*ஜோதிடத் தொடர் தலைப்பு பற்றிய சிறு குறிப்பு*
கடலின் மேற்பரப்பில் அலைகள் மேலெழுந்து *சப்தம்* இட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
அதனை ரசிக்கலாம் ரசிக்க முடியும்.
அதேசமயம் அந்த அலைகள் *அதிக வேகத்தில் மேலெழுந்து சப்தமிட்டால் அதனை* *ஆரவாரம்* என்போம்.
அதீத வேகத்தில் மேலெழுந்து விட்டால் அதனை *ஆர்ப்பரிப்பு* என்போம்.
கடலின் மேற்பரப்பில் இருந்து கீழே சென்றால் சப்தங்கள் அடங்கிவிடும்.
கடலின் ஆழத்திற்கு சென்றால் *நிசப்தம்* ஆகிவிடும்.
கடல் அமைதியாக இருக்கும்.அங்கே சப்தம் இல்லை.
ஆரவாரம் இல்லை.
ஆர்ப்பரிப்பும் இல்லை.
*அமைதி மட்டுமே நிலவும்.*
++++++++++++++
நமது வாழ்க்கையும்
புரிந்து செயல்பட்டால் *(5மிடம்)* *அமைதி நிலவும்.* மகிழ்ச்சி அடையும்.ஆனந்தம் பெருகும். *(9ஆமிடம்)*
வாழ்க்கையில் புரிதல் இல்லாமல் போனால் *சப்தம்* ஏற்படும்.
சலசலப்பு காணும்.
இது நீடித்தால் கைகலப்பு உருவாகும்.(6ஆமிடம்)
*ஆரவாரம்* (கட்டுக்குள் இருக்கும்)
சண்டை சச்சரவு ஏற்பட்டு துன்பம் தரும்.(8ஆமிடம்)
*ஆர்ப்பரிப்பு* கட்டு மீறி செயல்படும். அழிவைத் தரும்.
இதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்று பார்த்தால் போதும் புரிந்து கொள்ள முடியும்.
நம் வாழ்க்கை அமைதியானதா?
ஆர்ப்பாட்டம் கொண்டதா?
ஆரவாரம் நிறைந்ததா?
ஆர்ப்பரிப்பாய் உள்ளதா?
இதனை அப்படியே நாம் பார்க்கும் ஜாதக ஆய்வில் பொருத்தி பாருங்கள்.
அமைதியான வாழ்க்கையில் நட்பு மேலோங்கி இருக்கும்.
ஆரவாரமான வாழ்வில் எதிரிகளின் ஆதிக்கம் நம்மீது விழுந்து ஆர்ப்பாட்டத்தையே ஏற்படுத்தும்.
இதனையே நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
*அமைதியான வாழ்வா?ஆரவாரமான நிகழ்வா?*
எல்லாம் வாங்கி வந்த வரம்.
++++++++++++++
நேற்றைய தினம் ஜோதிட சிறப்பு ஆய்வுக்காக ஜாதகம் ஒன்று கொடுக்கப்பட்டது.
*ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?* என்று பலன் கூறுமாறு கேட்கப்பட்டது.
ஜாதகத்தை ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்தவரை முயன்று ஆய்வு செய்து பலன் கூறியிருந்தார்கள்.
வாழ்த்துக்கள்.
இருப்பினும் இன்னும் கற்க வேண்டியது இருக்கிறதோ?
அல்லது நாம் சொன்ன பலன்கள் முழுமையானதாக இருக்குமா? இல்லை இன்னும் வேறு ஏதாவது சொல்லாமல் விடுபட்டு போய்விட்டதா? என்ற சந்தேகம் வரலாம்.
இதுபோன்ற நிலையில் நம்மை நாம் பயிற்சியால் வலுப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம் ஆகும்.
அதற்கான வழிமுறைகள் தான் இந்த உதாரண ஜாதகத்தைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளப் போவது.
முதலில் ஒரு ஜாதகத்தை ஆய்வுக்கு எடுக்கும் முன்னர் ஜாமக்கோள் பிரசன்னம் ஒன்றைப் போடுங்கள்.
