Saturday, January 27, 2024

தைப்பூச ஜோதி தரிசனம் (25/01/24)🔥

 🔥தைப்பூசம் !🔥


🔥 வடலூர் ஜோதி தரிசனம் !🔥



🔥அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை மகா மந்திரம் ஒலிக்க தைப்பூச ஜோதி தரிசனம் (25/01/24)🔥


🔥ஏழு திரைகள் தத்துவம் !🔥


🔥ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி🔥


🔥கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, தூய கன்ணாடியின் வழியே பேரொளிப் பிழம்பை ஞான சபையில் வள்ளலார் அமைத்தது எதற்கெனில், மாயா சக்தி என்னும் திரைகள் விலகி மனம் தூய்மை பெற்றதும், உள்ளொளியாய் இறைவன் விளக்கம் தருகிறான் என்பதைப் புறத்தில் காட்டுவதற்கேயாம்.🔥


🔥“அருள் ஒளிவிளங்கிட ஆணவம் எனும்ஓர் இருளற என்உளத்து ஏற்றிய விளக்கே (அகவல், 1495–-96) என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில் வள்ளலார் கூறியிருப்பதும் இதைத்தான்.🔥


🔥அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை 

ஜோதி வடிவில் அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.🔥


🔥தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.🔥


🔥அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை !🔥

🌿🌺🌿ஸ்ரீமஹாலக்ஷிமியும் மருதாணியும்🌿🌺🌿

 🌿🌺🌿ஸ்ரீமஹாலக்ஷிமியும் மருதாணியும்🌿🌺🌿



ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் மருதாணியை அணிந்துக் கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.


இராமர், இராவணனை போர்செய்து கொன்று விட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 


அப்போது அன்னை சீதாதேவி இராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.


“எங்களுக்கு எதுவும் வேண்டாம்.  இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 


உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ் ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அது போதும்.” என்றது மருதாணி செடி.


அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற் கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிரு க்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 

அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இரு க்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.


அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 


இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொ ள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.


அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.


மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.


வெள்ளிகிழமையில் மருதாணியை மகாலஷ் மியை மனதில் நினைத்து கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.  மகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.


மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🌺🙏🌺

Monday, January 8, 2024

அறுவை சிகிச்சை யாருக்கு?

 

*ஜோதிடம்:*

சின்ன சின்ன செய்திகள்
பதிவு எண் 7

*அறுவை சிகிச்சை*





அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது உண்டாகும்?

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery.

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது?

பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்?

யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம்.

அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது.

ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.




ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும்.

உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும்.

அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்

அன்புடன்,
*ரிஷி* 😱
------------------------------------------------------

Wednesday, January 3, 2024

வாகன யோகம் எப்போது அமையும்?

 [04/01, 12:07 pm] S.Shanmuganandam🤴


: ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது வாகன ஸ்தானம் எனப்படும்.


 சுக்கிரன் வாகன காரகன் எனப்படுவார்.


 எந்த ஒரு ஜாதகத்திலும் 4-ஆம் இடம், நாலாம் அதிபதி, சுக்கிரன்  வலுத்து ,குரு பார்வையிலிருந்து மேற்சொன்ன நாலாம் அதிபதி திசையோ அல்லது சுக்கிர திசையோ நடப்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு நாலுகால் வாகனம் அமையும்.

ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் என்பது இரு சக்கர வாகன ஸ்தானம்.ஆகும்.


 சுக்கிரன் வாகன காரகன் எனப்படுவார்.


 எந்த ஒரு ஜாதகத்திலும் 3ஆம் இடம், மூன்றாம்  அதிபதி, சுக்கிரன்  வலுத்து ,குரு பார்வையிலிருந்து மேற்சொன்ன மூன்றாம்  அதிபதி திசையோ அல்லது சுக்கிர திசையோ நடப்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு இரு சக்கர அல்லது மூன்று சக்கர வாகனம் அமையும்.🏍️🛺