Friday, December 16, 2016

மாதங்களில் நான் மார்கழி -16-12-2015 வெள்ளி


                                                   மாதங்களில் நான் மார்கழி

  மாதங்களில் நான் மார்கழியாக  இருக்கிறேன் என்றான் கண்ணபிரான். அது பீடு உடைய (பெருமை உடைய) மாதம். அது நாளடைவில் மருவிப் பீடை மாதம் ஆயிற்று. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.
    விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். 
    மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்.
பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தில் பூசணி பூ வைத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. அதிகாலையில் பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப் போகும்.
    பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது. வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியதற்கு காரணம் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷ்ண நிலையும் சமனடையும். சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவராசப்பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

  •     மார்கழி மாதத்தில் கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள் மார்கழியில் இல்லை.
   ஓம் நமோ நாராயணா!                         சிவாய நம ஓம்!

Wednesday, December 7, 2016



                                                              இதய அஞ்சலி


தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற  தங்க தாரகையே!
தாயாகி சால பரிந்து  தவித்தவர்க்கு மனம் மகிழ வாழ்வளித்த அன்னையே!
எம்மைவிட்டு நீ சென்றாலும் எங்கிருந்தாலும் நீவீர் நலமோடு இருக்க
எம் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி இறைவனை இறைஞ்சுகின்றோம்!!

Friday, October 28, 2016

தீபாவளி வாழ்த்துக்கள் 28-10-2016 வெள்ளி


                                      


                                                 











                                            மங்களம் பொங்கும் தீபாவளி !
                        மலரட்டும் மனதில் தீப ஒளி !!
                    இல்லந்தோறும் ஒளி வண்ணம் !
                     இதயங்கள் எங்கும் மகிழும்வண்ணம் !!

      எல்லோருக்கும்  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!
                                 …………..என்றும்அன்புடன்
                           s. ஷண்முகானந்தம்
                                                                      தலைமை ஆசிரியர் @ AEEO
                                            &
                                                                              குடும்பத்தினர்
     28-10-2016 வெள்ளி             பொள்ளாச்சி,















                                                     

Tuesday, September 13, 2016

                                 ஓம்
வளம் பெருக!!                                           நலம் அடைக!!
                        
  
                    சித்தர் வாழ்க!  சிவன் வாழ்க!
                    முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
                    பக்தர் வாழ்க! ரிஷிகள்  வாழ்க!
                    பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
          
          
ஹரி ஓம்!

அன்புடையீர்! வணக்கம்.

  நமது ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட நிறுவனர் திரு.எஸ்.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,  அவர்களுக்கு  மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது) கடந்த 5-9-2016 திங்கள் அன்று தமிழக அரசு வழங்கி பாராட்டிச் சிறப்பித்துள்ளது என்பதைப் பெருமையுடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னை காமாக்ஷியின் அருள் என்றென்றும்!!

நாள்: 13-09-2016,                           என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி.                          .எஸ்.ஷண்முகானந்தம்


Thursday, August 25, 2016

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 25-08-2016 வியாழன்



ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி
இனிய பிறந்தநாள் காணும் கண்ணன் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்க அருள் செய்யட்டும்.

Wednesday, August 24, 2016

தாம்பூலம் தரித்தல் 24-08-2016 புதன்

                       சித்தர் வாழ்க!  சிவன் வாழ்க!
                       முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
                       பக்தர் வாழ்க! ரிஷிகள்  வாழ்க!
                       பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
          
          
வணக்கம்.
ஹரி ஓம்!

    மெய்யன்பர்களே! இன்று நாம் தாம்பூலம் குறித்த விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

   
          வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. பண்டிகைகள் முதல் விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது வெற்றிலை.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலையில்  பணம் வைத்து அழைப்பார்கள். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.
 வெற்றிலையும்,பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும் சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பழந்தமிழர் மரபாகட்டும்; இந்தியக் கலாச்சாரம் ஆகட்டும். அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டது தான். முடி வெட்டுவதிலிருந்து மன்னன் முடிசூடுவது வரை கடைபிடிக்கப்படும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கியுள்ளன.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படியொரு நல்ல விஷயம் அடங்கியுள்ளது. பொதுவாக வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த கலவை உடலையும்,மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. அதே சமயம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்த வைத்தியமும், ஆயுர் வேதமும் உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியன சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும்போதோ,குறையும்போதோ தான் நோய் வருகிறது எனச் சொல்கின்றன.இம்மூன்றையும் சரியான விகிதத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியாக வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கிலிருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தைக் கண்டிக்கக் கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தைப் போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை நீக்கவல்லது.
இப்படிப் பாத்தால் வெற்றிலை போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் மூன்று நிலைகளையும் முறைப்படுத்தி சரியாக அமைந்து விடுகிறது.
அதோடு ஜீரணசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
இப்போது வயதானவர்களுக்கு வரக்கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் வயதானவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரித்தல் பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்புச் சத்து நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுவடைந்து விடுகிறது.
எனவே இனியாவது நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டியாவது நம் பண்டைய கலாச்சாரமாக திகழும் தாம்பூலம் தரித்தல் என்பதைக் கடைபிடிப்போமாக! இந்நாள் சுபநாளாக அமையட்டும்! நமஸ்காரம். நாளை சந்திப்போம்.








