பதியர் மகனான சந்திரனுக்கு மகா தபஸ்வியான தட்சனின் மகள்கள் 27 பேரை திருமணம் செய்து வைத்தான் தட்சன்.


"எல்லா பெண்களையும் ஒன்றுபோல் சமமாக நடத்த வேண்டும்" என்பது அவன் விதித்த நிபந்தனை, சந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.


எனினும் சந்திரனுக்கு நெருக்கமான மனைவியான ரோகினி நட்சத்திரத்திடம் மட்டும் அவன் தனி அன்பு காட்டியதால் மாமனார் தட்சன் அவனுக்கு தேய்ந்து போக சாபமிட்டான்.


அவனின் கலைகள் ஒவ்வொன்றாய் அகன்றன‌.


அவன் 16 கலைகளில் தேர்ச்சி பெற்று அதிபதியாய் இருந்தான்.


மேதைக்கலை, அருக்கீசக்கலை, விடக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக் கலை, நிரோதினிக் கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை, சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை, . வியோமரூபினிக்கலை, அனந்தைக்கலை, அனாதைக்கலை, அனாசிருதைக்கலை என பதினாறு.


இவைதான் பதினாறு வகை செல்வங்களின் அடிப்படை.


பின் சிவனை நோக்கி அவன் தவமிருக்க, அவன் சாபம் தீர்த்த சிவன், அவன் மேலும் தேயாதவாறு தலையில் அணிந்து கொண்டு சொன்னார்...


"சந்திரனே! நான் உன்னை அழியாமல் பார்த்துக் கொண்டேன், ஆனால் தட்சன் பெரிய தபஸ்வி என்பதால் அவன் சாபமும் பலிக்கும்.


அதன்படி ஒருமுறை தேய்ந்து ஒருமுறை எழுந்து வருவாய், துலா ராசியில் சூரியன் வரும் நாளில் உன் பதினாறு கலைகளுடன் பூரணமாகி ஜொலிப்பாய்" என வரமருளினார்.


சோமனுக்கு வரமருளியதால் அவர் சோமநாதர் என்றானார்.


இந்நாளில் இந்துக்களுக்கு போதிக்கப்பட்ட தத்துவம் இங்கிருந்துதான் வருகின்றது.


சந்திரன் என்பது மனம் சம்பந்தப்பட்ட கிரஹம் ஒருவரின் மனோநிலை ஜாதகத்தில் சந்திரன் இருப்பதை பொறுத்துத்தான் அமையும்.


சந்திரனே தன் குறை தீர சிவனை சரணடைந்தது போல், அவன் 16 கலைகளுடன் ஜொலிக்கும் இந்நாளில் சிவனை சரணடைந்தால் மனதின் எல்லா கவலையும் தீரும், மனோபலம் அதிகரிக்கும் என்பதை சொல்லும் நாள் இது.


இன்று சிவவழிபாடு அவசியம், மகா அவசியம். அதனாலே இந்நாள் மிக மிக முக்கியம்.


ஜாதக ரீதியாக துலாராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது எதிரே மேஷ ராசியில் சந்திரன் வருவதால் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்கள். அப்போது சந்திரன் ஒளி பூரணமாகும்.


இந்த பூரணமான நாளில் சிவன் அருளில் சந்திரனின் பலன்களை பெற்றுக்கொள்ளுதல் நன்று.


இன்று சிவாலயத்தில் வழிபாடுகள் முக்கியம், அன்னதானம் முக்கியம். தானம் கொடுத்தலும் பெறுதலும் நன்று.


அப்படியே இரவில் இன்றைய பவுர்ணமி ஒளியில் நனைதல் நன்று, இந்து மரபில் நிலாச்சோறு என்பது தொடங்கி, பவுர்ணமி இரவில் வழிபாடு என்பதெல்லாம், சந்திரன் அருள் கிடைப்பதற்கான வழிமுறையே.


சூரிய வெளிச்சம் உடலில் படுவது போல் சந்திரன் ஒளியும் உடலில் படுதல் அவசியம், இன்றைய நாகரீக உலகில் அது இல்லை, மனரீதியாக பலர் சந்திக்கும் நெருக்கடிக்கு அதுதான் முதல் காரணம்.


இன்று சிவனை வழிபட்டு இரவில் சந்திரனில் முழுக்க நனைய ஏகப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ள முடியும், இரவு நிலவொளி வழிபாடு தியானம் போன்றவை இன்னும் கைகொடுக்கும்.


இந்த புனிதமான நாளில் சிவவழிபாடும் பவுர்ணமி பூஜையும் செய்து, பூரண சந்திரன் அருளோடு, எல்லோர் மனமும் பெரும் நிறைவு பெற பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...

Tuesday, September 2, 2025

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

 திருமணத்திற்கு நாள்


பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள் 


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)


 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 


3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. 


