Saturday, August 20, 2022

*மரணம் என்னும் தூது வந்தது.

 *மரணம் என்னும் தூது வந்தது. அது கயிறு (தூக்குக் கயிறு) என்னும் வடிவில் வந்தது

 *தெரிந்த கதை* 

ஓர் உண்மையான போற்றுதலுக்குரிய சாமியாரைக் கொன்றதால் தூக்கிலிடப்பட்ட கொலையாளியின் ஜாதகம் இது.

40வயது தொடும் முன்பாக அவன் ஆயுள் முடிந்து விட்டது.

 *தெரியாத விடை* 

 *ஜாதகரின்  இந்த* 

 *படுபாதகச் செயலுக்கு* *ஜாதக ரீதியான* *காரணம் என்ன?** 

 *கொஞ்சம் பார்த்தால்* *தெரியும் விடை* 

ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாதகத்தை அலசி ஆராய்ந்து  அதற்கு மட்டும் பதில் சொல்லவும் என்று கேட்கப்பட்டிருந்தது.

 *எதிரிகளின் வெற்றிக் கூட்டணி* 

தசாநாதன் புத்திநாதன் அந்தரநாதன் வலிமையைப் பறைசாற்றும் ஜாதகம் இது.

ஜாதகரின் இந்த படுபாதகச் செயலுக்கு இழுத்துச் சென்ற சில கிரக அமைப்புக்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

19 May 1910ல் பிறந்த அவன், 15 November 1949ல் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்தான். 40 வயதைத் தொடும் முன்பாகவே அவன் ஆயுள் முடிந்து போய்விட்டது.

1.  ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி நீசமாகியுள்ளான். எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் நீசமான சனி பெறவில்லை.

2. லக்னாதிபதி புதன் 12ல் மறைவு.

 அதுமட்டும் அல்லாமல் அவன் ராகுவுடன் கூட்டாக ராகுவின் பிடியில் உள்ளான்.

 புதன் தனித்து இருந்தால் சுபக்கிரகம், தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் பாவியாகிவிடுவான். புதன் சுபமாகவோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாகவோ இருந்தால் ஜாதகனின் புத்தி நல்ல வழியில்’ ஆக்கபூர்வமான வழியில் வேலை செய்யும்.

 இல்லை என்றால் தீய வழியில் வேலை செய்துவிடும்.

 லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் வைத்து எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாக ஜாதகன் இருந்தாலும், என்றாவது ஒரு நாள், ஒரு நாளாவது, அவனைக் கிரிமினலாக ஆக்கிவிடும். அதாவது கிரிமினல் வேலையைச் செய்ய வைத்துவிடும். அதைத் தவிர்க்கமுடியாது.

3.சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், அவன் விரைய ஸ்தான அதிபதி. அவன் முக்கிய கேந்திர வீட்டில் அமர்ந்து நிஷ்பலம் பெற்று ஜாதகனின் வாழ்க்கையை விரையம் செய்து விட்டான்.

4. சூரியன் 12ல் இருந்தால் அரசிற்கு எதிரான காரியங்களைச் செய்ய நேரிடும். அரச தண்டனையைப் பெற நேரிடும். 

அதே நிலையில் உள்ள சூரியன் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை. மாறாக ராகுவின் பிடியில் கூட்டணியோடு இருக்கிறான். அதனால்தான் ஜாதகனுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைத்தது.

5. லக்கினத்தில் இருந்த செவ்வாயின் தீய பார்வை மனோகாரகன் சந்திரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அது அவனுக்கு அசாத்திய மன உணர்வுகளை தைரியத்தைக் கொடுத்தது. 

அவன் ஒன்றும் கொலையைத் தொழிலாகக் கொண்டவன் அல்ல. இந்த அசாத்திய, இயற்கைக்கு மாறான மன உணர்வுதான் அவனைக் கொலை செய்ய வைத்தது,

6. அவன் ஜாதகத்தில் *கஜ கேசரி யோகம் உள்ளது* . அது  அவனைக் காப்பாற்றவில்லை.

 ஜாதகத்தில் அந்த யோகம் அடிவாங்கிக் கெட்டுப்போய் உள்ளது. 

7.எல்லா லக்னத்துக்கும் பொதுவான மாரக ஸ்தானம் 2 மற்றும் 7 ஆகும்.

