Wednesday, April 17, 2019

17/04/2019 புதன் எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்ற திரையிசைப் பாடலை கேட்காதவர் உண்டா?

பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பர்.

இன்றைய அவசர கால நிலையில்  மனுசனுக்கு டென்சனோ டென்ஷன்.

தொடர்ந்து வரும் தோல்விகள், குழப்பமான மனநிலை மற்றும் சூழ்நிலைகள். இதன் தாக்கம் நம்மால் தெளிவான தீர்க்கமான முடிவுகள்
எடுக்க முடியாது.

அதன் விளைவாக வருத்தம், வேதனை. அதன் கால நீட்டிப்பு துன்பம்.

துன்பங்கள் தேடி வரும் நிலையை ஜாதகத்தில் எப்படி தெரிந்து கொள்வது? பார்க்கலாமா.?

சாதாரணமாக ஒருவன் பலம்மிக்கவனாக இருப்பின் அவன் தன் திறனை எவ்வகையிலாவது வெளிப்படுத்த விரும்புவான் அல்லவா?

அவன் நற்குணங்கள் பொருந்தியவன் எனில் தனது திறனை மற்றவர்க்கு பயன்படும் வகையில் வெளிப்படுத்துவான்.

மாறாக அவன் தீய குணங்கள் பொருந்தியவன் எனில் அவனது திறன் மற்றவர்க்கு தீமையை விளைவிக்கும். துன்பத்தையே தரும்.

அவ்வகையில் ஜாதகத்தில் யார் பலம் பெறுகிறாரோ அவரது குணநலனுக்கு ஏற்ப நன்மையும் தீமையும் நடைபெறும்.

இங்கு 8க்குடையவன் பலம் பெறும்போது துன்பமே எந்நாளும்.

எப்படி?
...........
8க்குடையவன் லக்ன கேந்திரங்களில் நின்றால்,

8க்குடையவன் லக்னாதிபதியுடன்இணைந்தால் அல்லது பார்த்தால்,

8க்குடையவன் 10க்குடையவனோடு இணைந்தாலோ பார்த்தாலோ துன்பங்கள் தேடிவரும்.

               ...துன்பம் எப்போது வரும்?.....
                                ............
8ல் நின்ற கிரகத்தின் சாரத்தில் ஒருகிரகம் திசை நடத்தும் போது.

8க்குடையவன் திசை நடத்தும்போது.

8க்குடையவன் கோட்சாரத்தில் லக்ன கேந்திரத்தில் சஞ்சரிக்கும் போது.

8க்குடையவன் கோட்சாரத்தில் 10க்குடையவனுடன் இணையும்போது அல்லது பார்க்கும் போது துன்பங்கள் வந்து சேரும்.

ஹலோ! ஹலோ! சுகமா!
ஆமா நீங்க நலமா?

என கேட்க வேண்டி வரும்.

Monday, April 8, 2019

ஊஞ்சல் உற்சவம் 8/04/2019 திங்கள்

ஊஞ்சல்
ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா!

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
 அதிலும் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

 ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.

திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது….!!!!

 ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

 கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது….!!!!

முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்…!!!!

Wednesday, April 3, 2019

யோகாவும் தியானமும்

மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா"...!!!

மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்"...!!!

#யோகாவும் #தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...!!!

தோளுக்கு மேல வளர்ந்தாச்சு...!!!???

இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னொருத்தியை ஏற்பாடு பண்றதுதான்

#திருமணம்

மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்...!!!

ஆனால்......,

பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்...!!!
                                               
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க...!!!???

உங்கள் கணவரை நேசியுங்கள்...!!!

* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால் உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விரும்புகிறார் என்று அர்த்தம்.
.

* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.


* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
* இரவில் குறட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.


உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
* உங்கள்


பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
* நேசித்தே ஆகவேண்டும். உங்களுக்கு வேற வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
                            

மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

மன நிம்மதியோடு படித்து விட்டு....!!!!

பிறருக்கும் அனுப்பி பாருங்கள்....!!!

வாழ்த்துவார்கள்...!!!

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வாழ்க வளமுடன்...!!!

நன்றி...நன்றி...நன்றி...!!!

Tuesday, April 2, 2019

[03/04, 9:54 AM] Anand: எங்கே நிம்மதி? என்பவர்க்கு இங்கே உள்ளது. படியுங்கள்.சிந்தியுங்கள். பின் அதன் வழி நடங்கள். 👇😤👍🏻
[03/04, 9:55 AM] Anand:

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
🙏🏻🙏🏻🌹 ஓம் 🌹🙏🏻🙏🏻