4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் 


5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது


 6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். 


7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. 


8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.


 9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. 


10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 


11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது. -


 இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.#ஓம் முருகா

புஷ்கர நவாம்சம் - பிரம்மாண்டமான மாற்றம்

 புஷ்கர நவாம்சம்  - பிரம்மாண்டமான மாற்றம் பிரமிக்கத்தக்க ஏற்றம் 



https://youtu.be/EIYvqgmQT5s?si=QqPc7D8T6OFWUMPP

Monday, September 1, 2025

பாரம்பரிய ஜோதிடத்தில் எப்படி பலன் பார்க்கப்படுகிறது?*

 *பாரம்பரிய ஜோதிடத்தில் எப்படி பலன் பார்க்கப்படுகிறது?* 


1.ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் தன்மைக்கு ஏற்ப பலன் தரும்..

2. அந்த கிரகத்தைப் பார்த்த சுப கிரகம்/ அசுப கிரகத்தின் பார்வை  அந்த கிரகத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்கிறது.

3.அந்த கிரகம் அமர்ந்த வீட்டு அதிபதி இருக்கக்கூடிய நிலையில் (ஆட்சி, உச்சம், நீசம், வக்ரம், வர்க்கோத்தமம், மறைவு)அதன் செயல்பாட்டை மாற்றுகிறது.

4. அந்த கிரகம் நின்ற நட்சத்திர சாரம் எதுவோ அதற்கு ஏற்ப செயல்படுகிறது.

5. அந்த வீட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய கிரகத்தோடு இணைந்து  மற்றொரு கிரகத்தின் செயல்பாட்டோடு இணைவு பெற்று பலனை புதிய வகையில் செயல்படுகிறது.


இவ்விதம் ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் வழியாக பலன்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.


வேத ஜோதிடம் (ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பண்டைய இந்திய வேதங்களில் இருந்து உருவான ஒரு பாரம்பரிய இந்து ஜோதிட அமைப்பாகும். இது கிரகங்களின் நிலை மற்றும் நகர்வுகளைக் கொண்டு, ஒரு நபரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படும் ஒரு கணிப்பு முறையாகும்

Friday, July 25, 2025

ஜோதிட புதிருக்கான விடை 1/7/2025 செவ்வாய்க்கிழமை


 


அனைவருக்கும் வணக்கம்

உங்கள் ஜோதிட அறிவையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் பகுதி தான் *புதியன கற்போம்.!*

இந்த பகுதியில் நீங்கள் கற்றறிந்த அரிய ஜோதிடக்கலையானது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமயமாக புதிய புதிய விஷயங்களை மேம்படுத்திக் கொண்டு காலத்திற்கேற்ப வளர்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்!

அந்த வகையிலே புதியன கற்போம்!
பகுதியில் ஒரு பிரிவாக *ஜோதிடப்புதிர்* வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் நாம் ஏற்கனவே படித்த விஷயங்களை நினைவு கூர்வதற்கும் ஜோதிட ஞானத்தை வளப்படுத்திக் கொள்ளவும் உதவும் பகுதியாகும்.

எனவே அனைவரும் இதில் பங்குபெற்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.


Shanmuganandam S:
[6/30, 10:02 AM] Anand: *நேற்றைய தினம் ஜோதிடப் புதிர் எண் 1 கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கான சரியான விடை இதோ....!*


[6/30, 10:02 AM] Anand: விருந்தில் பரிமாறப்பட்டவையும் அதன் காரகங்களும் என்ன? என்று கேட்கப்பட்டது.

1.சப்பாத்தி - சூரியன்
2.சாதம்.       -  சந்திரன்
3.பருப்பு சாம்பார் - செவ்வாய்
4.கொத்தவரங்காய் பொரியல் - புதன்
5.பாயாசம் - குரு
6.வாழைப்பழம் -சுக்ரன்
7.எலுமிச்சை சாதம் - சனி
8.உளுந்து வடை - ராகு
9.அவியல்  - கேது

இந்த அறிவு விளையாட்டு புதிர் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஏக தேசம் ஓரிரண்டு விடைகளைத் தவிர ஓரளவு சரியான விடையை கூறினார்கள்.

அவர்களின் பெயர்கள்:

1.திருமதி ஷான்சுபா செல்வராஜ்
2.திரு.கணேசன்
3.திரு.ஸ்ரீதர்
4.திரு.சரண்
5.திரு.ராஜகோபால்
6.திருமதி.ராஜகுமாரி
7.திருமதி.வித்யா

அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

தங்கள் விடையை ஒப்பிட்டுப் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மற்றவர்களும் முயற்சி செய்யலாமே!
பங்கு பெறுவதுதான் முக்கியம்.
வெற்றி பெறுவது அப்புறம்.

ஒரு விருந்தில் நவகோள்கள் எப்படி இடம்பெற்றன என்பதைப் பார்த்தோம்.