நீங்கள் எது சார்ந்த பிரச்சினையைப் பார்க்க போகிறீர்களோ அதற்கு ஏற்ப பிரசன்னம் அமைந்து உங்களுக்கு 95% பலனைத் தெரிவித்து விடும்.
அதற்கு பின் ஜாதகத்தைப் பாருங்கள்.
கேட்கப்பட்ட கேள்வி
அதன் பாவம்
அதன் காரக கிரகம் இவைகளை மட்டுமே பார்த்தால் போதும். முக்கால்வாசி பலன் உங்கள் மடியில் வந்து விழும்.
மீதியை தசா புக்தியும் மற்றவைகளை கோட்சாரமும் பதிலளித்து விடும் என்பதை மனதில் வையுங்கள்.
இனி இதனைக் கருத்தில் கொண்டு ஜாதகத்தை ஆய்வு செய்து பலன் எடுங்கள்.
நிச்சயம் குறி தப்பாது.
*இந்த ஜாதகருக்கு ஜாதகம் பார்த்த போது ஜாம கிரகங்களின் நிலை*👇
[20/08, 10:26 am] S.Shanmuganandam🤴::
ஜாதகம் பார்க்க வந்தவர் ஜாதகரின் தந்தை ஆவார்.தன் மகனின்
ஜாதகத்தை கொடுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.
ஜாதகரின் வயது 33+.
*வந்தவரின் நோக்கம் என்ன?* என்பதை அறிய போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் இது.
அதற்கு
ஜாம கிரகங்களின் நிலை எப்படி இருக்கும்?
அதற்காக பிரசன்னம் தரும் பதில் .
*ஜாதகத்திற்குரியவர் விவாகரத்து ஆனவர் என்பதும்*
*அவருக்கு 2 வது திருமணம் செய்வது பற்றி கேட்கவே வந்துள்ளார் என்பதை பிரசன்னம் காட்டுகிறது*
எப்படி?
*பிரசன்னம் தரும் பதில்*
*மகர உதயம்.*
*உதயத்தை கடந்த கோள் புதன்.*
உதயத்தை புதன் கடந்து விட்டாலே ஜாதகர் திருமணமானவர் என்று பொருள்.
வந்தவர் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பதால் கவிப்பு நின்ற பாவம் மற்றும் கவிப்பு எந்த கிரகத்தைக் கவித்துள்ளது என்பதை கொண்டு வந்தவரின் நோக்கத்தை அறிய முடியும்.
கவிப்பு நின்ற பாவம் 12ஆம் பாவம்.
அங்குள்ள ஜாம கிரகம் புதன்.
ஜாதகர் மனைவியை விட்டு பிரிந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.
கவிப்பு புதனை அப்போதுதான் கடந்திருக்கிறது.
இதனை
ஜாம கிரகமான புதன் நின்ற பாகை 27 பாகையும்
கவிப்பு
நின்ற பாகை 24பாகையும் உறுதிப்படுத்துகிறது.
வந்தவரின் நோக்கம் என்ன? என்பதை அவர் வெளிப்படுத்தாமலேயே இருக்கும்போது கவிப்பு தானாகவே அதனை வெளிப்படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறிய முடியும்.
மேலும் கவிப்பு 12ம் பாவத்தில் இருந்து 11ஆம் பாவத்தில் உள்ள *சுக்கிரனைக்* கவித்து இருக்கிறது.
பதினொன்றாம் பாவம் என்பது இளைய மனைவி அல்லது இரண்டாவது தாரம் என்பதை சுட்டிக்காட்டும்.
*உதயாதிபதி சனி*
*உதயத்திற்கு ஒன்பதாம் வீடான கன்னி மனையில்.*
உதயாதிபதி ஒன்பதாம் வீட்டுக்குச் செல்லும் போது *ஜாதகருக்கு இரண்டாவது திருமணத்தைப் பற்றிய கேள்வி* என்பது பிரசன்னம் காட்டுகிறது.