அவர்கள் இங்கு கூட்டணி வைத்து மற்றுமொரு கேந்திர ஸ்தானமான 4மிடத்தில் அமர்ந்து செவ்வாயின் தீய பார்வையையும் பெற்று  

விரையாதிபதி சுக்கிரனின் பார்வையால் பாதகாதிபதி குரு பகவானின் செயல்பாடுகள் தீவிரமடைந்தன.

8.உச்சமான கேதுவின் சாரத்தில் இருந்த சனிபகவான் தனது கொடிய தீய பார்வையை லக்னம் மற்றும் லக்னத்தில் இருந்த   6,11க்குரிய செவ்வாயின் மீதும் ( (உபய லக்னத்துக்கு மாரகாதிபதி 7,11க்குரியவர்) 

மற்றும் 5,8 ஆகிய ஸ்தானங்களில் செலுத்தி கெடச் செய்தது.

9.சுபகிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமரக்கூடாது.

ஆனால் அவர்கள் கேந்திர ஸ்தானங்களில் டெண்ட் அடித்து படுபாதகச் செயலுக்கு அடிகோலிட்டனர்.

10. ஆக ஜாதகருக்கு (புதன்)  பலமாக 8 கோள்களும் செக் வைத்து கனகச்சிதமாக நாடகத்தை அரங்கேற்றி விட்டனர்.

(சூரியன் சந்திரன் செவ்வாய் குரு சுக்ரன் சனி ராகு கேது )

புதனை படுபாதகத்தை செய்ய விட்டு வேடிக்கை காட்டி தூக்கில் தொங்கவும் விட்டனர்.

*எதிரிகளின் வெற்றிக் கூட்டணி* தான் நினைத்ததை காரியத்தை நடத்தி எக்காளமிட்டது.

பாதகாதிபதி, மாரகாதிபதி, கேந்திர அதிபதி ஆகிய *குரு திசையில்* அஷ்டமாதிபதி என்னும் **சனி புத்தியில்*  மற்றோரு மாரக அதிபதியான *செவ்வாயின்* *அந்தரத்தில்* 

கோள்கள் தன் வேலையை திறம்பட செய்து முடித்து விட்டன.

கச்சிதமாக வேலையை முடித்த ஜாதகருக்கு தூக்கு கயிறைப் பரிசாக அளித்து விட்டனர்.

இதுதான் *கோள்களின் கோலாட்டம்* 

 *கிரகங்களின் மாயாஜாலம்* என்னவென்று சொல்வது?

கொலையாளி கோட்சே 

கொலையுண்டவர் மகாத்மா காந்தி

நன்றி, வணக்கம்

என்றும் அன்புடன்,

 *S.ஷண்முகானந்தம் எம்ஏ பிஎட்*  

*ஸ்ரீமால் சிந்தை கூரியன்*

பொள்ளாச்சி

99657 28932

94437 28932

🙏🇮🇳✍️

Thursday, June 23, 2022

8- ஆம் பாவத்தில் சனி ..



 8- ல் சனி ..


🔥ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி இருந்தால்,

 8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதார ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பும் ஏற்படும்.

🔥நீண்ட ஆயுள் என்பதும்கூட இந்த காலத்தில் ஒருவித சாபம் என்றே கூறலாம்.

🔥8 ல்  இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால்  10-ம் வீட்டை பார்ப்பார் .தொழில் செய்வதில் அல்லது தொழில் ஆரம்பிக்கும் பொழுது ஜாதகருக்கு தயக்கமும் சுணக்கமும் ஏற்படும்.

 பத்தாம் பாவகம்  கர்ம ஸ்தானம், சனி எட்டாம் வீட்டிலிருந்து தசா நடத்தும் பொழுது,ஜாதகர் ஏதேனும் ஒரு கர்ம காரியங்களில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும் ..

🔥சனி எட்டில் வக்ரம் பெற்று இருக்கும்பொழுது, அல்லது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுதும் தசாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட ,அதன்மூலம் வருமானத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பார். 

🔥பழைய பொருள் காகிதம், குப்பைகள், கழிவுகள் இதன் மூலம் வருமானம், பழைய (Scraps)பொருட்களின் உதிரிபாகங்கள், அதன் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்கச் செய்திடும்.