விருந்து எப்படி இருக்கு?

நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....

Bye.. see u..😅

[6/30, 10:02 AM] Anand: வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.

அனைவரும் பயன்பெற *வெற்றி பெற வாழ்த்துக்கள்!!*
*
நன்றி வணக்கம்

*திரு S.ஷண்முகானந்தம்* *MABEd.,RTD HM*.
*பொள்ளாச்சி*
94437 28932.
[6/30, 10:02 AM] Anand: இந்த புதிய பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?
தொடரவா?

இது பற்றி உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

[6/30, 9:59 AM] +91 95247 27546: மிகவும் அருமை தொடருங்கள் ஜோதிடர்கள் அறிவை இது விசாலமாக வருவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தங்கள் தொண்டு தொடரட்டும்🙏🙏🙏

[6/30, 10:00 AM] +91 99444 44678: 🙏🏻

[6/30, 10:06 AM] Sukran Srithar fb: 🙏

[6/30, 10:21 AM] Sukran Rajagopal: அய்யா தொடருங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏

நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....🙏


ஜோதிட புதிர்


 அனைவருக்கும் வணக்கம்.🙏




இந்த ஜோதிடப் புதிர் பகுதி நாம் கற்ற ஜோதிட அறிவை வளப்படுத்திக் கொள்ளவும் ஜோதிடத்தில் வேறு நிலைகளை அறிந்து மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் பகுதியாகும்.

இப்பகுதியில் தினமும் ஒரு ஜோதிடப் புதிர் வெளியாகும்.

ஜோதிடம் சார்ந்த பல விஷயங்கள் கொண்ட தாக ஜோதிடப்புதிர் அமைந்திருக்கும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிருக்கான விடை கண்டு பிடிக்க வேண்டும்.

புதிருக்குரிய விடை மறுநாள் வெளிவரும்.

தங்கள் பதில்களை
எனக்கு தனியாக அனுப்பி வைக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் அன்புடன்
ரிஷி
S.ஷண்முகானந்தம்
ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிடம் மையம் பொள்ளாச்சி
94437 28932.



*ஜோதிடப்புதிர்*

ஞாயிற்றுக்கிழமை மதியவேளை.
அனைவரும் நன்றாகவே சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரம் இது.

ஓய்வு வேளையில் சற்று ரிலாக்ஸாக இருப்போமே!
அதனை பயனுள்ளதாக மாற்றினால் நலம் தானே!
அதற்காக வெறுமனே படுத்திராமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு இதைப் பற்றி சிந்திப்போமே!

உங்களுக்கான ஒரு special meals அனுப்பியுள்ளேன்.
உடனே சாப்பிட்டு விட வேண்டாம்.

தட்டைப் பாருங்கள்.



அதில் உள்ள உணவும் காய்கறிகள் எல்லாவற்றையும் உற்று கவனியுங்கள்.
பின் அதனை ஒவ்வொரு கவளமாக எடுத்து சாப்பிடுங்கள்

அப்படி சாப்பிடும் போது.... உங்கள் கையில் உள்ள உணவுப் பதார்த்தம் எந்த கிரகத்தின் காரகம் என உங்களால் சொல்ல முடிகிறதா?....

இதுதான் இன்றைய ஜோதிடப்புதிர்?


இது எப்படி இருக்கு விருந்து?
சுவையான விருந்துதானே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!புதிரின் விடையை!
                     __________________

*புதியன கற்போம்*

*ஜோதிடப் புதிர்*
ஜோதிட பாடத்தில் புதிய பார்வை இப்பகுதி.

*மூளைக்கு வேலை.*

*இன்றைய ஜோதிடப்புதிர்!*

*படம் பார்த்து பதில் சொல்!*

நன்கு கவனியுங்கள்!
பின் யோசித்து பதில் சொல்லுங்கள்.!
எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்?


*தட்டிவிடுங்கள் உங்கள் பொறியை...(ஜோதிட அறிவை சிந்தனையை)*...
*
*கண்டுபிடியுங்கள் புதிரின் விடையை...*


இது உங்கள் தேடுதலுக்கான வேளை(லை)...


உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

That is ur participation is most important.

உங்கள் பதிலை குழுவில் பதிவிட வேண்டாம்.எனது கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்!

மற்றவர்களும் தனியாக உட்கார்ந்து புலம்பட்டுமே!
சாரி! யோசிக்கட்டுமே!

என்ன ஓகே வா?

*புதிருக்கான விடை நாளை வெளி வரும்!....*

அதுவரை உங்களிடமிருந்து ... Good bye..🖐👋.