கன்னிமனை ஓர் உபய ராசி. அது இரட்டைப்படை ராசி என்பதால் இரண்டாவது திருமணத்தைக் கொடுக்கக்கூடியது என்றும் கொள்ளலாம்.
அப்படியானால் முதல் மனைவியின் நிலை என்ன?
அதற்கு பிரசன்னம் தரும் பதில்
முதல்தாரம் ஏழாம் வீட்டு அதிபதியைக் குறிக்கும்.
ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் எட்டில் மறைவு பெற்று இருக்கிறார்.இது
முதல் தாரம் வலுவிழந்த நிலையைக் குறிக்கிறது.
8ல் உள்ள சந்திரனால் முதல் தாரத்தால் பெருத்த அவமானம், நீடித்த துன்பம் ஏற்பட்டு பிரிவினையை ஜாதகர் சந்தித்திருக்கிறார். அதனை பன்னிரெண்டாம் வீட்டிலுள்ள புதன் உறுதிப்படுத்துகிறார். 12ஆம் வீடு பிரிவினையைச் சுட்டிக்காட்டும்.
எட்டாம் வீடு கோர்ட் கேஸ், வழக்கு நிலையைக் கொடுக்கும். அந்த இடம் சூரியனின் சிம்ம ராசி என்பதால் அரசால் வழக்கினை சந்தித்து ஒருவருக்கொருவர் பிரிவினையை சந்தித்து மணமுறிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இருவரும்
விவாகரத்தும் பெற்றுள்ளனர் என்பதை பிரசன்னம் தெளிவாக காட்டுகிறது.
போதுமா விளக்கம்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இனி ஆய்வுக்கு கொடுக்கப்பட்ட ஜாதகத்தைப் பாருங்கள்.
*இனி ஜாதகத்தைப் பார்ப்போம்.*
[20/08, 9:07 am] S.Shanmuganandam🤴: ஜாதகர் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ஐடி ஃபீல்டில் பணி செய்து கொண்டிருக்கிறார்.
இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர்.
ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் ஐந்தாம் வீட்டில் உச்ச நிலையில் இருக்கிறது.
வீடு கொடுத்த சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைவு பெற்று செவ்வாய் மற்றும் கேதுவுடன் இணைவு.
ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். அப்போதுதான் அவருக்கு வாழ்க்கை துணை நன்றாக இருக்கும்.
சுக்கிரன் + கேது இணைவு நிச்சயமாக திருமண வாழ்வில் மணமுறிவினை ஏற்படுத்தும்.
மேற்கண்ட இணைவுடன் செவ்வாயும் சேர்ந்து 6ஆமிடத்தில் உள்ளனர்.
ஆறாம் இடம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸைக் குறிக்கும்.
ராகு தசா/ புதன் புக்தி/ சுக்கிரன் அந்தரத்தில் திருமணம்.
12 ல் உள்ள ராகு தசாவில் கேது புத்தியில் ராகு அந்தரத்தில் இருவருக்கும் பிரிவினையைச் சந்திக்க வைத்தது.
8 ஆம் பாவத்தால் சிம்ம சூரியன் உச்சமானதால் சூரியன் அந்தரத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வைத்துவிட்டது.
தற்போது நடக்கும் ராகு தசா சூரியன் புக்தியினால் முழுமையாக விவாகரத்து செய்து கொண்டனர்.
7ஆம் அதிபதி ஜாமகிரகம் சந்திரன் 8ல் மறைந்ததும் பிறப்பு கால 8 ஆம் அதிபதி சூரியன் உச்சமாகி நிலையில் விரைவில் விவாகரத்து ஏற்படுத்தி விட்டது.
அதுமட்டுமின்றி பிறப்பு கால ஜாதகத்தில் 7ல் குரு உச்சம் பெற்று 11ஆம் வீட்டைக் பார்த்து பலப்படுத்தியதால் ஜாதகருக்கு மறுமண அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.