🔥பொதுவாக எட்டில் சனி இருந்து தசா நடக்கும் பொழுது, உறவினர்கள் நட்பு வட்டாரங்கள் போன்றவற்றின் மூலம் அசிங்கம், அவமானம் முதலானவற்றை உருவாக்கி அதன் மூலம் ஒரு தெளிவை கொடுப்பார், ,

🔥3,7,10 ஆகிய பார்வைகளில், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பம் அமைவதில் தாமதம் அல்லது குடும்பம் அமைந்தால் அதில் சிக்கல்களை உருவாக்கும் ..,

10 - ம் பார்வையாக ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு கொள்வதால், புத்திரப்பேறு தாமதத்தை உருவாக்குவார். அல்லது புத்திரர்களால் மன சஞ்சலத்தை கொடுப்பார்.

🍁ஆயுள்காரகன் சனி ராசி/ லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் தசா நடத்தும் பொழுதும் எட்டில் சனி இருந்தாலும் வாழ்க்கை ஜாதகருக்கு போராட்டமாகவே இருக்கும். நீண்ட ஆயுளும் ஒரு போராட்டமே ,,

🍁இவர்கள்  வாழ்வின் சம்பாதிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி எப்பொழுதும்,

சனியின் காரகத்துவ பொருள்களாக வாங்கி தானம் தருதல், இவர்களுடைய வாழ்வியல் பரிகாரமாகும் ..

இஸ்திரி பெட்டி, காலணிகள் ,நல்லெண்ணெய், தயிர் சாதம் ,ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவை ..

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, June 21, 2022

ஜாதகம் அறிமுகம்,சில பால பாடங்கள். ----------------------------------------


 ஜோதிடம்:

ஜாதகம் அறிமுகம்,சில பால பாடங்கள்.

----------------------------------------

ஜோதிடம்,நம் வேதங்களின் ஒரு அங்கம் என்று சொல்வாா்கள்.ஆகவே இது ஒரு தெய்வீக கலை.


ஜோதிடத்தை நம்புவர்கள் அதை முழுமையாக நம்ப வேண்டும்.நல்ல ஜோதிடர்களை மதிக்க வேண்டும்.வியாபாாிகளை,மக்களை பயமுறுத்துபவர்களை இனங்கண்டு  புறக்கணியுங்கள்.


ஜாதகம் பாா்ப்பதற்க்கு மிக அடிப்படையான விஷயம்,சரியாக,நன்கு  கணிக்கப்பட்ட,விவரமான முழு ஜாதகம்.

சரியான நம் பிறந்த நாள்,நேரம்,ஊர் இவற்றைக்கொடுத்து முழு ஜாதகத்தை தயாா் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


முழு ஜாதகம் என்றால்,ராசிக்கட்டம்,நவாம்ச கட்டம்,நட்சத்திர பாதச் சாரம்,தசா-புக்தி விவரங்கள்.இவைகள் அடிப்படை தேவைகள்.


இவைகளோடு ஜாதகர் பிறந்த அன்று,அந்த நேரத்திலிருந்த திதி,யோகம் (27நித்திய நாம யோகங்கள் உள்ளன),கரணம் குறித்துக்கொள்ள வேண்டும்.இவை மூன்றும் மிக முக்கியமானவை.


நவாம்சம் இல்லாமல் ஜாதகம் பாா்ப்பதும்,பலன் சொல்வதும் மிகத்தவறான ஒன்றாகும்.


பலன் என்னவோ ராசிக்கட்டத்தை வைத்துதான் சொல்லப்படும்,ஆனால் அம்சத்தில் கிரகங்களின் நிலையை பாாத்துதான் பலன்.


ஒரு கிரகம் ராசியில் கெட்டிருந்தாலும்,அம்சத்தில் நல்ல நிலையில் இருந்தால் நல்ல பலனே.ஆகவே நவாம்ச கிரக நிலை மிக முக்கியம்.


இப்போது நல்ல மென்பொருள்/சாப்ட்வேர் கிடைப்பதால்  கணினியிலேயே ஜாதகம் கணித்துக்கொள்ளலாம்,துல்லியமாகவும் இருக்கும்,நல்ல கணினி மையத்தை அணுகவும்.கையால் தான்/மேன்வல்லாகத்தான் தயாா் செய்ய வேண்டுமென்பதில்லை


குழந்தைகளுக்கு ஜாதகம் நிதானமாக எழுதிக்கொள்ளலாம் அவசர வேண்டாம்.