Thursday, July 24, 2025

பெரும் புகழும் தனமும் தரும் புஷ்கர நவாம்சம் பகுதி 1

 


பெரும் புகழும் தனமும் தரும் புஷ்கர நவாம்சம் பகுதி 1 


https://youtu.be/jcp_64i5lqc?si=3e81YnH_mUJWJqoN








உங்கள் கிரக லீலா டிவியில் 



புஷ்கர நவாம்சம் பகுதி 2

 

உங்கள் கிரக லீலா டிவி சானலில் 

https://youtu.be/3G45x4mHptc?si=q1YoC3HmIUUbDcqO


Thursday, July 17, 2025

 ஆடி  01-ந் தேதி 

17   07   2025.

வியாழக்கிழமை *தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்* ....

உத்தராயணம், தட்சிணாயனம் என்றால் என்னவென்று தெரியுமா.....?

😮😟😮😮😮

சூரியனின் நகர்வின் அடிப்படையில்..... இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் உத்தராயண புண்ணிய காலமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆகும். *உத்தராயணம்* என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம் என்று பொருள்.


💯💯💯💯💯


 ( மற்றொரு பொருளாக.... அயனம் என்றால் பின் தொடர்தல். *எப்படியெனில்*.... ராமாயணம் ராமனைப் பின்பற்றி  

ராம + அயனம் = *ராமாயணம்* என்று ஆயிற்று.) 


💯💯💯💯💯



சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள்,  அதாவது தை மாதம் முதல் நாள் உத்தரயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை *தட்சிணாயனம்* என்று அழைக்கிறார்கள். ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன், அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது பங்குனி மாதம் வரை தெற்கு நோக்கியே பயணிக்கிறார்.


சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம்.  உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.


⬇️⬆️⬇️⬆️⬆️


 *வேறுபாடுகள்* 


நமக்கு உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரண்டு காலங்கள் கூடிய ஓர் ஆண்டே தேவர்களின் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு ஆண்டாக இருப்பது *தேவர்களுக்கு ஒரு நாளாக* சொல்லப்படுவதின் காரணம் இதுதான். இவற்றுள் உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் கூறப்படுகிறது. உத்தராயண காலத்தின் பகல் பொழுது நீளமாகவும், தட்சிணாயன காலத்தில் இரவுப் பொழுது  நீளமாகவும் இருப்பதை நாம் பார்க்க முடியும்.


=======


 *உத்தராயண புண்யகாலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று* பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்று *மகர சங்கராந்தி பண்டிகையும்* கொண்டாடப்பட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுகிறோம்.


 அதேபோல.....

 *தட்சிணாயனத்தின் தொடக்க  நாளான ஆடி மாத முதல் நாளிலும்* பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அன்று தேங்காய்ப்பாலில் பாயசம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.


=======


தேவர்களின் மாலைப்பொழுதாக தட்சிணாயனம் வருவதால்  பெரும்பாலான பண்டிகைகள் அந்தக் காலத்தில் இருப்பதைக் காணலாம். குளிர்ச்சியான தட்சிணாயன காலம் பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகிய ஆடி மாதத்திலேயே ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் வரலட்சுமி விரதம் என்று அம்பிகை, மகாலட்சுமி ஆகியோருக்கு மிகவும் விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.


⬇️⬆️⬇️⬇️⬆️


ஆடியைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் இப்படி பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதைக் காணலாம்.

 நாமும் நமக்கு பண்டிகைகளையும் விசேஷங்களையும் கொண்டு வரும் தட்சிணாயன புண்ணிய காலத்தை வரவேற்றுக் கொண்டாடுவோம்.


தெரிந்து கொள்வோம்.....


🙏🙏🙏🙏🙏

Saturday, July 12, 2025

பாரம்பரிய ஜோதிடம் பயிற்சி வகுப்பு*

 *ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் நடத்தும் ஆன்லைன் மூலம் வீடு தேடி ஜோதிடம்*


*அடிப்படை பயிற்சி வகுப்பு ஆரம்பம்* 

அட்மிஷன் நடைபெறுகிறது.

 *பாரம்பரிய ஜோதிடம் பயிற்சி வகுப்பு* 

 *_தினமும் வாட்ஸ் அப்பில் பாடங்கள் & பயிற்சி_* 


 *வாரம் ஒரு நாள்*Google meet*மூலம் ஆன்லைன் நேரடி வகுப்பு* 

 *பயிற்சி காலம்: 3 மாதம்* 



 *பயிற்சி கட்டணம் விவரங்களுக்கு-* 

தொடர்புக்கு

*திருS.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,RTD Hm* 

 *ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்* 

 *பொள்ளாச்சி 642 002*

*செல்:99657 28932*. 

            *94437 28932* .

விருந்தும் மருந்தும் 12/07/2025 சனிக்கிழமை

 விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்பர் நம் முன்னோர்கள்.

ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா?



இப்போது தெரிகிறதா? இதன் பொருள்.