அதனை பிரசன்னத்தில் உதயத்தை நோக்கி வரும் ஜாமகிரக குரு சுட்டிக்காட்டி விட்டது.
என்ன சொல்வது *கோள்களின் கோலாட்டம்? வாழ்வில் கொண்டாட்டம்/திண்டாட்டம்*
*ஜாமக்கோளின்* *வண்ணக்கோலம்!!*
*என்னக்கோலம்*
[20/08, 9:22 am] S.Shanmuganandam🤴: வாழ்க்கை எனும் சதுரங்க விளையாட்டில் வெல்வது நாமா? அல்லது எதிரணியா? என்பது தான் முக்கியம்.
அந்த வகையில் இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு எதிரணியினர் சூரியன் சந்திரன் குரு (7,8,12ஆம் அதிபதிகள் ) வலுவாக இருக்கின்றனர்.அவர்கள் உச்சம்.
ஜாதகரின் நட்பு யோகர்கள்
வலுவிழந்துள்ளனர்.
சுக்கிரன்+செவ்வாய்+கேதுவின் பிடியில்
புதன் 8ஆமிடம் அதிபதி சூரியனோடு இணைவு.
லக்னம் மற்றும் குடும்பாதி சனி 12 ஆம் அதிபதியின் கட்டுபாட்டில்.
பின் எப்படி விளையாடி ஜெயிப்பது?
திருமண வாழ்வில் ஜாதகர் வெற்றி பெற முடியவில்லை.
*எதிரியின் கை ஓங்கி நின்றதால் முதல் இன்னிங்சில் அவுட். திருமணம் விவாகரத்து ஆனது.*
ஆனாலும் 2 வது இன்னிங்ஸ்ல் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளார்.
மறுமணம் 11ஆமிடம் குருவின் பார்வையால் வலுப்பெற்றுள்ளது.
*மறுமணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்*
@@@@@@@@@@@@@@@@
*ஆரவாரம் தொடரும்*
[20/08, 9:23 am] S.Shanmuganandam🤴: *பதில் அளித்தவர்களின் பதிவுகள்**
திரு. ஸ்ரீதர் fb*
[19/08, 11:11 am]
Sukran Srithar fb:
வணக்கம் 🙏 குருவே. நீங்கள் கொடுத்த ஜாதகம் கட்டம் அமைப்பு படி நான் பிறந்த தேதி நேரம் குறித்து பதில் அளித்துள்ளேன்.தவறு இருக்குமேயானால் சுட்டிக்காட்டவும்.
இந்த ஜாதகர் பிறந்த தேதி 14 ந்தேதி மே மாதம் 1991 ஆம் ஆண்டு இரவு 11.19 க்கு பொள்ளாச்சியில் பிறந்த ஆண் குழந்தை ஜாதகம்.இவர் பிறந்த ராசி ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் 4 ம் பாதம் .இவர் பிறந்த லக்கனம் கும்பம் லக்கினம்.கும்ப லக்கினம் சர லக்கினம் ஆகும்.இந்த சர லக்கினத்திற்கு 11 க்குடைய செவ்வாய் பாதகாதிபதி ஆக வருவார். மாரகால் ஆக 2 க்குடைய சனி மற்றும் 7 க்குடைய சந்திரன் வருவார் கள்.ரோகாதிபதியாக 6 க்குடைய புதன் வருகிறார்.அட்டமாதிபதி யாக சூரியன் வருகிறார்.விரையாதிபதி யாக குரு வருகிறார்.
இவருக்கு ஜனன கால பிறப்பு தசா சூரிய தசா 1 வருடம் 02 மாதம் 2 நாள்.
தற்போது ராகு தசா சூரிய புக்தி நடப்பில் உள்ளது.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கும் பொழுது லக்கினப்படியும்,ராசிப்படியும் திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் வரும் என காட்டுகிறது.நடக்கும் தசா புக்தி களும் அதற்கு துனையாக உள்ளன.
