Thursday, May 30, 2019

குருவருள் திருவருள் 30/05/2019 வியாழன்

குருவருள்
திருவருள்
வாரியார்,,,,
                                   

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.

தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
                                          Image may contain: one or more people
ஓ! கடவுள் என்று ஒன்றுஉண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

தம்பீ, காண முயலுகின்றேன்.''

கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''

இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''

ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை;

இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.

உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'

என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.''

தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான்.

தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''
                                                 Image may contain: 2 people
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
                                              
மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
                                    Image result for தேன்
தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''

என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது?

பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய்.

பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள்.

அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "

உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.

ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''

எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.

அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.''

ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
                                                Image result for கண்ணாடி
தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.

ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

                                Image may contain: 5 people

தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தார்.

                                             இறையே குருவே சரணம்...


                                                Image may contain: text

Friday, May 17, 2019

சேனாபதியின் அரசாட்சி 16/05/2019 வியாழன்

இன்றைய காலத்தில் ஏன், எந்த வீட்டிலும் அமைதி, நிம்மதி, ஒற்றுமை இருப்பதில்லை ?

இதை ஜோதிட  ரீதியில் பார்க்கலாம்.

கால புருஷ தத்துவப்படி வீட்டை குறிக்கும் நான்காம் பாவ ராசி
கடகம்.

இங்கு.... சண்டை, சச்சரவு, அடிதடி, அவசரம், படபடப்பு, வேகம், இரைச்சல், மின்சாரம் இவற்றிக்கு காரணமான....
செவ்வாய் *நீசம்*

பழங்காலத்தில்.....ஏன்.... ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வரை....  எந்த வீட்டிலும் செவ்வாயின் காரகங்களான..... அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை,கத்தி, திருகுகல் போன்றவை வேகமாகவும் . முக்கியமாக.....  அதிக ஓசையுடனும் இயங்க வில்லை.

அடுத்து... இந்த.... வீடு என்ற.... கடக ராசியில்.. தாய்மை காரகன்.... அமைதி காரகன்... மனோகாரகனான
*சந்திரன்* ஆட்சி


மேலே குறிப்பிட்டுள்ள...
இந்த செவ்வாயின் காரகத்துவ.... பொருட்கள் அனைத்தையும்.....

சந்திரனின் ஆதிக்கமுள்ள....பொறுமையும்.... சகிப்புத்தன்மையும்.... கொண்ட
தாய்மார்களே மிதமான வேகத்தில்.....

நீச்சத்தன்மையை அடக்கி *ஆட்சி* செய்தார்கள்.....

இதே..... கால புருஷ நான்காமிட வீடு என்ற கடக ராசியில்.....

தெய்வீக இறையருள் காரகம் பெற்ற *குரு உச்சம்* பெறுகிறார்.
அதன்படி..... ஒரு வீட்டில் தாய் தான் இறைவழிபாடு செய்ய வேண்டும்.

ஏனெனில் தாய் மட்டுமே வீட்டில் உள்ள எல்லோர் நலனிலும் அதிக அக்கறை காட்டுபவர்.

எனவே...... கால புருஷ தத்துவப்படி.....

ஒரு வீடு என்பதில் சந்திரனின் கட்டுப்பாட்டில்

*நீச்ச செவ்வாயும்....*
*உச்ச குருவும்....* இயங்கினால் மட்டுமே அந்த வீடு.... வீடாகவும்... கோயிலாகவும்... இருக்கும்.

இன்றைய காலத்தில்....

கால புருஷ தத்துவம் செவ்வாயின் காரகத்துவமான.... மின்சாரத்தின்.... ஆதிக்கத்தில் எல்லாமே சீர்குலைந்து விட்டது.

எல்லோர் வீட்டிலும் செவ்வாயின் ஆதிக்கமான... மின்சாரத்திலேயே அனைத்தும் இயங்குகிறது.

நாலாமிடம் என்ற சுகஸ்தானத்தில் நீச்சமாக......
இருக்க வேண்டிய செவ்வாயை *உச்சமாக* மாற்றி அதன் பலத்தை பெருக்கிவிட்டோம், அதிகப்படுத்திவிட்டோம்.

எல்லோர் வீட்டிலும் செவ்வாயின்..... அவசரம்... வேகம்... இரைச்சல்.... ஓசை.... எப்போதும் இயக்கத்திலேயே உள்ளது.

ஓசை இன்றி.... மெதுவாக..... அம்மா அம்மியில்....
கைப்பட அரைத்த சட்னி....
ஆட்டுக்கல்லில் அரைத்த இட்லி மாவு....