ஊர்,ஊராக ஜோசியர்,ஜோசியராக அலையக்கூடாது.பிறகு அதே வேலையாகிவிடும்.ஒன்றும் நடக்காது குழப்பம்தான் மிஞ்சும்.


குடும்ப மருத்துவர் போல்,குடும்ப ஜோதிடர் ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்.வணிக நோக்கமில்லாத,அடிப்படை ஜோதிடத்தில் நல்ல ஞானம் உள்ளவராக ஒருவரை தேடி கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.எல்லா ஊரிலும் நிச்சயம் இருவர் இருப்பாா்கள்.


டிவி,பேப்பர்களில் வரும் பிரபலங்களின் பின்னால் அலையாதீர்கள்,உங்கள் பணம் தான் விரயமாகும்.


செகண்ட் ஒப்பினியனுக்கு இன்னொருவரை மேலே சொன்னது போல ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள்.


ஒருவேளை இவர்கள் இருவரும் சொன்னது தவறாகவே போனாலும் தெய்வத்தை நம்புங்கள்.நல்லது நடக்கும்.


வியாபார நோக்கமில்லாத,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஜோதிடர்களுக்கு சனிபகவான் பரிபூரணமாக அருள்வான்.அவர்களின் வாக்கு பலிக்காமல் போகாது.


அடிக்கடி ஜாதகம்/ஜோதிடம் பாா்த்துக்கொண்டேயிருக்க கூடாது.


வருடத்திற்க்கு ஒரு முறை,ஏப்ரல்/மே மாதங்களில் எல்லோருக்கும் விடுமுறையாகயிருக்கும்,அப்போது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை காண்பித்து  வரப்போகிற வருடம் எப்படியிருக்கும் எனக்கேட்டு அறிந்துக்கொள்ளலாம்.

பரிகாரமும் செய்துக்கொள்ளலாம்.


பரிகாரம் படாடோப பரிகாரம்மல்ல.ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒரு கடவுள் அதிபதி,அவரை நன்னாளில் தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் வணங்கிவந்தாலே போதுமானது.இது எளிய,வலிய பரிகாரமாகும்.


நாளைகாலை என்ன நடக்கும் என்று சொல்வது கடினம்,ஆனால் அடுத்த ஒரு வருடம் எப்படியிருக்கும் என்பதை கூறமுடியும்.அதன் மூலம் நம்மை எல்லாவற்றுக்கும் தயாா் செய்துக்கொள்ளவும் முடியும்.


மற்றபடி கல்யாணம்,படிப்பு,வேலை வாய்ப்பு,உடல்நிலை இந்த காரணங்களுக்காக எத்தனை முறை,எப்ப வேண்டுமானும் ஜாதகம் பாா்க்கலாம்.


குல தெய்வ வழிபாடு மிக முக்கியம் வருடத்திற்க்கு ஒரு முறையாவது குலத்தெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிக நல்லது.


வீட்டிலுள்ள பெரியவர்களை கண்ணியமாக நடத்துங்கள்.


பெண்களை மதியுங்கள்.அவள் தெய்வம்,தாய்க்கு சமமானவள் என்று வாய் வாா்த்தையுடன் நிற்காமல்  அதை செயலில் நிருபியுங்கள்.


பெண்ணை போற்றும்,மதிக்கும் சமூகம்தான் உயர்வடையும்.அவள் சந்தோஷமாக இருந்தால் தான்,வீடு சந்தோஷமாகயிருக்கும்


நம் மனைவியை,மகளை,தாயை,சகோதரியை மனமார மதிக்க கற்றுக்கொள்வோம்.அவர்கள் சொல்வதையும் காதுக்கொடுத்து கேட்கவேண்டும்.ஆண்களைவிட மனவைராக்கியமுடையவர்கள் பெண்கள்.சகோதரியை,மகளை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.


பெண்அழுதால் வீடு நிர்மூலமாகிவிடும்.


பெண் சிசு கொலை,ஆணவக் கொலைகளை தவிர்ப்போம்.இதுப்போன்ற செயல்கள் நம் சந்ததியினரை வெகுவாக பாதிக்கும்.


எல்லாவற்றுக்கும் மேலாக நம் கடின உழைப்பு,விடா முயற்ச்சி,தன்னம்பிக்கை இந்த மூன்றுடன் கூடிய தெய்வபக்தி என்றுமே வீண் போகாது,நமக்கு எல்லா செல்வங்களையும் வழங்கும்.