இவருக்கு ராகு தசா குரு புக்தி னா கு(2014 முதல் 2015) அந்தரத்தில் திருமணம் நடைபெற்றிருக்கும் வாய்ப்பு உண்டு. அந்த காலகட்டத்தில் கோச்சார கிரகம், மற்றும் தசா புக்தி திருமண த்திற்கு தசா புக்தி சாதகமாக இருந்து திருமணம் நடை பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.
இவருக்கு உறவு முறையில், காதல் திருமணம்,அறிந்த தெரிந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.
இவருக்கு ராகு தசா குரு புக்தி திருமணத்தை கொடுத்து அதற்கு பிறகு வரும் புக்தி கள் 6 ம் பாவகத்தை இயக்குவதால் ஏற்கனவே கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் இவருக்கு திருமண த்திற்கு பின் சங்கடங்கள், மன நிம்மதி கெடுதல் போன்றவை ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உண்டு. இதில் ஏதேனும் கணித்ததில் குறை இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி குருவே 🙏
[19/08, 2:38 pm] Sukran Srithar fb: குருவே தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். வேலை ப் பளு காரணமாக உடனடியாக பதில் தர இயலவில்லை.
லக்கினம் படி 7 க்குடைய சந்திரன் 5 ல் உச்சம். ராசிப்படி 5ம் அதிபதி புதனும் 7 க்குடைய செவ்வாயும் ராசிக்கு 2 ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பதால் கூறினேன் சார்.இதில் சந்திரன் சுக்ரன் வீட்டில் 5 வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் காதல் திருமணம் ஆக அதிக வாய்ப்பு உண்டு என கணித்தேன் தவறு இருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டவும் எங்கள் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் நன்றி 🙏 வணக்கம் குருவே
[19/08, 4:22 pm] Sukran Srithar fb: சார் நான் இப்போது தான் பயின்று வருகிறேன். புரிகிறது. 3,5,9,11 சம்பந்தம் பெற்றால் அறிந்த பெண் கிடைக்கும்.இதில் நான் கூறிய சமயத்தில் கோச்சார கிரக நிலைகள் காதலுக்கு சாதகமாக இருந்தது அதனால் கூறினேன்.உங்க விளக்கம் வரும் பொழுது இன்னும் எங்களுக்கு தெளிவு பிறக்கும் நாங்கள் மேலும் தவறு களை தெரியாதவற்றை தெரிந்து கொள்ள இது போன்ற போட்டி மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.எனக்கு தெரிந்தவரை பணிச்சுமை காரணமாக முடிந்தளவு கணித்துள்ளேன்.நன்றி குருவே 🙏
[20/08, 9:27 am] S.Shanmuganandam🤴: *சுக்கிரன் ரவீந்திரன்*
இந்த ஜாதகர் பிறந்து உள்ளது மகர லக்கனம் ரிஷப ராசி ஆகும் லக்னத்தில் ஆட்சி பெற்ற சனி அமர்ந்து 3 12 ஆதிபத்தியம் பெற்ற குருவின் பார்வையும் லக்கின பாதகாதிபதி செவ்வாயின் பார்வையும் பெற்றுள்ளார் சனியின் பார்வை மூன்றாம் இடம் வீரீய ஸ்தானத்திலும் களஸ்திர ஸ்தானம் பத்தாம் பாவம் ஆகிய வீடுகளில் மீது விழுந்துள்ளது ஏழாம் வீட்டில் குரு உச்சம் பெற்று குருவிற்கு வீடு கொடுத்த சந்திரனும் உச்சமாகி உள்ளார் சந்திரன் நின்ற வீட்டு அதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில்மறைந்து கேதுடனும் பாதகாதிபதி செவ்வாயுடனும் சேர்ந்துள்ளார் சூரியன் சுக்கிரன் இடைவெளி 42*பாகை அளவில் உள்ளது இந்த ஜாதகரின் சுகஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் ரோகாதிபதி புதனுடன் சேர்ந்து உச்சபலத்துடன் உள்ளார் இவ்வாறு அமைந்த கிரக அடைவுகள் இந்த ஜாதகருக்கு இதுவரையில் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் ராகு திசை சூரிய புத்தி சூரியன் அட்டமாதிபதி ஆவதால் அடுத்து வரக்கூடிய சந்திர புத்தி ஏழாம் அதிபதி புத்தி ஆவதால் ஜாதகருக்கு திருமணம் நடக்கும்
[20/08, 9:28 am] S.Shanmuganandam🤴: [🤴: *சுக்கிரன் Astro sri vidya*👇
[19/08, 8:27 pm] S.Shanmuganandam🤴: வணக்கம் குருஜி🙏. லக்னாதிபதி சனி +ராகு+ செவ்வாய் . அம்சத்திலும் நீசம் பெரும் இடத்தில்.