இப்போது.... அம்மாவைக்குறிக்கும்... சந்திரனின் *தொடர்பின்றி செவ்வாயின் மின்சார துணையுடன் இரைச்சலோடு வேகமாக அரைபடுகிறது*

எல்லா வீடுகளிலும்..... *குரு* என்ற காற்று இயற்கையான வேகத்தில் சுழலவில்லை....

*செவ்வாய்* என்ற மின் விசிறியால் தான் குரு என்ற காற்று வேகமாக தூண்டப்படுகிறார்....

இங்கு செவ் + குரு சேர்க்கை ஏற்படுகிறது....

எனவே.... எல்லா  வீடுகளிலும் சுவாசிக்கும்....
உயிர் காற்று கூட...
சண்டை, கோபம் என்ற செவ்வாயின் கலவையில் மாறிவிடுகிறது

இப்படி வீடுகளில் நீச்சமாக இருக்க வேண்டிய.... செவ்வாயை.... உச்சமாக  இயக்கிவிட்டு....எங்கே நிம்மதி....... எங்கே நிம்மதி....... என்று தேடினால் அதுதான் *காலக்கொடுமை*

நம் தேவைகள் நிறைவேற ஆயிரம் வசதிகள் இருந்தும் no peace of mind.

சேனாபதியின் கையில் ஆட்சி இருப்பின் இப்படித்தான்!

Sunday, May 12, 2019

தோசை ரோஸ்ட் ரெடி 12/05/2019 ஞாயிறு

தோசை.

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும். ஆன்மிகமும்,ஜோதிடமும்...

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.

அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் குருதி(ஆண்) ,சுக்கிரன்(பெண்)

இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே
தோசையை Clock vice சுட்டால் தான் வரும்,பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே

இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்

ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள்
ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில்
வழங்குகிறார்
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,

( கல்லில் ) தோய்த்துச் செய்வது
என்னும் பொருளில்

தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,

மக்கள் பேச்சு வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு.

ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்.

Friday, May 3, 2019

நாம யாரு? 3/05/2019 வெள்ளி


  நாம யாரு? பாலா? நெய்யா?





👉 *பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.*

👉 *தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.*

👉 *வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.*

👉 *பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.*

👉 *இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.*

👉 *பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.*

👉 *பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.*

👉 *தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.*

👉 *வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.*

👉 *ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.*

👉 *உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது*

*அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள்.*

*தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்.*

*தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள்.*

அதற்கு எளிய வழி!

அன்னையின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் அவள் நம்மை எப்படி ஆக்குவது என்பதை அவளே முடிவு செய்திடுவாள்.

*பின் அப்பொழுது பாருங்கள்.*

*நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான* *மனிதனாக இருப்பீர்கள்.*

இப்போது சொல்லுங்கள்!

நீங்கள் பாலா? நெய்யா?

இதற்கு அன்னையின் பதில்

பாலும் நெய்யும்.

💪🏼 *வெற்றி நிச்சயம்*👍🏼

Thursday, May 2, 2019

கவுசிகரின் கதை!!!! 1/05/2019 புதன்



கவுசிகரின் கதை!!!!!

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.

ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம்தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'......

                      
ஓர் கண்ணோட்டம்.....

ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......

தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.

பொறுமையாக இதைப்படியுங்கள்.

கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.

கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.

ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.

அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.
                

கவுசிகனுக்கோ கோபமான கோபம்.

கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள்.

கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.

அவள் மேலும் சொன்னாள்.

"
நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?
கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள்.

இன்று #எத்தனைபெண்கள் #இந்தஉண்மைகளைப் #புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.

வீட்டில் குழந்தைகள் தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

கடமைகளைச் செய்வதுதான் உண்மையான வழிபாடு என்றும், சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா ?
இந்த மகாபாரதக் கதை!

கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.

அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ..ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
               



காரணம்,தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர்.இறைச்சி வணிகர்.

கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும்,
முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
                                              

கொஞ்சம் பொறுங்கள்.மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.

பின்னர் வீடு போனதும்,தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர்.இது வழிவழியாக வந்த தொழில்.நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.
          


இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன்.மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.

எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன.

 
ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள்.
அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.



இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.

பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.

இந்தப்பக்தி வெறும் வேஷமில்லையா?

இன்று எத்தனை சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர வேண்டிய இளைஞர்கள் வேலைக்காரர்களாக, இலவச (பரவச!) ஊழியர்களாக வலம் வருகிறார்கள் தெரியுமா?


மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில் கொள்ளி வைத்துவிட்டு பகவான்கள் பின்னாலும், அல்ப ஆனந்தாக்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது!....

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும்.இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல,

உங்கள் இலக்கினை அடையும் வரை.