Sunday, May 25, 2025

ஹாட்ரிக் வெற்றி துலாம் ராசி பலன் 26/03/2025

ஹாட்ரிக் வெற்றி! துலாம் ராசி பலன்!

 சனிப்பெயர்ச்சி பலன்கள் 


எமது கிரக லீலா டிவி சானலில் பாருங்கள் 

லிங்க்:

https://youtu.be/YWYA21CXQqA?si=_9Sb3nJ4AByR3ahd

Tuesday, March 11, 2025

*மார்ச் 14 /2025 அன்று ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் 2025*

*ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் 2025*


இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி காலை 9.27மணிக்கு ஆரம்பம்


 *சந்திர கிரகணம்*

சென்னை: 2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகங்கள் உள்ளன. ஆனால் இதில் ஒரே ஒரு கிரகணம்தான் இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


 *சந்திர கிரகணம்* 


மார்ச் மாதம் 14ம் தேதியன்று *சந்திர கிரகணம்* நடைபெறுகிறது. ஆனால் *இதை இந்தியாவில் பார்க்க முடியாது.* ஏனெனில் சந்திர கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும்.

இந்தியா தவிர, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரியும்.


*சூரிய கிரகணம்:*

 அதே மாதத்தில் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதுவும் இந்தியாவில் தெரியாது. மற்றபடி வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் தெரியும்.


*கிரகண நேரம்* 


இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி காலை 9.27மணிக்கு ஆரம்பம்.

மதியம் 3.03 மணிக்கு முடியும்.

நண்பகல் 12.28 மணிக்கு உச்சம் அடையும்.


இந்தியாவைப் பொறுத்தவரை கிரகணம் நடைபெறும் நேரம் முழுவதும் பகல் நேரத்தில் நிகழ்வதால் நம் நாட்டில் இக்கிரகணத்தைப் பார்க்க முடியாது.



மார்ச் 14 ஆம் தேதி நிகழும் இந்த சந்திர கிரகணம் *ரத்தச் சிவப்பு நிறத்தில் சந்திர கிரகணம் தெரியும்*.

** (*)**

Monday, March 10, 2025

ஜாதக கணிதம் செய்தல் Graha Leela Tv

 


ஜாதக கணிதம் செய்தல் Graha Leela Tv

https://youtu.be/_eU5j4doY3A?si=lhMzNdeiW9Jl15ub


Wednesday, February 12, 2025

_மாசி_மாத_பிறப்பு #மகத்துவம்_நிறைந்த_மாசி_மாதம்.*13/02/2025 வியாழக்கிழமை

 *#_மாசி_மாத_பிறப்பு #மகத்துவம்_நிறைந்த_மாசி_மாதம்.*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை "கும்ப மாதம்" என்றும் அழைப்பார்கள். 



இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

🌝

*#மாசி_பௌர்ணமி*

இந்த ஆண்டு மாசி 29ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (13.03.2025) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

🌝

அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

🌝

*#மாசி_மகம்*

மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.

🌹

அந்த வகையில், வரும் (12.03.2025) புதன் கிழமை அதாவது, மாசி 28ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

🌹

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.

🌹

*#மாசி_சங்கடஹர_சதுர்த்தி*

மாசி 04 ஆம் தேதி அதாவது ஞாயிறுயன்று (16.02.2025) மாசி சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.

☘️

*#மகா_சிவராத்திரி* 

மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

☘️

அந்த வகையில், வரும் 26.02.2025 புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

🌑

*#மாசி_அமாவாசை*

அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 15 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (27.02.2025) மாசி மாத அமாவாசை வருகிறது.

🌹

*#காரடையான்_நோன்பு*

வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.

இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு, பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.

🌹

*#அமிர்தம்_நிறைந்துள்ள_மாதம்.*

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

🌹

*#கும்பமேளா_கொண்டாட்டம்.*

இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

🌹

*#மாசி_மாத_புண்ணிய_பலன்கள்.*

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும் என்பது ஐதீகம்.

🌹

*#பகவான்_மகா_விஷ்ணு_ஸ்ரீ_வராக_அவதாரம்.*

பகவானின் மிக முக்கிய 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்.

🌹

*#சாவித்திரி_தன்_கணவன்_உயிரை #எமனிடம்_இருந்து_மீட்ட_மாதம்.*

சத்தியவான் மரணமடைய, அவனது உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜரிடம் மன்றாடி, போராடி, வாதம் செய்து, தன் கற்பின் சக்தியினால், தன் கணவரின் உயிரைத் திரும்பப் பெற்றாள் சாவித்திரி. இந்த சம்பவம் மாசி மாதக் கடைசி தினத்தில் நிகழ்ந்ததாக, ஸ்ரீமத் மகாபாரதம் கூறுகிறது.

Thursday, February 6, 2025

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?