குரு பார்வை பலம்.
பிறந்தது சூரிய தசா.உயிர் கண்டத்தை தரும் அட்டமாதிபதி தசா. அவர் நான்கில் அமர்ந்துள்ளார். 4-6 பரிவர்த்தனை. தொடர்ந்து சிகிச்சை பெறும் நிலை. தன் சுகம் தாய் சுகம் கெடும்.
நரம்பு முதுகு இடுப்பு இதயம்
பிரச்சனை ஏற்பட்டு சீராகும். ஆயுள் உண்டு.
11 வயது முதல் 13 வயது வரை தன் உடலுக்கு அல்லது,தாய்க்கோ மீண்டும் பெரும் பாதிப்பை அனுபவித்து இருப்பார்.
இவருக்கு திருமணத்தடை உண்டு.
தற்போது ராகு தசா அவர் அட்டமாதிபதி சாரம் வாங்கி 12 ல் உள்ளார்.
அயன சயன சுகத்தை கெடுப்பார். தற்போது சூரிய புக்தி இருப்பதால்
உடல்நலம்வீடு வண்டி விரையம் ஏற்படும். 🙏
[20/08, 9:29 am] S.Shanmuganandam🤴:
*திரு யுவராஜா*
*மகர லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை-4ம் பாதத்தில் பிறந்த 33 வயதுடைய ஒரு ஜாதகரின் மணவாழ்வு குறித்த ஆய்வு*
*லக்னபடி 2,5,7,12ம் பாவகங்கள்*
*லக்னபடி* *இரண்டாம் அதிபதி* *சனி பகவான்* ஆட்சி பெற்று சுப கிரகமான உச்சம் பெற்ற குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் இருக்கிறார். குடும்பஸ்தனாதிபதி சனி பகவானை செவ்வாய் பார்த்தாலும் குரு பார்த்து அவரை பலப்படுத்துகிறார். இரண்டாம் வீட்டை யாரும் பார்க்கவில்லை. ஆக *லக்னபடி* *இரண்டாம் வீடு பலம்*
*லக்னத்திற்கு* *ஐந்தில்* ஏழாம் அதிபதி சந்திரன் உச்சம். அவர் அங்கே சுக்ல பட்ச பிரதமை திதி சந்திரனாக இருக்கிறார். ஐந்தாம் அதிபதி சுக்கிரன் ஆறில் மறைந்து செவ்வாய் கேதுவுடன் கூடியுள்ளார். ஐந்தாம் வீட்டை யாரும் பார்க்கவில்லை. புத்திர பேற்றிற்கு காரக கிரகம் நிஷ் பலம் மற்றும் சனி பகவானின் பார்வையிலும் பாகைமுறையில் செவ்வாய் கேது இணைவில் இருந்தாலும் அங்கே அவர் உச்சம் என்ற ஸ்தான பலம் பெறுகிறார். ஆக *லக்னபடி* *ஐந்தாம் பாவகம் வலு குறைந்து இருந்தாலும் காரக கிரகம் சற்று வலுவாக இருப்பதால் தாமத புத்திரம் உண்டு.*
