Sunday, June 30, 2024

திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!

 இனி உங்கள் திருமண பத்திரிக்கையை திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பலாம்!!




திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், 

திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து, ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.

நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .

திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி

To

Sri Lord Venkateswara swamy,

The Executive Officer

TTD Administrative Building

K.T.Road

Tirupati – 517 501  Andhra Pradesh


Saturday, June 22, 2024

திருவேங்கடவன் தரிசனமும் நவகோள்களின் செயல்பாடுகளும்

 திருவேங்கடவன் தரிசனமும் நவகோள்களின் செயல்பாடுகளும் 



திருப்பதி சென்று முதலில் சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து,



ராகு எனும் மலை மீது ஏறி திருமலை வந்து,


கேது எனும் முடியை பரிகாரமாக தந்து,


சனி எனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று,


செவ்வாய் எனும் காவலரை கடந்து,


குரு எனும் பக்தி மார்க்கம் கொண்டு, உச்ச புதனான பெருமாளை தரிசித்து, சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று வெளியே வந்தால் கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு...☺️


இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில்,

 *சந்திரன் ராகுவுக்கு எதிரி ஆகவே தாயார் திருப்பதியில் முதல் தரிசனம்,* 


பின்பு மனோ பலத்துடன் *ராகு எனும் மலை ஏறினால்,* 


 *ராகுவின் எதிர்காரகமான கேதுவை நீச்ச படுத்த வேண்டும். அதாவது விரக்தி, தடை, பூர்வ ஜென்ம கர்மா போன்ற காரகங்களை நீச்ச படுத்த கேது எனும் முடியை பரிகாரமாக கொடுக்கிறோம்* ,


பின்பு கர்மா எனும் கூட்டத்துடன் பெருமாள் எவ்வளவு நேரம் காக்க வைப்பார் என்று தெரியாமல் (ஏனெனில் கர்மா தெரியாது) நிற்கிறோம்.


அப்படி நிற்கையில் *நமது கர்மாவை செவ்வாயை வைத்து சோதித்து பின்பு குரு எனும் பக்தி மேலோங்கி செல்கையில்* , புத்தியை தெளிய வைக்கும் உச்ச *புதன் எனும் பெருமாளின் தரிசனம் கிடைக்கும்,*

மனோ பலம் புத்தி பலம் சேர்ந்து *சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று*,

பின்பு அவரின் ஆசியுடன் சுக்கிரனை சிறிது பணம் உண்டியலில் காணிக்கையாக போட்டுவிட்டு மனம் நிறைந்து நிற்கும் போது,


நம் பசியாற வரும் அன்னம் எனும் நவகிரக கலவையை உண்ட பின்பு, கிடைக்கும் *சுக்கிரன்எனும்லட்டு.* 

அதுவே *லட்சுமி கடாக்ஷம்...*


 *ஓம் நமோ வேங்கடசாய..* 🙏🙇🏻

Monday, June 17, 2024

மூகூர்த்தம் குறிக்கும் போது கவனிக்க வேண்டியவை

 திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள் 





1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)


 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 


3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. 


4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் 


5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது


 6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். 


7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. 


8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.


 9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. 


10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 


11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது. -


 இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.#ஓம் முருகா