 






ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
*கடந்த வெள்ளிக்கிழமை* *(31/1/2025) அன்று* *புதியன கற்போம் பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்*
*தெரிந்த கதை தெரியுமா விடை பகுதியில் ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?* என்று குழுவில் கேட்கப்பட்டது.

சிறப்பு ஆய்வு என்றாலே அது சற்று விரிவாகவே இருக்கும்.
காலநிலை மாற்றம், வேற்று இடம், உணவு பழக்கம், தூக்கம் ஓய்வு எல்லாமே புதியன.

இது எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு பயணத்தால் ஏற்படும் *Jet log* ஆல் உடல் நிலை சற்று சீராக ஒரு வாரம் அல்லது 10நாட்கள் ஆவதால் உடனடியாக என்னால் உங்களுக்கு பதில் விளக்கம் கொடுக்க முடியாது போனைதற்கு மன்னிக்கவும்; வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*இதோ அதன் விளக்கமும் விவரமும்*



அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

நேற்றைய தினம் *தெரிந்த கதை தெரியுமா விடை?* பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்
ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஒரு சிலர் ஆய்வு செய்து சிறப்பாக பலன்களை கூறியிருந்தனர்.அவர்களுக்கு *எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

இதுபோன்ற சிறப்பு ஆய்வில் நாம் கலந்து கொண்டு பலன் கூறும் போது பல புதிய  விஷயங்கள் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும்.
தங்களது ஜோதிட அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவும் பட்டைத் தீட்டிக் கொள்ளவும் முடியும்.

மேலும் ஒவ்வொருவரின் ஜோதிட பார்வை  வெவ்வேறு வகையான கோணங்களில் விரிந்து பலன் கூறுவது வியப்பாக இருக்கும்.
இப்படியும் ஒரு விஷயத்தைக் கண்டறிந்து பலன் கூறமுடியும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் இதுமாதிரி ஆய்வினைப் *புதியன கற்போம்* என்று தலைப்பில் பதிவிடுகிறோம்.

சரி. கேள்விக்கு வருவோம்.

ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

ஜாதகரின் வயது 66

லக்னம் மிதுனம்

கன்னி ராசி

நட்சத்திரம் ஹஸ்தம் 4ஆம் பாதம

*நடப்பு தசா* *புதன் தசை/சுக்கிரன் புக்தி*

*புதன்* தசா
     /\
*1   4 க்குரியவர்*
   \  /
   *5ல் துலாம் ராசியில்*
(குருவுடன் இணைவு)

*சுக்கிரன் புக்தி*
       /\
    5.  12
      \  /
      *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

*புதன் தசா நிலை*

*லக்னாதிபதி புதன்* குருவுடன் இணைந்துள்ளதால் சுபத்துவம் பெற்று 5ஆமிடத்தில் வலுவாக உள்ளார்.
மேலும் தனது நண்பரும் *லக்ன யோகரான சுக்கிரன்* வீட்டில் சுகமாக அமர்ந்துள்ளார்.
எனவே சுக்கிரனின் காரகத்துவங்களான கலை, இசை, ஓவியம், காதல், நுண் கலைகளில் நாட்டம்,மன மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் ஆழ்மன சிந்தனை, இறைநிலை நாட்டம், குலதெய்வம் அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் ஆகியனவும் குருவருளும் திருவருளும் இயல்பாகவே அமைந்துவிடும். கிடைக்கப்பெறும்.

*சுக்கிரன் புதன் பரிவர்த்தனையால்* புதன் ஆட்சி உச்சம் பெறுபவர் ஆவதால் மேலும் கல்வியில் சிறந்தவராகவே புலமை மிக்கவராக திகழ்வார்.

அத்தோடு புதன் 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் 5ன் திரிகோணங்களான 1 மற்றும் 9ஆம் பாவங்களும் மறைமுகமாக இயங்கும்.
அதனால் நீண்ட தூரப் பயணங்கள் ஆன்மீக நாட்டம் தெய்வ வழிபாடுகள் தீர்த்த யாத்திரை சாதுக்கள் குருமார்கள் சந்திப்பு ஆசீர்வாதங்கள் கிட்டும்.



*புதன் தசா நாதன் பலன்கள்*

*காரகமும் பாவமும் இணைந்த பலன்*

மேற்கண்ட  பலன்கள் தசா புக்தி காலங்களில் நடைமுறையில் செயல்படும்.
இத்தோடு கோட்சார பலனும் அனுகூலமாக வலுவாக இருக்கும் பட்சத்தில் தசா பலன்கள் நன்முறையில் நற்பலன்கள் விளையும்.

அந்த வகையில் ஜாதகருக்கு புதன் தசா லக்னாதிபதி தசாவாக 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் அதன் பலன்கள் நன்மை தருவதாக அமையும்.லக்னாதிபதி
புதன் குருவோடு இணைந்து இருப்பது சுப பலன்கள் கூடுதலாக இருக்கும்.