நல்ல நடத்தை,நேர்மையான சிந்தனை என்றும் நம்மை காக்கும்.


ஆல் தி பெஸ்ட்.


நன்றி.


மேலும் வளரும்....!

பஞ்ச பட்சி சாஸ்திரம்


 பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டு 


                    ஒரு சிறிய விளக்கம் 


பஞ்ச பட்சி சாஸ்திரம்


இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. 


      பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.


பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே 


வல்லூறு 


ஆந்தை


காகம்


கோழி


மயில் 


முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.


ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-


வல்லூறு


அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்     

         

ஆந்தை


திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்    

              

காகம்


உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்    

                           

கோழி


அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்     

                        

மயில்


திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி


 இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.


வளர்பிறை


அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 


இ, ஈ - ஆந்தை


உ, ஊ - காகம்


எ, ஏ - கோழி


ஒ, ஓ - மயில்


தேய்பிறை


அ, ஆ - கோழி 


இ, ஈ - வல்லூறு


உ, ஊ - ஆந்தை


எ, ஏ - மயில்


ஒ, ஓ - காகம்


         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்


அரசு  - 100% பலம்

ஊண் - 80%      “

நடை -   50%    “

துயில் - 25%    “

சாவு     - 0%     “


         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 


       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.


வளர்பிறை - படுபட்சி நாட்கள்


வல்லூறு - வியாழன், சனி


ஆந்தை - ஞாயிறு, வெள்ளி


காகம் - திங்கள்


கோழி - செவ்வாய்


மயில் - புதன்


தேய்பிறை படுபட்சி நாட்கள் 


வல்லூறு -செவ்வாய்


ஆந்தை -திங்கள்


காகம் -ஞாயிறு


கோழி -வியாழன், சனி


மயில் -புதன், வெள்ளி


       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-


வளர்பிறை


பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)


வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்


ஆந்தை - புதன், திங்கள்


காகம் - வியாழன்


கோழி - வெள்ளி


மயில் - சனி


இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)


வல்லூறு - வெள்ளி


ஆந்தை -ஞாயிறு


காகம் -ஞாயிறு, செவ்வாய்


கோழி - திங்கள், புதன் 


மயில் -வியாழன் 


தேய்பிறை


பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)


வல்லூறு -வெள்ளி


ஆந்தை - வியாழன் 


காகம் -புதன்


கோழி - ஞாயிறு, செவ்வாய்


மயில் - திங், சனி


இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)


வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்


ஆந்தை - புதன்


காகம் - வியாழன்


கோழி - திங்கள், சனி 


மயில் -வெள்ளி 


      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.


    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:

1) காகம்

2) ஆந்தை

3) வல்லூறு

4) கோழி

5) மயில்

அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.


        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.


           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.


                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.


படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.


நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.


பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.


உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 


அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


வல்லூறு - வளர்பிறை


நட்பு : மயில், ஆந்தை

பகை : காகம், கோழி 


வல்லூறு - தேய் பிறை


நட்பு : மயில், காகம்

பகை : ஆந்தை, கோழி 


ஆந்தை - வளர்பிறை


நட்பு : வல்லூறு, காகம்

பகை : மயில், கோழி


ஆந்தை - தேய்பிறை


நட்பு : கோழி, காகம்

பகை : வல்லூறு, மயில்


காகம் - வளர்பிறை


நட்பு : ஆந்தை,கோழி

பகை : வல்லூறு, மயில்


காகம் - தேய்பிறை


நட்பு : ஆந்தை, வல்லூறு

பகை : மயில், கோழி


கோழி - வளர்பிறை


நட்பு : மயில், ஆந்தை

பகை : காகம், வல்லூறு 


கோழி - தேய்பிறை


நட்பு : மயில், ஆந்தை

பகை : காகம், வல்லூறு


மயில் - வளர்பிறை


நட்பு : வல்லூறு, கோழி

பகை : ஆந்தை, காகம்


மயில் - தேய்பிறை


நட்பு :  வல்லூறு, கோழி

பகை : ஆந்தை, காகம்


ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.


நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.


“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.


ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.


உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.


உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.

“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.


பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.


பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.


தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


அ - வல்லூறு

இ - ஆந்தை

உ - காகம்

எ - கோழி

ஒ - மயில்.


மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.


நிலம் - வல்லூறு

நீர் - ஆந்தை

நெருப்பு - காகம்

காற்று - கோழி

ஆகாயம் - மயில்.


         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.


ந - வல்லூறு

ம - ஆந்தை

சி - காகம்

வ - கோழி

ய - மயில்.


பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.


1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்

2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்

3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்

4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்

5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்

6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்

7)   போட்டிகளில் வெற்றியடைதல்

 எதிரிகளை வெல்லுதல்

9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்

10) ஆருட பலன் கூறுதல்

11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்

12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்

13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!

Tuesday, March 15, 2022

நவகோள்களும் பூ உலகமும்

 *உலகியல் ஜோதிடம்* 


 *நவகோள்களும்  பூவுலகமும்* 


பஞ்சபூதங்களால் ஆன ஒவ்வொரு மனிதரும் ஒரு கிரகத்தின்

 ஆதிக்கத்தில் இருக்கின்றனர். அதை ஒட்டியே அவர்களின் குணாதிசயம் இருக்கின்றது .


அப்படியே *பூமியில் ஒவ்வொரு பகுதியையும் கிரகங்கள் ஆளுமை செலுத்துகின்றன.* 


முதலில் *அமெரிக்கா* வை பார்க்கலாம். அந்நிலப்பரப்பு *சூரியனின்* ஆதிக்கத்தில் உள்ளது. அதனால் அவர்களின் ஆளுமையில்தான் உலகம் இயங்கும்.


நானும் உன்னைப்போலவே உலகுக்கு ஒளி தருகிறேன்னு மல்லுக்கட்டும் *ரஷ்யா* குளுமையான *சந்திரன்* ஆதிக்கத்துக்கு உட்பட்டது.


 *சுக்கிரனின்* ஆளுமைக்குட்பட்ட *ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில்* மது,மாது,சூது,உல்லாசம் அனைத்தும் பஞ்சமில்லாமல் இருக்கும்.


 *வளைகுடா நாடுகள்* *ராகு* வின் பிடியில் இருப்பவை. பெட்ரோல்,பணம், வானளாவிய கட்டிடங்கள், சண்டை , ரத்தக்களறி யாவும் ராகுவின் வேலை.


கருப்பும், வறுமையும், பஞ்சமும் கொண்ட *ஆப்பிரிக்கா* *சனியின் தேசம்* 


 *சீன தேசம்* *செவ்வாய்* ஆளுகைக்குட்பட்டது . அதனால் போருக்கு ஆர்வமாகவே இருப்பார்கள். கம்யூனிசமே கோலோச்சும். தோல்வியை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.


இந்த *பாரத தேசத்தை* வழிநடத்துவது *ராஜகுரு* வான *தக்ஷிணாமூர்த்தியே* ஆவார். அதனால்தான் எண்ணற்ற மகான்கள் இந்த க்ஷேத்திரத்தில் உருவாகி உலகை காத்தனர்.


சரி போர் போர் னு பேச்சா இருக்கே! அதுக்கு வருவோம்...


ஒரு நாளும் செவ்வாயான சீனாவாலோ ராகுவான பாகிஸ்தானாலோ குருவை வெல்லவே முடியாது. 


அதே சமயம் சூரியனான அமெரிக்காவாலே கூட குருவின்றி இனி எதையும் செய்ய முடியாது.


 

ரஷ்யாவாலேயும் எதையும் செய்ய முடியாது.


குருவான இந்தியாவை கேட்டுதான் அவர்களே நடப்பார்கள்.


குரு இயல்பில் நல்லவர். அவர் கருணைதான் பாகிஸ்தானை விட்டுவைத்திருக்கிறதே தவிர வேறெந்த சுண்டைக்காய் காரணமும் இல்லை.


 *குரு முடிவெடுத்துவிட்டால் உலகம் இந்தியா பின் திரள்வது உறுதி.*


 *அண்டார்டிகாவும் ஆஸ்திரேலியாவும்கேதுவின்* ஆதிக்கத்தில் உள்ளன அவை தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.


இப்போது புரிந்திருக்குமே இந்தப் பூவுலகில் ஏன் போட்டியும் பொறாமையும் தலைதூக்கி ஆடுகின்றன என்பது.