Sunday, August 7, 2016

07-08-2016 ஞாயிறு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

வணக்கம்.
ஹரி ஓம்!



நட்புக்கு ஓர் இலக்கணம் நினைவு கொள்வோம்.
இறைவன் கொடுத்த வரம் நட்பு. அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Saturday, July 23, 2016

23-07-2016 சனிக்கிழமை

வணக்கம்
.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
         இன்று சங்கடஹர சதுர்த்தி.


  இன்று விநாயகப்பெருமானுக்கு விரதம் ஏற்று பலவகையான பழங்கள்,
அவல்,கரும்பு, வெல்லம், அப்பம், கொழுக்கட்டை, பொரி,கடலை,வாழைப்
பழம், வெற்றிலை, பாக்கு இவைகளைப் படைத்து அருகம்புல், வெள்ளருக்கு மாலை சாற்றி தூபம்,தீபம் ஏற்றி வழிபட்டு கீழ்க்கண்ட சுலோகத்தைச்
சொல்லவும்.

வக்ரதுண்ட மஹாகாய
ஸுர்யகோடி ஸமப்ரப !
அவிக்நம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா !!
எனப் பிரார்த்தனை செய்தால் எண்ணியவை யாவும் தடையின்றி இனிதே
நிறைவேறும்.

இந்நாள் சுபநாளாக அமையட்டும்!

நமஸ்காரம். 
மீண்டும் சந்திப்போம்……

அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:




Thursday, July 21, 2016

21-07-2016 வியாழன் சித்தரின் வல்லபம்

                                                                            

                              வாழ்த்து

                     சித்தர் வாழ்க!  சிவன் வாழ்க!
                     முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
                     பக்தர் வாழ்க! ரிஷிகள்  வாழ்க!
                     பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
          
          
வணக்கம்.
ஹரி ஓம்!

    மெய்யன்பர்களே! இன்று நாம் சித்தரின் வல்லபம் குறித்த விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

 எல்லாம் வல்ல எழிலுடைய மகத்துவம் மிக்க வாசியின் கருணையினால்  சித்தரின் வல்லபம் குறித்து பாம்பாட்டிச் சித்தர் கூறுவது.

    மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்;
       முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
    தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
       தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

    செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்;
       செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;
          இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
       எங்கள் வல்லபங் கண்டு நீ ஆடு பாம்பே!


முந்நீர்  -   கடல்
செங்கதிர்  - தகிக்கும் சூரியன்
தண்கதிராய் - குளிர்ந்த

 நமஸ்காரம். 
மீண்டும் சந்திப்போம்……

Wednesday, July 20, 2016

20-07-2016 புதன் சித்தர் வணங்கும் தெய்வம்



ஹரி ஓம்!                                                                                       வாலை போற்றி!

                                                         வேதத்து மறை நீ!
                                                         பூதத்து முதலும் நீ!
                                                         வெஞ்சுடர் ஒளியும் நீ!
                                                         எங்களுள் வாசியும் நீ!
                                                          அனைத்தும்  நீ!
                                                          நின் பாதகமலம் சரணம்
                                                          அருள்புரிவாயே!

Monday, June 27, 2016

27-06-2016 திங்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ்-மகிழ்ச்சி தரும் யோகம்!

வணக்கம்.
ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே 
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
 நீண்ட ஆயுள், நீடித்த புகழ்-மகிழ்ச்சி தரும் யோகம்!

   

 6-க்குரியவன் நீசமாக வேண்டும்.
10-க்குரியவன் உச்சம் பெற வேண்டும்.
அப்படியிருப்பின்  ஜாதகன் நீண்டநாள் வாழ்வான்.
நோய்நொடியில்லாமல் வாழ்வான்.
வெற்றிகளையும், புகழையும் பெறுவான்.
மகிழ்ச்சியோடு வாழ்வான்.
   

இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 மீண்டும் சந்திப்போம்.






Friday, June 24, 2016

24-06-2016 வெள்ளி வீட்டி ல் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக நிலைத்திட!

வணக்கம்.
ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக நிலைத்திட!


   
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்..  ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
   
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.
 
ஆனாலும் தம்பதியரின் அன்பு அன்யோன்னியத்திற்கும், செல்வ வளமைக்கும்
இதை பின்பற்றினால் நன்மை நமக்கு தானே!


இந்நாள் சுபநாளாக அமையட்டும்!
 நமஸ்காரம்.
 மீண்டும் சந்திப்போம்.