*கோட்சாரத்தில் ராசிக்கு 4ஆமிடத்தில் புதன் குருவின் வீட்டில் தனுசுவில் இருப்பது சுப பலனே தரும்.*


அதேபோல லக்னப்படி 5ன் மற்றுமொரு திரிகோணமான 9ஆமிடமும் சேர்ந்து இயங்குவதால் *9ஆமிடத்தின் பாவக பலன்களையும் வெளிப்படுத்தவே செய்வதால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.*

*வெளிநாட்டில் வாழும் மகள் மற்றும் பேத்தியைக் காணவேண்டி நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.*


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

இதனை லக்னாதிபதியாகிய ஜாதகர் அனுபவிக்க கிரகங்கள் செய்துள்ளன.

*ஆக 1,5,9 திரிகோணங்கள் இயங்கி தசா புக்தி காலங்களில் பலனை அனுபவிக்க* *கோட்சாரமும் துணை புரிந்துள்ளன என்பது தெளிவாகிறது*.


*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
       */\*
    *5.  12*
      *\  /*
       *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

புக்தி நாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டு அதற்கு ஏற்ப செயல்படுபவர் என்பதால்
*தசா நாதன் புதன் 5ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்குவதால் புக்தி நாதன் சுக்கிரன் 5,12க்குரிய பாவ பலன்களை 4ஆமிடத்தின் மூலமாகவே செயல்படுத்துவார்.

அதேசமயம் *புக்தி நாதன் பலவான் ஆவதால்* *சுக்கிரன் 4ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்கும் (8,12).

எனவே 5,12ன் பாவ பலனை 4ஆமிடத்தின் வாயிலாக செயல்படுத்தும்.
அத்தோடு 8,12 திரிகோணங்களும் தங்கள் பங்களிப்பை தவறாமல் அளிக்கும்.

இப்போது பாவகத்தையும் காரகத்தையும் இணைத்து விடுங்கள்.
சுக்கிரன் தரவுள்ள
முழு பலனையும் அறிந்து கொள்ள முடியும்.

தசா நாதனுக்கு சொல்லப் பட்ட பலனோடு சுக்கிரன் தனது *காரக ஆதிபத்திய* பலன்கள் சேர்த்து கொடுப்பார்.

ஆக 5,8,9,12 ஆதிபத்திய பலன்களை ஜாதகரை அனுபவிக்க புக்தி நாதன் சுக்கிரன் செய்வார்.

*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
      */  !   !   \*
    *5.  8  9  12 பாவ     பலன்கள்*
      *\  /* /. /
       *4ல் கன்னி ராசியில் சுக ஸ்தானத்தில்*
இருந்து வீடு, வண்டி, வாகனம், கால்நடைகள் வீட்டு உபயோகப் பொருட்கள், தாயார், உயர் நிலை படிப்பு வாயிலாக வெளிபடுத்தும்.

*12ன் செலவினத்தை விரையத்தை சுக்கிரன் லக்ன சுபர் ஆவதால் ஜாதகருக்கு சுப விரையமாக்கியது.*

அதன் வெளிப்பாடாக வீட்டில் *CCTV CAMERA set* செய்யப்பட்டது.

*4 சக்கர வாகனமான கார் service* செய்யப்பட்டது.

பயணத்தின்போது தேவை யான *Luxury materials* ஆன *கோட், சூட், dresses, Travelling Bag, suitcase* இன்னும் பிற சுக்கிரனின் காரகங்களுக்குரிய பொருட்கள் வாங்க செலவு செய்ய வைத்தது.

லக்னாதிபதி புதன் 1 மற்றும் 4 ஆமிடங்களுக்கு அதிபதி ஆனாலும் கால புருஷ தத்துவத்தின் படி 3,6க்குரியவராக வருவதால் *பிறர் சகாயம் உதவி, ஆதரவுடன் (3) எந்தவொரு சுகத்தையும் (4)* அனுபவிக்க நேரிடும் என்பது ஜோதிட விதி.

அதன்படி *மருமகன் மூலமாக அவரது sponsorship வாயிலாக* *வெளிநாட்டு பயணம் செல்வதற்கு அமைந்தது.*

சுக்கிரன் 4லிருந்து செயல்படுவதால் சுகமான சொகுசு வாகனமான விமானம் மூலம் வெளிநாட்டு பயணம் ஏற்பட்டது.

*பேத்தியைக் கவனித்து கொள்ள வேண்டியே* பயணம் ஏற்பட்டது *(5ஆமிடம்)*

8ஆமிடம் வெளிநாடு
9ஆமிடம் நீண்ட தூரப் பயணம்
*(3நாட்கள் விமானப் பயணம்)*

*வான்வழி பயணம்*
*கோட்சாரப்பலன்*


மேற்கண்ட ஜாதக ரீதியாக அமைப்பு இருப்பினும் *கோட்சாரம்* இந்த நிகழ்வுக்கு எவ்வாறு துணை புரிந்துள்ளன என்பது பார்ப்போம்.

*பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்* 👇


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

லக்னாதிபதி புதன் சுப கோள் குருவின் வீட்டில் ராசிக்கு 4ல் அமர்வு.
எதையும் அனுபவிக்கும்
சுகமான நிலை.ஜாதகர் ஓகே.

ராசிக்கு குருவின் சுபபார்வை வேறு.கேதுவின் குழப்பநிலை மாறி ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.
ராசிக்கு 3,5 ஆமிடம் குருவின் சுப பார்வையால் தைரியம் முயற்சி ஆகியன வெற்றியைத் தரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் வலு பெறுவதால் குலதெய்வம்,தெய்வ அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் பேரன், பேத்திகள் மீது பிரியம் உண்டு.

செவ்வாய் பார்வை புதனுக்கு படுவதால் செயல்பாடுகள் துரிதமாக நடைபெறும்.

புக்தி நாதன் சுக்கிரன் காற்று ராசியான கும்பத்தில் அமர்வு.
தனது நட்பு கிரகமான சனியின் வீட்டில் சுகமாக சனியோடு இணைவு.

சனி ஆகாய தத்துவத்திற்குரியவர்.

*எனவே சுக்கிரன்  காற்றில் ஆகாயத்தில் மிக உயரத்தில் பறந்து செல்லும் சுகமான சொகுசு வாகனமான விமானத்தில் பயணிக்கும்படி நிகழ்காலம் ஏற்றதாக அமைந்தது.*

(38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.)

*ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், 7ஆமிட அதிபதி குருவின் இணைவால் தனது துணைவியாருடன் சேர்ந்து அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்டார்.*

மேலும் 7ஆமிட செயல்பாடாக புதிய சமுதாய சூழல் மற்றும் மக்கள், சமுதாய அமைப்பு, வேற்று இனமொழி மதத்தினரோடு பழகுதல் தொடர்பு ஏற்பட்டது. *ராசியில் கேது மற்றும் 7ஆமிடத்தில் உள்ள ராகு அமைவு*
.

*4லில் இருந்த சந்திரன் ராகுவின் சாரமான சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம்*

வெளிநாடு செல்லல் அமைப்பு வேற்று மொழி பேசும் அந்நிய தேசம் வாசம் செய்தல் நிலையைத் தந்தது.

*வெளிநாட்டில் வாசம் செய்தல்*

பேத்தியை playing schoolக்கு அழைத்து *(5, 9ஆமிடம்*)*சென்று வருதல்.
*
சற்று தள்ளியுள்ள சிறிது தூரம் பயணம் செய்து பெரிய Departmental storeக்கு சென்று வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் purchase & shopping செய்தல். *.(4,7ஆமிடம்)*

அதேபோல கோவில்களுக்கு சென்று வருதல்.*.(9ஆமிடம்)*

மருமகனின் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருதல் *.(7ஆமிடம்)*

அவர்கள் வீட்டில் நடக்கும் birthday party போன்றவற்றில் உற்சாகமாக கலந்து கொள்ளல் *.(5ஆமிடம்)*

*லக்னத்திற்கு 4ல் உள்ள சூரியன்* கோட்சாரத்தில் ராசிக்கு 5ல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மேலோங்கும் என்பதால் தெய்வ ஸ்தலங்கள் சென்று வழிபட்டு வருதல் நிலை உருவாகும்.
கற்ற கலையின் வாயிலாக நிரந்தர வருமானத்திற்கு வழியும் ஏற்படும்.

இதுபோன்று ஒரு ஜாதகத்தில் கேள்வி கேட்கப்படும் போது எவ்வாறு ஆய்வு செய்வது என்பது பற்றி உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய சரியாகவே  பலன்கள்  கணித்துள்ளனர்.

அவர்கள் *அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

அவர்கள் கணித்த பலன்கள் உங்கள் பார்வைக்காகக் மேலே முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!

*....விரைவில் புதிய தொடர் ஆரம்பம்.....*

*நன்றி வணக்கம்*
*திரு S.ஷண்முகானந்தம்*
*M A.B.Ed., RTD Hm*
*ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் பொள்ளாச்சி*
*Camp: Henrico Richmond Virginia*



சுக்கிரன் முனியாண்டி

குரு வாழ்க .குருவே துணை. ஜோதிட கலை ஞானம் ஆன்மீக செம்மல் திருவாளர்.சன்முகாநந்தம் அவர்கள் பதிவு எளிதில் புரியும் படி தெளிவாக உள்ளது. வணக்கம் சார்
கா.முனியாண்டி
சிவகாசி 🙏🙏🙏🙏

                நன்றி வணக்கம் 🙏