Tuesday, March 26, 2019

ஜாதகரீதியாக உடல் அமைப்பு 24/03/2019 ஞாயிறு

ஒருவரின் உடல் அமைப்பு வித்தியாசங்கள் (எந்த லக்னம் ஆனாலும்)

லக்னாதிபதி குருவின் வீட்டில் இருந்தால்  ஜாதகர் குண்டு உடல் உடையவராக இருப்பார்.

லக்னாதிபதி செவ்வாய் வீட்டில் இருந்தால் கட்டுடல் அமைப்பை பெறுவார்.

லக்னாதிபதி சுக்ரன் வீட்டில் இருந்தால் பெண் உடல் போன்றும் வசீகரமாக இருப்பார்.

லக்னாதிபதி புதன் வீட்டில் இருந்தால் ஜாதகர் ஒல்லியான உடல் அமைப்பை உடையவராவார்.

லக்னாதிபதி சனிசரன் வீட்டில் இருந்தால் ஜாதகர் இளம் வயதை கொண்டிருந்தாலும் சற்று முதிர்ந்த தோற்றம் உடையவராக இருப்பார்.

லக்னாதிபதி சூரியன் வீட்டில் இருந்தால் கம்பீரமான உடல் அமைப்பை பெறுவார்.

லக்னாதிபதி சந்திரன் வீட்டில் இருந்தால் அழகான முக அமைப்பு மற்றும் சீரற்ற உடல் அமைப்பை உடையவராக இருப்பார்.
ஹஜ்

இவை அனைத்தும் பொது பலனாக காண பெற்றாலும் என் அனுபவத்தில் உண்மையாக இருக்கிறது.

No comments:

Post a Comment