*லக்னத்திற்கு 7ல்* சுப கிரகமான *குரு உச்சம்* . ஏழாம் அதிபதி சந்திரன் ஐந்தில் உச்சம். ஏழாம் வீட்டை சனி பகவான் பார்த்து சற்று பலவீனப்படுத்துகிறார். காரக கிரகம் சுக்கிரன் ஆறில் மறைந்து செவ்வாய் கேதுவுடன் இணைந்து உள்ளார். அவர் அங்கே மறைந்தாலும் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை மூலம் பலம் பெற்று இருப்பதால் சற்று வலுப்பெறுகிறார். இங்கே ஏழாம் அதிபதி வலுவாக இருந்து காரக கிரகம் ஆறில் மறைந்து சுப நிகழ்ச்சிகளுக்கு காரகத்திற்கான குரு சனி பகவான் பார்வையில் இருந்தாலும் அங்கே உச்சம் என்ற ஸ்தான பலம் பெறுவதால் *லக்னபடி* *ஏழாம் பாவகம் அப்படி ஒன்றும் கெடவில்லை. எனவே ஜாதகருக்கு தாமதமாக அமைந்தாலும் திருமணம் உண்டு.*
*லக்னத்திற்கு* *பனிரெண்டில்* *ராகு* . பனிரெண்டாம் அதிபதி உச்சம். அவர் சனி பகவான் பார்வையில். பனிரெண்டாம் வீட்டை செவ்வாய் பார்த்தாலும் சுக்கிரன் பார்த்து பலப்படுத்துகிறார். ஆக *பனிரெண்டாம் வீடு பாதிப்படையவில்லை.*
*ராசிப்படி 2,5,7 மற்றும் 12ம் பாவகங்கள்*
*ராசிப்படி* *இரண்டில்* *சுக்கிரன்* *செவ்வாய் கேது* . அங்கே செவ்வாய் கேது இருந்தாலும் சுக்கிரன் அங்கே அமர்ந்து அந்த வீட்டை பலப்படுத்துகிறார். ராசிக்கு இரண்டாம் வீட்டை யாரும் பார்க்கவில்லை. மேலும் இரண்டாம் அதிபதி பரிவர்த்தனை மூலம் பலம் பெற்றுள்ளார். *ராசிப்படி இரண்டாம் வீடு பலம்.*
*ராசிக்கு ஐந்தாம்* அதிபதி *புதன்* பரிவர்த்தனை மூலம் பலம் பெற்றுள்ளார். ராசிக்கு ஐந்தாம் வீட்டை செவ்வாய் பார்க்கிறார். ஆக *ராசிப்படி ஐந்தாம் வீடு அவ்வளவாக கெடவில்லை*
*ராசிக்கு* *ஏழாம்* அதிபதி *செவ்வாய்* கேது பிடியில் இருந்தாலும் அவர் சுக்கிரன் மற்றும் பாகைமுறையில் குருவோடு இணைந்து உள்ளார். எனவே அந்த கிரகணம் ரத்து. பரிவர்த்தனை மற்றும் வர்கோத்தமம் மூலம் பலம் பெற்றுள்ளார். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு மற்றும் சந்திரன் பார்க்கிறார்கள். ஆக *ராசிப்படி ஏழாம் வீடு பலம்* .
*ராசிக்கு* *பனிரெண்டில்* *சூரியன்* மற்றும் *புதன்* . பனிரெண்டாம் அதிபதி செவ்வாய் கேது பிடியில் இருந்தாலும் அவர் சுக்கிரன் மற்றும் பாகைமுறையில் குருவோடு இணைந்து உள்ளார். எனவே அந்த கிரகணம் ரத்து. பரிவர்த்தனை மற்றும் வர்கோத்தமம் மூலம் பலம் பெற்றுள்ளார். ராசிக்கு பனிரெண்டாம் வீட்டை யாரும் பார்க்கவில்லை. ஆக *ராசிப்படி பனிரெண்டாம் வீடு பலம்* .
ஆக இவரது கொடுப்பினையில் மணவாழ்வு மற்றும் புத்திர பேறு அமைவதில் தடை இல்லை. சற்று தாமதம் மட்டுமே என்று காட்டுகிறது.
