குபேர பூஜை செய்வதற்க்கான முறையும் விளக்கமும்!
திருமதி.Vidya Devarajan அவர்களின் வேண்டுக்கோளுக்கினங்க
-சடையப்ப சுந்தரராஜன் அவர்களின் பதிவிலிருந்து கூடுதலாக மந்திரமும் படமும் சேர்ந்து வெளியிடப்படுகிறது.
ஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன்
உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம் அரகஜா, அகில் புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் சேர்க்க முடியுமோ அத்தனை யும் சேர்த்து தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் தேங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும்...
மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம். கலசத்துக்கு முகம் வைத்து அலங்கரிக்கலாம். எல்லாம் நமது விருப்பமே....
..இது மஹாலட்சுமி.
அதற்கு முன் குபேர சக்கரம் அந்த எண்களோடு பச்சரிசி மாவு கொண்டு கோலம் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்கள் அளவு காசுகள் வைக்கலாம். மொத்தம் 216 காசு தேவைப்படும். அடுத்தமுறை செய்யும் போது தங்கம் வெள்ளியாக வைக்க அருள வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.
சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும்.
குபேரன் படம்...சிலை
பிள்ளையார் எல்லாம் வைக்கலாம். வலம்புரி சங்கு கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சமெல்லாம் வைக்கலாம்.
பூஜையில் வாழைபூ அவசியம்....
இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்கவேண்டும் என்பதற்காக...
நைவேத்யம்...
லட்சுமிக்கு 5 வகை கனிகள்.
அதில் செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம்..
குபேர மகாராஜாவுக்கு உலர்திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா கேசரி, பாதாம்பால் இப்படி வசதிக்கேற்ப...
தீபம் ஏற்றவும்.
முதலில் பிள்ளையார் வழிபாடு..
அருள்நிதியே கணபதியே
அடிபணிந்தோம் என்றும் நீ கதியே!
அனுதினம் உன்னையே தொழுவோர்க்கே
அறிவோடு செல்வமும் தரும் நிதியே!
மகாலட்சுமி வழிபாட்டுக்கான ஸ்தோத்திரம்
ஓம் சபரிதேவ்யோ மம க்ருஹே லட்சுமி ஸ்திர குரு குரு ஸ்வாஹா|| சொல்லி மஹாலட்சுமி ஸ்தோத்தி ரங்களும் சொல்லலாம்.
அடுத்து குபேர வழிபாடு..
குபேர மந்திரம், போற்றி
எல்லாம் சொல்லி குபேர மந்திரத்தை ஆளுக்கு கொஞ்சமாக 108 அல்லது 1008 முறை ஏககாலத்தில் சொல்லலாம்..
குபேர போற்றி 108
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி சொல்லி குபேர மந்திரம் சொல்லவும்..
#குபேரன்_மந்திரம்
#ஓம்_யட்சாய_குபேராய
வைஸ்வரவணாய
#தநதாந்யாதிபதயே_தநதாந்ய
ஸம்ருத்திம்மே தேஹி
#தாபய ஸ்வாஹா||
-108 முறை
தூப தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்து பால் , கேசரி போன்ற பிரசாதங்களை வினியோகம் செய்து விட்டு மற்றது அப்படியே இருக்கட்டும்...
அடுத்த நாள் காலை மறு பூசை செய்து மகாலட்சுமி மந்திரம் 108 சொல்லி பூசித்து சிறிது நேரம் விட்டு கலசம் எடுத்து உள்ளே உள்ள தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து சிறு பாட்டில்களில் லீக் இல்லாமல் அடைத்து கேஷ் பாக்ஸ் மற்றும் தொழில் இடங்கள் என வைத்து கொள்ளலாம்...
இன்று
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 2 ம் நாள் வியாழக்கிழமை 19.10.2017 சர்வ அமாவாஸ்யை திதி சித்ரா நக்ஷத்ரம் சித்தியோகம் கூடிய நன்நாளில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை லாப கெளரியில் சுக்ர ஹோராவில் லக்னம் பூரட்டாதி உத்திரட்டாதி சந்தி காலம் மீன லக்னத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர ஸம்பத்து பூஜை செய்ய சகல சம்மத்தும் பெற்று வாழ்வாங்கு வாழுவும் பேரும் புகழும் பெறுவார்கள்.
ஸர்வ செளபாக்ய ப்ராப்தி ரஸ்து...

No comments:
Post a Comment