*நீங்களும் உங்கள் லக்னமும்*
கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் வெயில் கொடுமையில் வியர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள்
வெயிலுக்கு இதமாக வரிசை அருகே கம்பி வேலிக்கு அருகே குளிர்பானம் தர்பூசனி துண்டு பழரசம் குளிர்பானம் என பல வியாபிரிகள் தங்கள் தொழிலில் மும்முரமாக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து உழைத்து கொண்டிருந்தனர்
தூரத்தில் ஒலி பெருக்கியில்
*வரிசையில் வாருங்கள் யாரிடமும் தரிசனத்திற்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டுமே செலுத்துங்கள் ....*
என்று பலமுறை இதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்
வாட்டசாட்டமான இருவர் மற்றும் அவருடன் இரண்டு பெண்களும் அனைவரையும் தள்ளிக்கொண்டு சென்றார்கள் ஒரு பக்தரின் காலை மிதித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே கொன்றுவிடுவதை போல் பார்த்து கொண்டிருந்தார்கள்
இங்க எதுக்கு வீன் விஷயங்களை பார்ப்பது கேட்பது என என்னுடன் வந்த என் ஜோதிட ஆசிரியர் இப்படி விளக்கினார்
எல்லா இடத்திலும் ஜோதிடம் உள்ளது நல்லா கவணிச்சிக்க தம்பி
ஒவ்வொருவர் ரியாக்ஷனையும் உத்து பாருப்பா எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க
மிதித்தவனை பார்த்து
*தம்பி வரிசையில் வாங்க பின்னாடி போங்க என்று சிம்ம கர்ஜனை செய்தாரே அவருக்கு லக்னத்தில் சூரியன் இருக்கும்*
*யோவ் அறிவில்லை குழந்தைகள் இருப்பது கண்ணில் தெரியல என கை ஓங்கினாரே அவர் லக்னத்தில் செவ்வாய் இருக்கும்*
*தம்பி பார்த்துபோப்பா வயசானவங்க இருக்காங்க இல்ல என வாஞ்சையாக பேசினாங்களே அவருக்கு லக்னத்தில் சந்திரன் இருக்கும்*
*யோவ் என்ன கொழுப்பா என கேட்டுவிட்டு மிதித்தவன் முறைத்ததும் அண்ணே உங்களை இல்ல இங்க பேசறேன் என சமாளித்தாரே அவருக்கு லக்னத்தில் புதன் இருக்கும்*
*போகட்டும் விடுங்கப்பா அவருக்கு என்ன அவசரமோ என்றாரே அவருக்கு லக்னத்தில் குரு இருக்கும்*
*இந்த அமளி துமளியிலும் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டு முன்னால் நின்ற பெண்ணை பார்த்துக்கொண்டே ஸ்டைலாக நிக்கறாரே அவர் லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்*
*எங்க வந்தாலும் இவிங்க தொந்தரவூ தாங்கலையே என மிக மெல்லிய குரலில் தனக்கு தானே பேசி நொந்து கொள்கிறாரே அவருக்கு லக்னத்தில் சனி இருக்கும்*
*டேய் யார்டா அது நாங்கள்ளாம் மனுஷனில்லையா எல்லாரும் சேர்ந்து தள்ளுங்க அவனை என கூட்டம் சேக்கிறாரே அவர் லக்னத்தில் ராகு இருக்கும்*
*சரி விடுங்கப்பா என்னத்த கேட்டு என்னத்த செய்றது நம்ம நேரம் சரியில்லை என வேதாந்தம் பேசறாரே அவருக்கு லக்னத்தில் கேது இருக்கும்*
எனக்கு நிதானமாக எதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இரூந்தது நிதானமா யோசிக்கனும் என நினைத்து புன்னகைத்தேன்
நல்ல சுவாரசியமான விதத்தில் சொன்ன நம்ம ஜோதிட ஆசிரியருடன் கோவிலுக்கு வந்தது எவ்வளவு நல்லதாக போயிற்று என மனதில் சந்தோஷம்
சிறுகதை ஆக்கம்
சுந்தர் சித்தூர் 🙏