ஆதிபத்திய ரீதியாக ஏழாம் அதிபதி ஐந்தில். காதல் திருமணம் அல்லது மனம் போல் மாங்கல்யம் அமையும். காரக கிரகம் ஆறில் மறைந்து செவ்வாய் மற்றும் கேது இணைவில் இருப்பதால் அந்த தசா புக்தி காலங்களில் மனைவியுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும் ஆதிபத்திய ரீதியாக 3,12ம் அதிபதி குரு 7ல் இருப்பதால் அந்த தசா புக்தி காலங்களில் மனைவியுடன் ஒரு சிறு பிரிவினை ஏற்படும். அல்லது மனைவியை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை உண்டாகும். அவர் தனது 12ம் வீட்டிற்கு எட்டில் மறைந்தாலும் கொடுப்பினையில் பிரிவினை என்பது உள்ளது.
எனவே இவர் துணையை தேர்ந்தெடுக்கும் போது வரும் களத்திரத்திற்கு மண வாழ்வில், சங்கடங்கள் மற்றும் பிரிவினைகள் ஏற்படுத்தக்கூடிய தசா புக்திகள் திருமணம் நடந்து குறைந்தது ஒரு 10 ஆண்டுகளுக்காவது வராமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது இவருக்கு ராகு தசா நடப்பில் உள்ளது அவர் குருவை போல் செயல்படுவார். சுக்கிரன் செவ்வாய் போல் செயல்படுவார் என்பதால் மண வாழ்வில் சங்கடங்கள் பிரிவினைகள் ஏற்படும் அமைப்பு உள்ளது. அடுத்த குரு தசாவும் மண வாழ்வில் சிறு பிரிவினை என்பதை காட்டுகிறது.
எனவே ஜாதகர் பொருத்தமான திருத்தமான துணையை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
நன்றி வணக்கம் 🙏
இவன்
தங்கள் மாணவன்
K. யுவராஜா
[20/08, 9:30 am] S.Shanmuganandam🤴:
பங்கேற்று பதில் அளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி,
வணக்கம்,🙏
என்றும் அன்புடன் *திருS.ஷண்முகானந்தம்M.A.B.Ed. Rtd.Hm.*
*பொள்ளாச்சி*
[20/08, 10:09 am] Sukran Yuvaraja: வணக்கம் குருவே 🙏🙏🙏
தங்களின் இந்த பயிற்சிகள் எங்களை போன்ற ஜோதிட மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் இந்த நற்பணி மென்மேலும் வளர வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களின் இந்த சிறந்த பணிக்கு என் சிரம் தாழ்த்தி எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் குருவே🙏🙏🙏
[20/08, 10:21 am] Sukran Lakshmi Gcc Job New: ஜாதகத்தை சிறப்பாய்வு செய்து பலன் தந்த அனைத்து குருமார்களும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நேற்று பட்டுக்கோட்டை பொது ஆவுடையார் கோயில் சென்று வந்தேன்.பௌர்ணமி திங்கள் விஷேசம் உள்ள தினம்.
கணவர் குழந்தைகள் கவனிப்பு, பூஜை பங்கேற்ப்பு, பின் இரவு முழுவதும் கண் விழித்தேன்..ஆதலால் என்னால் பங்கேற்க முடியவில்லை.
அடுத்த முறை நிச்சயம் எனது பங்கெடுப்பு இருக்கும் என்று கூறி விடை பெறுகிறேன்.
குருஜி ஷண்முகம் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள்🙏😊
[20/08, 11:04 am] Sukran Sri Vidhya Astro: 🙏
குருஜி வணக்கம். நீங்கள் தரும் பயிற்சிகள்
பயனுள்ளவைகளாக எங்களுக்கு உள்ளது.
நன்றி குருஜி🙏
[20/08, 11:12 am] Sukran Srithar fb: 🙏
குருவே சரணம். நீங்க தரும் பயிற்சிகள் பயனுள்ளதாகவும்,ஊக்கமளிக்கும் வகையில் எங்களுக்கு உள்ளது.நன்றி குருஜி💐🙏